உப்பு மாங்காய் (அ) மாவடு

தேதி: April 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மாவடு (அ) புளிப்பு மாங்காய் - இரண்டு சிறியது
வினிகர் - நான்கு தேக்கரண்டி
சர்க்கரை - கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - இரண்டு
உப்பு - அரை தேக்க‌ர‌ண்டி


 

மாங்காய் (அ) மாவடு, பச்சை மிளகாயை பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும்.
ஒரு ப‌வுளில் போட்டு உப்பு போட்டு ந‌ன்கு குலுக்கி ச‌ர்க்க‌ரை, வினிக‌ர் சேர்த்து மூன்று ம‌ணி நேர‌ம் ஊறினால் போதும்.
ஒரு வார‌ம் வ‌ரை ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிட‌லாம்.
எங்க‌ வீட்டில் ஒரு வார‌த்திற்கு வைக்க‌ செய்த‌தும் இர‌ண்டு நாளில் காலியாகிடும்.


சில மாங்காய் வாங்கினால் ரொம்ப புளிப்பாக இருந்தால் இப்படி செய்யலாம். க‌ர்ப்பிணி பெண்க‌ள் வாய்க்கு ருசிப்ப‌டும்
புளிப்பு, கார‌ம், உப்பு, இனிப்பு சேர்ந்து ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும். தாளிச்சாவிற்கு மாங்காய் வாங்கி விட்டு மீதியை இப்படி செய்து கொள்வேன்.

மேலும் சில குறிப்புகள்