புடலங்காய் முட்டை சாதம்

தேதி: April 20, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

அரிசி - 2 கப்
புடலங்காய் - 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
முட்டை - 2
எண்ணெய்
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு


 

முதலில் அரிசியைப் போட்டு சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள்.
புடலங்காயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
புடலங்காயைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவிடவும்.
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி வதக்கி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
சாதத்தின் மேல் கொட்டி கிளறி விடவும். சுவையான புடலங்காய் முட்டை சாதம் தயார்.
இதை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai,vathsala madam,

this is very differant dish. i prepared for my husbands lunchbox. he has eaten and apreciate me.
thank you.

இன்று லன்ச்க்கு புடலங்காய் முட்டை சாதம் செய்தேன். ஒரே ஒரு மிளகாய் போட்டு செய்தேன், லைட் காரமா, முட்டை சுவையுடன் என் பொண்ணுக்கு ரொம்பவே பிடித்திருந்தது இந்த சாதம். புதுமையான இந்த புடலங்காய் ரெஸிப்பிக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

புடலங்காய் முட்டை சாதம்
வத்சலா, புதுமையாக இருக்கு இந்தச் சாதம். இப்படிச் செய்தேன் நல்ல சுவையாகவும் இருந்தது, அத்தோடு புடலங்காய் சாப்பிட விரும்பாதவர்களும் முட்டைவாசனையோடு சாப்பிட்டு விட்டார்கள். நான் தக்காழி சேர்க்கவில்லை. எனக்கு இதைப் பார்த்து புது ஐடியா வந்திருக்கு, இப்படி ஒவ்வொரு மரக்கறியிலும் மாற்றி மாற்றிச் செய்தால் ஒருவிதமாக மரக்கறிகளும் தீத்திப்போடலாம் பிள்ளைகளுக்கு.

இன்னும் நெற் சரியாகவில்லையா. நான் பின்னூட்டங்களைக் கொடுத்துவிட்டு எடுத்த படங்களை அனுப்பலாம் என அவசரமாக இன்றுதான் மொத்தமாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சுஸ்ரீ, நீங்கள் இந்த சாதம் செய்து பின்னூடம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.உங்கள் பொண்ணுக்கு ரொம்பவே பிடித்திருந்தது,எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அதிரா,உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்திருந்தலில் மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"