micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள்

தோழிகளே

எனக்கு மண்டை பிய்த்துக்கொள்கிறது. micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள் வாங்க வேண்டும்... என்ன material வாங்க?

இது நாள் வரை பிளாஸ்டிக் உபயோகித்தோம் - பிறகு தான் தெரிந்தது அது நல்லதில்லை என்று. செராமிக், pyrex மிகவும் கனமாக இருக்கிறது, கழுவும் போது வழுக்குகிறது. கை வலிக்கிறது. ஏற்கனவே உடைத்தும் இருக்கிறேன்... எங்கள் வீட்டில் டிஷ் வாஷேர் இல்லை, நானே தான் கழுவ வேண்டும்....

கனமில்லாமல், உடையக்கூடியதாகவும் இல்லாமல் வேண்டும்....

முடிந்தால் என்ன ப்ராண்ட், என்ன ஸ்டோர் என்றும் சொல்லுங்கள்...

மிக்க நன்றி வானதி - அப்படியானால் இதில் இரண்டு அதில் இரண்டு என corelle, pyrex ரெண்டையும் வாங்கி வருகிறேன் - தேவைக்கேற்ப உபயோகிக்கலாம் அல்லவா...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

தகவல் சொன்ன தோழிகள் அனைவருக்கும் நன்றி..

வால்மார்ட் சென்று பார்த்தோம். corelle பாத்திரங்கள் பெரும்பாலும் dinner ware ஆகவே இருந்தன. மூடியில்லாமல். ஆனால் அதிக கனமில்லாமல் இருந்தன.

நான் எதிர்பார்த்தது மூடிகளுடன் கூடிய storage cum cooking / reheating பாத்திரங்கள் - எனவே pyrex வாங்கி வந்தோம். சற்று கவனமாகத்தான் உபயோகிக்க வேண்டும். அவருக்கு டிபன் பாக்ஸ் உட்பட இப்போ எல்லாமே இதில் தான்...

மறுபடியும் நன்றி !!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா, நானே உங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்தேன். நீங்களே அப்டேட் செய்து விட்டீர்கள். படிக்கும் யாருக்காவது உபயோகமாக இருக்கும்.

Shree LG, GE போன்ற பாப்புலர் ப்ராண்டுகளை நம்பி வாங்கலாம். மற்றபடி உங்களுக்கு எந்த மாடல்/ function தேவைப்படும் என்பதை கடையில் நன்கு விளக்கி கேட்டு வாங்கவும்.

வானதி - அதெப்படி - "இது மற்றவர்களுக்கும் உதவும் என்பதால் தான் எழுதினேன்".... இப்படி ஒரு வரியையும் டைப் செய்திருந்தேன், ஆனால் பின்பு எடுத்து விட்டேன் - மக்கள் எல்லோரும் விவரமறிந்தவர்கள் தான், என்னை போல யாராச்சும் ஒரு வருஷமா பிளாஸ்டிக் லயே சமைப்பார்களா, எனக்குத்தான் தெரியவில்லை என்று !!

அதுமட்டுமில்லை வேறொரு அதிசயமும் நடந்தது - நான் மெதுவாக தூக்கி ரொம்ப கவனமா கழுவுவதை பார்த்து எங்காள் மனசு வந்து சொன்னார் - உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு - நான் கழுவித் தரேன்னு !!!! ஹி ஹி நீங்களும் இப்படித்தான் படம் போட்டு அவரை கழுவ வைத்திருப்பீர்கள் போல :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

எப்படி கரைக்டா கண்டு பிடிச்சுட்டீங்க:) நமக்கு அது கை வந்த கலை:-)

எனக்கும் இங்க வந்த புதுசில் ஒன்னுமே தெரியாது. நானும் ப்ளாஸ்டிக்ல எல்லாம் சமைச்சு இருக்கேனே, ஒரு காலத்தில்:) நம்மள மாதிரி அட்லீஸ்ட் ஒருத்தராவது இருப்பாங்கன்னு நினைக்கிறேன்:) அதனால் நிச்சயம் யாருக்காவது பயன்படும்.

ஓடி போய் நானும் உங்கள மாதிரி வாங்கி வந்திட்டேன்..நானும் பிளாஸ்டிக் தான் யூஸ் பண்ணினேன்..ரொம்ப தேங்ஸ் உங்க 2பேருக்கும்..கழுவுறது கஷ்டமா இருக்கானு அவர தான் கேட்க்கனும் :-)

அடக்கடவுளே சந்தனா,வானதி,தாமரை உங்க வீட்டில மைக்ரோவேவ் ஓவனில் யூஸ் பண்ற பாத்திரங்கL மட்டும்தான் கழுவித்தராங்களா? எங்க வீடு மாதிரி இல்லபோல‌ ஐயோ பாவம் (நீங்கெல்லாம்தான்) :)

தாமரை - ஆக எங்களைப்போல ஒருவராச்சும் இருக்காங்கன்னு நிரூபிச்சிட்டீங்க... நன்றி... வாங்க வந்து கணவர்களை பாத்திரம் கழுவ வைக்கும் மனைவிகள் கூட்டணில சேர்ந்துக்கோங்க, உங்களோட டிப்ஸ்களையும் (மற்ற வேலைகளை செய்ய வைக்க) சொல்லுங்க !!

கவி நீங்க சொல்லுறது நம்புற மாதிரி இல்லையே - அண்ணாவைத்தான் கேட்கணும், அப்படியான்னு....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

உங்க கூட்டணில நான் எப்பவோ(8வருஷம் முன்னால) சேர்ந்திட்டேன்பா..டிப்ஸ்னா கிலோ எவ்வளவுனு கேட்பேன்பா நான்...நீங்க யாராவது நல்ல டிப்ஸா சொல்லுங்க,இருந்தாலும் நீங்க இவ்ளோ கேட்க்கிறதால சொல்றேன்..ஹஸ் ஏதாவது ஹெல்ப் பண்ணும்போது நான் என்னோட வேலையெல்லம் நீங்களே பார்க்கிறீங்க என் மேல உங்களுக்கு இவ்ளோ அன்பானு கேட்டுவிடுவேன்..நல்லா மாட்டினார் போங்க..1.உன்மேல அன்பு இல்லனு அவரால சொல்ல முடியாது
2.பண்ணும் வேலைய பாதில விடமுடியாது
3.நாளைக்கு பண்ண சொல்லும் போது மாட்டேனு சொன்னா உங்க அன்பு அவ்ளோதானானு கேட்டு செய்ய வைக்கலாம்..
இது போல நிறைய டைமிங்கா சொல்லிருவேன்..பாவம் அவரு..இப்படி உசுப்பேத்தியே உடம்ப ரணகள மாக்கிட்டனு சொல்லி சிரிப்பார் அடிக்கடி..

சந்தனா டிப்ஸ் ஓகே வா?(இதோ பக்கதுல இருந்து என்ன எழுதுறேனு பார்த்துட்டு தான் இருக்கார்) எல்லாரும் என்ன துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ள நான் கிளம்புறேன்பா :-)

இந்த வகை அவனுக்கு மைக்ரோவேவ் புரூப் என்று சில பாத்திரங்கள் வருகின்றது, கொஞ்சம் விலைதான் இருந்தாலும் பயப்படாமல் வைக்கலாம்

anpudan athee

மேலும் சில பதிவுகள்