micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள்

தோழிகளே

எனக்கு மண்டை பிய்த்துக்கொள்கிறது. micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள் வாங்க வேண்டும்... என்ன material வாங்க?

இது நாள் வரை பிளாஸ்டிக் உபயோகித்தோம் - பிறகு தான் தெரிந்தது அது நல்லதில்லை என்று. செராமிக், pyrex மிகவும் கனமாக இருக்கிறது, கழுவும் போது வழுக்குகிறது. கை வலிக்கிறது. ஏற்கனவே உடைத்தும் இருக்கிறேன்... எங்கள் வீட்டில் டிஷ் வாஷேர் இல்லை, நானே தான் கழுவ வேண்டும்....

கனமில்லாமல், உடையக்கூடியதாகவும் இல்லாமல் வேண்டும்....

முடிந்தால் என்ன ப்ராண்ட், என்ன ஸ்டோர் என்றும் சொல்லுங்கள்...

\\கவி நீங்க சொல்லுறது நம்புற மாதிரி இல்லையே - அண்ணாவைத்தான் கேட்கணும், அப்படியான்னு.... //

அப்படியா!! சந்தனா, இது நம்பற மாதிரி இருக்கானு பாருங்க,அவர்கிட்ட வேலை செய்ய சொன்னால் 2 நாள் செய்து பார்த்துட்டு என்னை கேட்க்காமலையே அவருக்கு ஒரு அசிஸ்டெண்ட், ஒரு வேலக்காரம்மாவை அப்பாயின்மெட்ன் பன்னியிருக்காரு (பாத்திரம் கழுவத்தான்) சந்தனா. இனி என்ன செய்ய சொல்லலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்:)

மைக்ரோவேவில் மண் பாத்திரங்கள் யூஸ் பண்ணலாமா?? அப்புறம் அலுமினியம் யூஸ் பண்ணலாமா? (கேக் மோல்ட் இந்த மாதிரி சாமான்கள்)

புதுசா வாங்கின மண் பாத்திரத்தை எப்படி கழுவி யூஸ் பண்றது?

மைக்ரோவேவில் மண் பாத்திரம் யூஸ்பண்ணலாமானு தெரியல.ஆனால் அலுமினியம் யூஸ்பண்ணவே கூடாது.அதுல கண்ணாடி,பீங்கான் தவிர வேற எதுவும் யூஸ் பண்ணாதீங்க.

புதுசா வாங்கின மண்பாத்திரத்தை 3 நாள் சாதம் வடித்த கஞ்சிதண்ணீயில் ஊறவைத்து கழுவி,மத்தால் போட்டு தேய்க்கவும்.கழுவிட்டு மறுபடியும் கஞ்சித்தண்ணீல 1 நாள் ஊறவைத்து மத்தால் தேய்த்துக் கழுவினால் மண் போய்விடும்.பிறகு உபயோகிக்கலாம்.இப்படித்தான் எங்கம்மா செய்வாங்க.

சரி கவி நீங்க இவ்வளவு சொல்வதால், எவிடெண்சே இல்லாட்டியும் உங்களையும் எங்க கட்சில சேர்த்துக்கிறோம் (அதான் க பா க வை ம கட்சி)

தாமரை, இந்த பாட்ச்சா எல்லாம் எங்க வீட்டில பலிக்காது... உன் சாப்பாட சாப்பிடுறதே உன் மேல இருக்க அன்பால தான், அதுலேயே என் அன்பு எல்லாம் தீர்த்து போச்சு, அதுக்கும்மேல என்னால அன்பு காட்ட முடியாதுன்னு சொன்ன ஆளு இது !!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

எங்க ஆளு அப்படி சொல்ல முடியாது,,ஏன்னா 11th ல இருந்து ஐயாவுக்கு ஹாஸ்டல்,மேன்சன் சாப்பாடு தான்..சொந்த சமையல்னா(சுத்தமா சமைக்க வராது) அது எப்படி இருக்கும்னே தெரியாது..அதுனால நான் எப்படி சமைச்சலும் தேவாமிர்தம் தான்...இருந்தாலும் புளிகுழம்பு பண்ணிய போது சாம்பார் நல்லா இருக்குனு சொல்வார் அப்போது மட்டும் லைட்டா காதுல புகைவரும் கோபத்துல...

கவி, நம்ம செல்வி அக்காதான் (செந்தமிழ் செல்வி) மைக்ரோவேவில் மண் சட்டியை யூஸ் பண்ணலாம் என்று சொன்னாங்க. அவங்க யாரும் சமைக்கலாமில் ஒரு குறிப்பை (சேலம் மட்டன் குழம்பு) செய்தே காண்பித்து இருக்காங்க. உங்களுக்காக தேடி எடுத்தேன். அந்த லின்க் இதுதான்:

http://www.arusuvai.com/tamil/node/7733

hai friends, i need ur help.how to type in tamil.pls tel me friends.i am new join.

radhikasuresh

ஹாய் ராதிகா இப்பதான் உங்களை பார்த்துட்டு வாரேன் ஹி ஹி நான் செல்வி சீரியலை சொன்னேன்...எப்படி இருக்கீங்க தமிழில் டைப் செய்யனும்னா அருசுவையில் கீழே எழுத்துதவி என இருக்கும் அதை கிளிக் செய்து காப்பி பன்னி பேஸ்ட் பண்ணுங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இவ்வளவு லேட்டா யாருமே நன்றி சொல்லியிருக்கமாட்டாங்கனு நினைக்கிறேன்,ரெண்டு பேரும் என்னை தயை கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்:)

நன்றி வானதி எனக்காக லின்க் தேடி எடுத்து கொடுத்தத‌ற்கு, நான் ஏற்கனவே பர்த்த ஞாபகம் இப்பதான் வந்தது,செல்விமா இதில் மண் பாத்திரம் வாங்கினால் எப்படி கிளீன் செய்து யூஸ் பன்றதுனும்னு சொல்லியிருக்காங்க.
கடைசியா ஒன்னு கேட்கிறேன் எப்படி இருக்கீங்க:)

மேனகா எப்படி இருக்கீங்க ஷிவானி தவழ்றாங்களா? அவங்க எழுந்து நடக்காத போதே பிஸியா இருக்கீங்க, இன்னும் அவங்க எழுந்து நடந்துட்டாங்கன்னா பிஸியோ பிஸி ஆயிடுவீங்க போல.நன்றி மேனகா எப்படி மண்பாத்திரத்தை சுத்தப்படுத்தி க்ளீன் பண்டதுனு சொன்னதுக்கு,என் வீட்டுக்காரருக்கு ஃப்ரீயா மண் பாத்திரம் கிடைக்கும் அதனால 2,3 வாங்கிட்டு வந்தார்,வாங்கிட்டு வந்தது அப்படியே இருக்கும் இனிதான் கிளீன் பண்ணி யூஸ் பன்னனும். மைக்ரோவேவில் அலுமினியம் யூஸ் பன்னக்கூடாதா? அப்ப அவனில் யூஸ் பன்னலாமா?

நன்றி சந்தனா என்னை உங்க கட்சில ஒரு வழியா சேர்த்துகிட்டதுக்கு.
சரி எத்தனை தொகுதி தருவீங்க?? அப்படியே பெரிய சூட்கேஸ் இல்லைனாலும் கொஞ்சம் சின்ன சூட்கேஸாவது தாங்க.

மர்ழி உங்களை பார்த்து பயந்து ஓடின பொண்ணு (ராதிகா) இன்னும் வரவேயில்லை:)

hai,
yester day i bought the oven with convection model in Panasanic Company..thanks for ur valuable reply...if u know anyting about the oven tips means...pls share with us..like the New oven Users...

Thanks Vinni.....

from
shree

மேலும் சில பதிவுகள்