micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள்

தோழிகளே

எனக்கு மண்டை பிய்த்துக்கொள்கிறது. micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள் வாங்க வேண்டும்... என்ன material வாங்க?

இது நாள் வரை பிளாஸ்டிக் உபயோகித்தோம் - பிறகு தான் தெரிந்தது அது நல்லதில்லை என்று. செராமிக், pyrex மிகவும் கனமாக இருக்கிறது, கழுவும் போது வழுக்குகிறது. கை வலிக்கிறது. ஏற்கனவே உடைத்தும் இருக்கிறேன்... எங்கள் வீட்டில் டிஷ் வாஷேர் இல்லை, நானே தான் கழுவ வேண்டும்....

கனமில்லாமல், உடையக்கூடியதாகவும் இல்லாமல் வேண்டும்....

முடிந்தால் என்ன ப்ராண்ட், என்ன ஸ்டோர் என்றும் சொல்லுங்கள்...

hai,
yester day i bought the oven with convection model in Panasanic Company..thanks for ur valuable reply...if u know anyting about the oven tips means...pls share with us..like the New oven Users...

Thanks Vinni.....

from
shree

ஹாய் தோழிகளே,

யாருகாவது தெரியுமா??..சப்பாத்தி, பரோடா எப்படி micro wave ஓவன் இல செய்வது, அதாவது எப்படி heat செய்வது.....ப்ளீஸ் ....

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் ஸ்ரீ உங்க முந்தைய பதிவையே இப்போதான் பார்த்தேன். புதுசா அவன் வாங்கியாச்சா, நானும் நினைத்துக் கொண்டு இருந்தேன். வாழ்த்துக்கள் & ஹேப்பி குக்கிங்.

எனக்கு தெரிஞ்ச டிப்ஸ சொல்லலாமுன்னு நினைச்சேன். அதற்கு முன் இந்த லின்க் கண்ணில் பட்டது. அதில் நம்ம ஃப்ரென்ட்ஸ் மிகவும் பயனுள்ள பல டிப்ஸ்ஸை குடுத்து இருக்கிறார்கள். படித்து பாருங்கள்.

மேலும் அவனை கிளீன் செய்ய மைல்டான சோப் கொண்டு துடைத்து விட்டு பிறகு துணியால் துடைத்து விடலாம்.

அந்த லிங்க்:

http://www.arusuvai.com/tamil/forum/no/9930?from=0&comments_per_page=10

நன்றி வானதி... நெறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் friend,

என்னகு ரொம்ப சந்தோசமா இருக்கு friend... இந்த பதில் என் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...thanks friend.....

சிங்கப்பூர் வந்தால் கண்டிப்பாக எங்க வீட்டிற்கு வரவும்....

அன்புடன்
ஸ்ரீ

ஆமாம் சந்தனா, அந்த த்ரெட் ரொம்ப யூஸ்ஃபுலா இருக்கு இல்ல.

ஸ்ரீ, உங்களுக்கும் அந்த த்ரெட் பயனளிக்கும் என அறிந்து மிக்க மகிழ்ச்சி. அதில் பல நல்ல டிப்ஸ்ஸை நம் தோழிகள் குடுத்து உள்ளனர். வீட்டிற்கு அன்போடு என்னை கூப்பிட்டதற்கு மிக்க நன்றி. நாங்க வந்து டேரா போட்டுடுவோமில்ல:) நீங்களும் Usa பக்கம் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க.

ஹாய் ஹாய் ..

எனக்கு ஒரு நல்ல மீடியம் சைஸ் மூடியுடன் கூடிய கடாய் வாங்கணும் - சமைக்க, எண்ணையில் பொரிக்க இப்படி நம்ம ஸ்டைல் சமையல் பண்ண.. ஒரு பீஸ் மட்டுந்தான் தேவை..

நான் ஒரு அலுமினியம் கடாய் பார்த்தேன் ஆன்லைன் ல - எனக்கு ஒரு சந்தேகம்.. அலுமினியம் வாங்கலாமா??

இல்லை இந்த ஸ்டைன் லஸ் ஸ்டீல், காப்பர் பாட்டம் இந்த மாதிரி வாங்கறது நல்லதா??

இல்லைனா நீங்க உபயோகிக்கற அல்லது இங்க கிடைக்க கூடிய பிராண்ட் ஏதும் பரிந்துரைக்க முடியுமா??

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா இதை(இரும்பு கடாய் பற்றி) நான் ஒரு நாள் பார்த்தேன்.உபயோகப்படுமா என பார்க்கவும்.

http://www.indusladies.com/forums/shoppers-stop-kitchen-household-items/41561-iron-ragi-pans-kadai-usa.html

அலுமினியும் food acids-வுடன் react ஆகும் என கேள்விபட்டிருக்கிறேன்.எங்கள் வீட்டில்(இந்தியாவில்)Indalium kadai உபயோகித்தோம்.

Patience is the most beautiful prayer!!

உத்ரா. .வழக்கம் போலவே நல்ல லிங்க் கொடுத்து அசத்தீட்டீங்க.. நன்றி.. நீங்க அலுமினியம் பத்தி சொல்லியிருந்தத நானும் படிச்சேன். .அதான் பயந்து இங்க வந்து கேட்டேன்.. அந்த லிங்க் ல - இரும்பு பத்தி நல்ல விதமா தான் சொல்லியிருக்காங்க - ஆனா துருப்பிடிக்கும் போல.. நம்ம சுறுசுறுப்புக்கு அதை மெயின்டெயின் பண்ண முடியுமான்னு தெரியலை.. வாணி calphalon பத்தி சொல்லியிருக்காங்க.. நான் tri ply, all clad - பாத்துகிட்டு இருந்தேன்.. all clad - எங்க பட்ஜெட்க்கு ஒத்து வராது :)

நான் இப்போ வால்மார்ட் , மேசிஸ் போறேன்.. அங்க கிடைக்கலைன்னா அப்புறம் இந்தியன் ஸ்தொர்க்கு போறேன்..

வேறு யாருக்காவது இதை பத்தி தெரிஞ்சாலும் வந்து சொல்லுங்க...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா,

ஸ்டைன் லஸ் ஸ்டீல், காப்பர் பாட்டம் பொரிக்க, சாம்பார் வைக்க உதவியாக இருக்கும். ஆனா deep fry க்கு சரியாக படுமான்னு தெரியல. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் தீஞ்சு போய்டும்.கடாய்க்கு அடிப்பகுதி கனமாக இருக்கணும். எதோ எனக்கு சொல்லணும்னு தோணிச்சு. உங்களுக்கு இது உபயயோகப்ப்படும்மான்னு தெரியல
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்