ப்ரட் பீஸ் மசாலா

தேதி: April 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ப்ரெட் ஸ்லைஸ் - 8
வெங்காயம் - 3
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லி - சிறிது
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு


 

ப்ரெட்டை சன்னமாக உதிர்த்துக்கொள்ளவும். (மிகவும் தூளாக உதிர்க்க வேண்டாம்)
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயத்தை வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் பொழுது உப்பு, மிளகாய், கரம் மசாலா பொடிகளை சேர்க்கவும்.
உதிர்த்த ப்ரெட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.


குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று என் பொண்ணுக்கு லன்ச் பாக்ஸில் இந்த ப்ரெட்பீஸ் மசாலா தயாரித்து கொடுத்தனுப்பினேன். தக்காளி, வெங்காயத்துடன் கொஞ்சம் காப்ஸிகமும் மெல்லிதாக நறுக்கி போட்டு, மிளகாய் தூளை நிறுத்திவிட்டு (அவள் காரம் சாப்பிடமாட்டாள் அதனால்...), பதிலாக கொஞ்சமாக மிளகுத்தூள் சேர்த்து செய்தேன்.ப்ரெட்டையும் சின்ன சின்ன ஸ்கொயராக கட் செய்து போட்டிருந்தேன்.
ஈவீனிங் ஸ்கூல் முடிந்து வந்தவளிடம், எப்படி இருந்தது என்றேன். "ம்ம்ம்... யம்ம்மி!" என்றாள். இனி, இதுவும் அவள் லன்ச் ஐயிட்டம்ஸில் ஒன்றாக இடம் பிடித்துக்கொண்டது. செய்வதற்கு ஈசியான இந்த சூப்பர் லன்ச் ஐடியாக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உங்கள் பதிவை படிக்கு பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது.மகள்"ம்ம்ம்...யம்ம்மி"என்று சொன்னது என் காதிலும் ஒலித்தது போன்ற பிரமை.நன்றி சுஸ்ரீ.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சுவையான எளிய பிரேக் பாஸ்ட் உணவு... நான் முட்டையும் சேர்த்து செய்தேன்... நன்றாக இருந்தது........

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

பின்னூட்டத்திற்கு நன்றி.முட்டை சேர்த்து செய்யும் ஐடியாவுக்கும் நன்றி.அடுத்த முறை செய்து நானும் பார்க்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பின்னூட்டத்திற்கு நன்றி.முட்டை சேர்த்து செய்யும் ஐடியாவுக்கும் நன்றி.அடுத்த முறை செய்து நானும் பார்க்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஸாதிகா,
தக்காளி தவிர்த்துத்தான் செய்யவேண்டி இருந்தது. ஆனாலும் நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி ஸாதிகா.
இமா

‍- இமா க்றிஸ்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இமா.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இப்போதுதான் பின்னோட்டம் போட்டேன். தயாராய்த்தான் இருக்கிறீர்கள் ஸாதிகா. :-)
இமா

‍- இமா க்றிஸ்

அட நீங்கள் வேறு இமா.எனக்கு இப்போதெல்லாம் நிறையவே நேரம் இருக்கின்றது.ஆனால் கம்பியூட்டர் கிடைப்பதில்லை.ஆதலால் நடு நிசியில் கூட அமர்ந்து பதிவு போட்டு இருக்கின்றேன்.இதோ இன்னும் அரை மணி நேரத்தில் எஸ் ஆர் எம்மில் எண்டரண்ஸ் எழுத சென்று இருக்கும் என் மகன் திரும்பி விடுவார்.அப்புறம் அவ்வளவுதான்.
ஸாதிகா

arusuvai is a wonderful website