ஒருவராவது பதில் தாருங்கள்

தயவு செய்து பதில் தாருங்கள்.எனக்கு endometriosis உள்ளது.இது laparoscopy மூலம் சரி செய்யமுடியுமா?

என்னால் உதவ இயலவில்லை சகோதரி. :-(
முக்கியமான சொற்களைத் தலைப்பில் பயன்படுத்தி இருந்தீர்களானால் இந்தப் பதிவு நிச்சயம் யார் கவனத்தையாவது கவர்ந்திருக்கும். பதில் சொல்லியிருப்பார்கள்.
நான் போட்டுள்ள தலைப்பு யார் கவனத்தையாவது ஈர்க்கிறதா பார்க்கலாம். இந்த நேரத்தில் பார்ப்பதற்கு அனேகம் யாரும் இருப்பதில்லை. பார்க்கலாம்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹெல்லோ காவேரி நலமா... நான் பார்த்தவுடன் பதில் போட நினைத்த போது சிறிது வேலையாகிவிட்டது.

முதலில் கவலைப்படுவதை நிறுத்துங்கள். என்னால் உங்க பிரச்சனையை புரிந்துகொள்ளமுடிகிறது.
உங்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றுகின்றன?உங்களின் வயது என்ன? எதுவானாலும் கவலைப்படாதீர்கள்.
நான் அறிந்தவரை இப்பிரச்சனயை தீர்ப்பதற்கான மருத்துவ ஆராச்சிகள் நடக்கின்றன.கண்டிப்பாக இதை சரி செய்ய முடியும்.தைரியமாக இருங்கள்.

அன்புடன்
உமா

http://www.endometriosis.org/

இந்த தளம் பாருங்க, உங்களுக்கு எதாச்சும் விவரம் கிடைக்கலாம்.... எனக்கு இதை பற்றி வேறு ஏதும் தெரியல... மன்னியுங்கள். கவலை வேண்டாம், சரியாகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hai Vanitha,

How r u? Why long silence? How is Yazhini? Come to Arattai.

நன்றி தோழிகளே
என்க்கு வயது 28.i am waiting for baby .endometriosis உள்ளதால் conceive ஆக முடியாதா.pls reply soon.

நன்றி தோழி
யாரிடமாவது கேட்டு எனக்கு பதில் கூறுங்கள்.please...........

நன்றி தோழி
யாரிடமாவது கேட்டு எனக்கு பதில் கூறுங்கள்.please...........

ஹாய் காவேரி,
நான் விசாரித்துப் பார்க்கிறேன். நீங்கள் அதிகம் யோசிக்காமல் இருங்கள். உங்கள் மருத்துவர் சொல்வதைக் கேட்டு நடவுங்கள். இப்போது எல்லாப் பிரச்சினைகளுக்குமே மாற்று வழி சொல்கிறார்கள். அதனால் யோசிக்க வேண்டாம்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

நன்றி இமா
உங்கள் பதிவு ஆறுதலாக உள்ளது. விசாரித்து சொல்லுங்கள்.ஆவலுடன் காத்திருக்கிறேன்.எனக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது.அதனால் தான் பயமாக உள்ளது.என் கணவருக்கு kidsஎன்றால் உயிர்.நான் அழுதால் என் கணவருக்கு பிடிக்காது.உங்களெ என் தோழியாக கருதி சொல்லுகிரேன்.

சகோதரி காவேரிக்கு,
நான் விசாரித்தவரை அங்கு கூகுலில் இருக்கும் விபரங்கள் தான் கிடைத்தன. laparoscopy செய்வதா அல்லது வேறு சிகிச்சையா என்பது உங்கள் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்தது என்று சொல்லப்பட்டது.
உங்களை நேரில் பரிசோதித்த மருத்துவருக்குத்தான் உங்கள் நிலை நன்கு தெரியும். நம்பிக்கையோடு தொடர்ந்து உங்கள் மருத்துவர் சொல்வதன்படி செய்யுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்