தோழிகளே
எனக்கு மண்டை பிய்த்துக்கொள்கிறது. micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள் வாங்க வேண்டும்... என்ன material வாங்க?
இது நாள் வரை பிளாஸ்டிக் உபயோகித்தோம் - பிறகு தான் தெரிந்தது அது நல்லதில்லை என்று. செராமிக், pyrex மிகவும் கனமாக இருக்கிறது, கழுவும் போது வழுக்குகிறது. கை வலிக்கிறது. ஏற்கனவே உடைத்தும் இருக்கிறேன்... எங்கள் வீட்டில் டிஷ் வாஷேர் இல்லை, நானே தான் கழுவ வேண்டும்....
கனமில்லாமல், உடையக்கூடியதாகவும் இல்லாமல் வேண்டும்....
முடிந்தால் என்ன ப்ராண்ட், என்ன ஸ்டோர் என்றும் சொல்லுங்கள்...
micro wave safe
ஹாய் சந்தனா, வேறு வழியே இல்லை செராமிக், கண்ணாடி பாத்திரங்கள்தான் யூஸ் பண்ண வேண்டும். ப்ளாஸ்டிக் யூஸ் பண்ணவே கூடாது.நான் ஐடியா சொல்லட்டா, வெயிட் அதிகமான பாத்திரங்களை ஹாண்டில் பண்ணும் பொருப்பை உங்க வீட்டு ஐயாவிடம் குடுத்து விடனும். (ஹி.ஹி..நான் இப்படித்தான் செய்வேன். அப்பத்தானே உடைத்தாலும் பழி நம் தலையில் விழாது) :)அய்யோ முறைக்காதீங்க:)
இந்தியா என்றால் அங்கு கிடைக்கும் மண் சட்டி, மண் தட்டுகளை பயன் படுத்தலாம் என சொல்ல கேட்டுள்ளேன். ஆனால் நான் பயன் படுத்தியது இல்லை. இங்க அமெரிக்காவுக்கு ஒரு வழி சொல்லுங்க என்கிறீர்களா:) Bed,Bath & Beyond கடைக்கு போய் பாருங்கள் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.
நன்றி வானதி
நன்றி வானதி !! அப்ப உங்க வீட்டு அய்யா ரொம்ப பொறுமைசாலி போல !! எங்க வீட்ல ரொம்ப சுருக்கமா சொல்லிடுவார் - முடிஞ்சதை செய், அவ்வளவு தான்... நான்தான் என் மண்டைய உடைச்சிக்கணும்... இந்த ஞாயிறு வால்மார்ட் போறோம், அங்க இல்லன்னா அடுத்து நீங்க சொன்ன பெட் பாத் கூட்டிட்டு போகச் சொல்லறேன்..
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
சந்தனா
நானும் பைரக்ஸ், மாரினக்ஸ் வச்சுருக்கேன். ஆனால் அதிகம் யூஸ் பண்ணுவது செராமிக். அப்புறம் வெயிட் இல்லாத சைனாக்ளாஸ். இது விலையும் ரொம்ப கம்மி. அடிக்கடி யூஸ்பண்ணுவதற்கு (10 நிமிடம் வரை வைப்பதற்கு) இந்த மாதிரி சைனா க்ளாஸ் ஐயிட்டம் யூஸ் பண்ணலாம். ஆனால் அதிக நேரம் வைப்பதற்கு பைரக்ஸ், மாரினக்ஸ் அந்த மாதிரி மைக்ரோவேவ் ஸ்பெசல்கேர் யூஸ் பண்ணுவதுதான் சரி.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
ஹாய் தோழிகளே,
ஹாய் தோழிகளே,
microwave oven,(convection)எந்த கம்பெனி நல்லா இருக்கும் என சொளுன்களே. ...please...
அன்புடன்
ஸ்ரீ
micro wave
செராமிக் யூஸ் பண்ணவே கூடாது.
By
Subhashini madhankumar
corelle
நன்றி தனிஷா.. மரிநேக்ஸ் பத்தி நீங்க சொன்ன பின்னாடி தான் பார்த்தேன்... இதுவும் glass ware தான் போல..
நான் இன்னுமொன்னு கேள்விப்பட்டேன் - corelle. இது பத்தி யாருக்காச்சும் தெரியுமா?
சுபாஷினி
ஏன் செராமிக் உபயோகிக்கக்கூடாதுன்னு சொல்லறீங்க? மைக்ரோ வேவ் safe ஆ இருந்தாலுமா? any reference?
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
கிளாஸ் வேர்
சமீபத்தில் மைக்ரோவேவ் கிளாஸ் சென்றேன்.செராமிக் உபயோகிகலாம் என்றார்கள்.மேலு ரீஹீட் செய்வதற்கு பிளாஸ்டிக் உபகரணங்களை உபயோகிக்கலாம் என்றார்கள்.ஏன் செராமிக் உபயோகிக்க கூடாது என்று தெரிய வில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.கொரெல்லே,கோனிங்வேர் போன்ற கிளாஸ் வேர் மிகவும் இலேசனாது.உபயோகிக்க எளிதானது.விரைவில் உடையாது விலையும் அதற்கு தகுந்தார்ப்போல் இருக்கும்.சபீபத்தில் 6 டின்னர் பிளேட் 2000 ரூபாய்க்கு அதுவும் சேலில் விற்றார்கள்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
நன்றி
நன்றி ஸாதிகா. நான் நேற்று தான் பிளாஸ்டிக் பற்றி படித்தேன் - நிறைய பேர் வேண்டாமென்று தான் சொல்லுகிறார்கள்... பிளாஸ்டிக் லேயே பல வகைகள் போலும்.. 5 ஆம் நம்பர் உபயோகிக்கலாம் என்கிறார்கள். இது பாத்திரத்தின் அடியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மற்றுமொன்று, கண்டிப்பாக frozen food உடன் வரும் பிளாஸ்டிக் வேண்டவே வேண்டாம் என்கிறார்கள் - காரணம் இது ஒரு முறை மட்டுமே உபயோகிப்பதர்க்குத்தானாம். இது reusable அல்ல என்கிறார்கள்...
corelle லேசானதா, அப்படியென்றால் மகிழ்ச்சி - ஆனால் ஒரே ஒரு சந்தேகம் - இதை ஸ்டோர் செய்வதற்கும் உபயோகிக்கலாமா? (அப்படியே பிரிட்ஜ் ல வச்சிட்டு, அதையே சூடும் பண்ணிக்கலாமில்ல !!)
தனிஷா, மற்றுமொன்று படித்தேன் - இந்த சீனா பாத்திரங்களில் lead இருப்பதாகவும் சிலர் எழுதியிருந்தார்கள்.... நீங்கள் இதையெல்லாம் பார்த்து தான் வாங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
corelle
சந்தனா, corelle என்னிடம் உள்ளது. (இதை ஏன் முன்பே சொல்லலே என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்தானே:)) ஏனெனில் இதை நான் dinnerware போல்தான் உபயோகிக்கிறேன். dinner plate, serving bowl இப்படியாக. நாம் இந்திய குக்கிங் முறையில் அவற்றை சமையலுக்கு பயன் படுத்தினால், நாளடைவில் நிறம் மங்கி, ஸ்க்ராட்ச் எல்லாம் விழும். அதை டின்னர்வேர் போல் பயன் படுத்தினால்தான் அழகாக இருக்கும். வேண்டுமென்றால் எப்போதாவது ரி ஹீட் செய்ய உபயோகிக்கலாம். விலை அதிகமானாலும் தரமான பாத்திரங்களையே மைக்ரோவேவிற்கு பயன் படுத்த வேண்டும்.( சில made இன் சைனா என்று சீப்பாக கிடைக்கும், அவற்றுக்கு நோ தான்.ஏனெனில் இப்பொதெல்லாம் எந்த சீன பொருட்களை எடுத்தாலும் அதில் லெட் இருக்கு, இதில் லெட் இருக்கு என்கிறார்கள். எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்?)
Shree, எப்போதும் name brand வாங்கி விட்டால் எந்த பரச்சனையும் இல்லையே. எனக்கு மற்றபடி உங்கள் ஊரில் எந்த ப்ராண்ட் விற்கும் என்று தெரியவில்லையே. சிங்கப்பூர் தோழிகள் யாராவது படித்தால் உதவுவார்கள்.
hai vinni,
hai,
thanks vinni..thanks for ur reply.....here also available Panasonic,LG,Sharp,Sony.....all brands available...but i dont know,which one is better?thats why i ask vinni.anyway..thanks....vinni..
from
sri