முதல் நாள் பள்ளி சென்ற குழந்தை

தோழிகளே புலம்பி புலம்பி ஒருவழியாக சன்டே முதல் என் 3 வயது மகளும் ப்ரீஸ்கூல் போகிறாள்...ரெண்டு நாளா இதை நினைத்து எனக்கு தூக்கமும் இல்லை எதிலும் கவனமும் இல்லை பித்துபிடித்தது போல உள்ளது.
கெ ஜி 1 சேர்க்க சொன்னார்கள் எனக்கு விருப்பம் இல்லை 4 வயதில் கெஜி போனால் போதும் என்று நர்சரி விட முடிவு செய்தேன்.
பலபல டென்ஷனும் வந்து மண்டையெல்லாம் வெடிக்கிறது
1)ட்ரான்ஸ்போர்டேஷன் ஸ்கூல் vanல் தான் செல்ல வேண்டும்..சின்ன பிள்ளையை ஏற்றி விட்டு எப்படி பார்க்கநிம்மதியா இருக்க போகிறேனோ கடவுளுக்கு வெளிச்சம்..கொண்டு விட என் கணவரால் சில நாட்களே முடியும் மற்ற நாள் டேக்சியில் தினசரி கொண்டு விடுவதும் சாதியமில்லை
2)ஸ்கூளில் பிள்ளைகள் முரண்டு பிடித்தால் எதுவும் செய்துவிடுவார்களோ என்று ஒரே பயமாக உள்ளது..என் மகள் யார் அடித்தாலும் கூட என்னிடம் சொல்ல மாட்டாள் அதான் பயமே ..வீட்டில் இங்கு வா என்றால் வந்ததாக சரித்திரமே இல்லை வா என்றால் அதற்கு எதிர்திசையில் ஓடத் தான் செய்வாள் அவர்கள் இது போல் செய்தால் பொறுமையாக பார்த்துக் கொள்வார்களா
எல்லாத்துக்கும் பதிலும் யோசித்து நானே சமாதானப்பட்டாலும் திரும்ப திரும்ப இதே யோசனை.ஸ்கூலுக்கு போகிறேன் எஙிறாள் ஆனால் தனியாக தான் போக வேண்டும் நான் வரமாட்டேன் என்றால் முழித்துக் கொண்டு அப்போ நான் கத்துவேன் என்று பயமுறுத்துகிறாள்..எங்கிருந்தோ கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை டீச்சர் என்னை அடிப்பாங்க எங்கிறாள்
இதெல்லாம் வேண்டாத பயம் தான் இருந்தாலும் என்னைப் போல எல்லா தாய்மார்களும் இப்படி தான் தவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..உங்கள் பிள்ளையை முதன்முதலாக அனுப்பின அனுபவம் அதன்பிறகு நீங்கள் நிம்மதியாக இருந்தது எப்பொழுது எல்லாம் சொல்லி என்னை தேற்றி விடுங்கள்:-)..அதிரா சொன்னது இன்னும் வரிவரியாக என் மனதில் நிற்கிறது

காலை 8.30 முதல் மதியம் 12.30 வரை தான் பள்ளி அது தான் பெரும் நிம்மதி.காலை ஒரு க்லாஸ் பாலை குடித்து விட்டு போனால் ப்ரேக்பாஸ்ட் நாம் கொடுத்து அடுப்ப வேண்டுமாம்.பாஸ்தா மகரோனி,னூடில்ஸ்,சாதம்,குழம்பு இவையல்லாத ட்ரை ஐடெம்ஸ் தான் கொடுத்தனுப்ப வேண்டுமாம்..இன்னொரு பாத்திரத்தில் பழங்கள் கொடுத்தனுப்ப சொன்னார்கள்.
என்ன உணவை கொடுப்பது..எல்லாம் கொடுக்கலாம் என்றால் விதவிதமாக செய்து விடுவேன் ட்ரைய்யாக ப்ரெட்டில் சான்ட்விச்போல் எதை செய்வது?

தளிகா,எப்படி இருக்கிறீர்கள்.என்னுடைய மகளும் இப்பொழுது தான் பள்ளிக்கு செல்கிறாள்.3ஆவது வாரம் இன்றுடன் முடிகிறது.முதல் இரண்டு வாரமங்கள் நானும்,என் மகளும் பட்ட பாடு மிகவும் அதிகம்.பள்ளிக்கு கிழம்புவதெல்லாம் சமத்தா கிழம்புவாள். ஆனால் அழுது கொண்டேயிருப்பாள்(நான் போகலை,பயமாக இருக்கு,நீங்க வந்து தான் கூட்டிக்கொண்டு வருனும்,பள்ளியில் உங்கள் முகம் தான் அம்மா ஞாபகம் வருது இப்படி ஏதாவது சொல்வாள்).அதை நினைத்துக் கொண்டு நானும் வீட்டில் அழுவேன்.இத்தனைக்கும் டீச்சர் சொல்றாங்க she is very good in class room activities.I don"t know why she was like that.But now she is very cool.அவளே அம்மா எனக்கு lunch boxல் எக் சாண்விட்ச் வைங்க,shape பூரி வைங்கன்னு சொல்ற அளவுக்கு வந்துட்டா,
நான் அவளுக்குக் கொடுக்கும் உணவுகள்
1.Egg சாண்விட்ச்
நீளமாக உள்ள பிரடில் பாதி மட்டும் கட் பண்ணி உள்ள மட்டும் பட்டர் தடவி டோஸ்ட் செய்து plain egg ஆம்ள்லேட் வைத்துக் கொடுப்பேன்.அதே போல் veg க்கு normal slice bread 2 எடுத்து டோஸ்ட் செய்து.அதில் கொஞ்சம் மைனஸ் தடவி லெட்யூஸ் வைத்து french fry,corn,peas மட்டும் வைத்துக் கொடுப்பேன்.
2.shape(circle,star,rectangle&triangle)பூரி(n0-7)
3.mini idly with பொடி(no-7)
4.mini தோசை/கேரட்,கேபேஜ் துருவி துவிய மினி தோசை(n0-2)
5.குழிப் பணியாரம்(no-5)
6.சப்பாத்தி/சடஃபிங் வித் french fry,குட்டியாக் கட் பன்னிய சிக்கன் பீஸஸ்/மேத்தி சப்பாத்தி(n0-1)
7.கொஞ்சம் french fry,நக்கேட்ஸ்(n0-2),கொஞ்சம் corn
8.சிக்கன் லாலிபாப் மட்டும்(n0-1)
9.சில நேரங்களில் புளியோதரைப் பொடி கிளறிய சாதம்,கீ ரைஸ்(small quantity)
10.நன்கு குட்டியாகக் கட் பண்ணிய காய்கள் சேர்த்து செய்த நூடுல்ஸ்
11.ஏதாவது ஒரு சில முறைகள் மட்டும் பர்கர் கொடுக்கலாம் என்று நினைத்து frozen burger chicken(small size) வாங்கி வைத்துள்ளேன்.
இதனுடன் fruits(sliced cucumber,sliced carrot,cut பண்ணிய banana,apple),tetra pack small size juice,சில நேரங்களில் cup cake,plain corn flakes போன்றவையும் கொடுப்பேன்.
இவைகள் தான் நான் இப்பொழுது கொடுப்பவை.

நன்றி கீதா மனசுக்கு நிம்மதியா இருக்கு கேட்க இப்ப மகளே கிளம்பி சமத்தா போகிறாள் என்றதும்..என்மகள் முழுக்க முழுக்க வீட்டு சமையல் விரும்பி..பெரியவர்களுக்கு பிடிக்கும் வகை சாதம் குழம்பு.இட்லி சாம்பர் சட்னி எல்லாம் காலையில் எழுந்ததும் கொடுத்தாலும் சாப்பிடுவாள்.தற்பொழுதைய குழந்தைகள் விரும்பும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகள்,சேன்ட்விச்கள் அறவே அவளுக்கு பிடிப்பதில்லை..அதற்கு ஏற்ப எனக்கு ஆப்பு வைத்து விட்டார்கள்.
இனிமேல் தான் அதை எப்படியாவது பழக்க வேண்டும்.பரவாயில்லை உங்கள் பிள்ளை லெட்டஸ்,காய்கறிகள் கூட சாப்பிட பழக்கி விட்டீர்கள் இங்கு வெங்காயம் கடுகை கூட பெருக்கி நீக்கி விட்டு சாப்பிடுகிறாள்
நன்றி கீதா உங்கள் பதிவு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு.விரிவாக குறிப்புகள் எழுதுயிருக்கிறீர்கள் அவை நிச்சயம் எனக்கு உதவும்

தளிகா,
என் பொண்ணும் நம் சமையலான இட்லி,தோசை மற்றும் சாதம் விரும்பி தான்.இங்கு பள்ளிகளில் கையில் ஒட்டாத மற்றும் கீழே உதிராத உணவுகளை தான் வைக்க சொல்கிறார்கள்.என்ன செய்வது?.சாண்ட்விட்ச் போன்றவற்றை நான் பக்கத்திலிருக்கும் குழந்தைகள் வீட்டில் வந்து விளையாடும் போது எல்லோருக்கும் கொடுத்துப் பழக்கினேன்.உங்கள் பொண்ணும் பழகிக் கொள்வாள்.கவலை வேண்டாம்,ரொம்ப ஃப்ரோஸன் உணவுகளைக் கொடுக்காதீர்கள்.Because health is most important than others.

பழகினால் எனக்கும் சந்தோஷம்..ஃப்ரோசன் ஐடெம்ஸ் இதுவரை கொடுத்ததில்லை.பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் மகளுக்கு மட்டுமல்ல நாங்களும் சாசேஜ் பர்கர்,சிக்கன் எதுவும் ஃப்ரோசென் வாங்குவதில்லை.
இன்னுமொரு கேள்வி என் மகள் எதை கைய்யில் கொடுத்தாலும் கொட்டுகிறாள் எனக்கு எரிச்சலாகவே இருக்கிறது..இப்ப கூட ஸ்ட்ராபெரி மில்க் குடிக்க கொடுத்து கொட்டி வைத்து விட்டாள்.நான் அருகிலேயே உட்கார்ந்து ஒழுக்கமா குடிக்க சொல்லி பாத்துட்டே இருந்தா எங்கயும் சிந்தாது அதுவே கைய்யில் கொடுத்தால் பாலாயினும் எந்த ஒரு உணவானாலும் அதை கண்டிப்பாக கொட்டிவிட்டு தான் வேலை..வேண்டுமென்றே செய்வதில்லை ஆனால் கைய்யும் காலும் சும்மா இருக்காது கைய்யில் தட்டை க்லாசை பிடிச்சுட்டு ஆடிகிட்டே கொட்டிடுவா..ஒன்னு எதாவது டான்ஸ் பன்னி கொட்டுவா இல்ல காலை சொரிஞ்சேன் கைய்யை சொரிஞ்சேன் அல்லது பக்க்த்திலுள்ள பொருளை இழுக்க இதுவும் சேர்ந்து விழும்..எனக்கு டயர்ட் ஆகிவிடுகிறது சுத்தப்படுத்தியே...இதை எப்படி மாற்றுவது என்று எனகு புரியவில்லை இல்லை நான் தான் அதிகமாக எதிர்பார்க்கிரேனா அதுவும் தெரியவில்லை

தளிகா,

வாழ்த்துக்கள். பள்ளிக்குப் போக மகள் தயாராகிவிட்டாளே!!

உணவு வகைகள் கீதா கூறியது போலத்தான் நானும் கொடுப்பது. மற்றபடி பொதுவாக ஒரு அட்வைஸ்: காலையில் பள்ளிக்குப் போகுமுன் லிக்விட் ஃபுட் (பால், ஜூஸ்) கொடுப்பதை விட திட உணவு கொடுத்து அனுப்புவதே நல்லது. காரணங்கள்:

1. பால் குடித்து விட்டு போகும் சில பிள்ளைகளுக்கு வண்டியில் போகும்போது குமட்டும். வெறும் வயிற்றில் பால் குடித்து விட்டு, உடனே வண்டியில் குலுங்கி, திரும்பி, வளைந்து செல்வதால் சிலர் வண்டியிலோ, பள்ளியிலோ வாந்தி எடுத்து விடுவர். திட உணவில் இந்த வாய்ப்பு குறைவு.

2. பால் ரொம்ப நேரம் பசி தாங்காது. பள்ளியில் சரியாகச் சாப்பிடவில்லையென்றால் பசியால் சோர்ந்து போகும். போகுமுன் நல்லா சாப்பிட்டு விட்டால், பள்ளி உணவைப் பற்றி ரொம்பக் கவலைப்பட வேண்டியதில்லையே!!

3. பள்ளியில் சாப்பாட்டு இடைவேளை பொதுவாக 9.30 அல்லது 10 மணிக்குத்தான் இருக்கும். பால் மட்டும் குடித்து விட்டு போகும் குழந்தைகளுக்கு அதற்குள் நல்ல பசி எடுத்துவிடும்.

காலையில் இட்லி, தோசை, பூரி போன்றவை சாப்பிடக் கொடுத்து அனுப்புங்கள். பழக்குவது கஷ்டம்தான். ஆனால் பழக்கிவிட்டால், பயன்கள் பல.

மிஸஸ் ஹுசைன் சொல்வது போல் , பூரி, இட்லி , மினி தோசை, அது போல் பழக்க படுத்தி விடுஙக்ள்,
எபப்டி இருந்தாலும் நட்ஸ் கொஞ்சம் வைத்தால் கொரிக்க வசதியாக இருக்கும், கொஞ்சம் பழம் உப்பு சர்க்கரை தூவி வைக்கனும் அபப் தான் கருத்து போகாமல் இருக்கும்
இது பற்றி ஏற்கனவே நிறைய பேர் பழைய பதிவுகளில் போட்டு இருக்கிறர்கள்.

மைதா மாவு இனிப்பு தோசை இது நல்ல இருக்கும் கொண்டு போக , பாம்பே டோஸ்ட் இதுவும் நல்ல இருக்கும்.
சப்பாத்தியில் நியிட்ரெல்லா அது ஈசியா சாப்பிடுவார்கல்.
குட்டி குட்டி யா கட் பன்ணி வைக்கனும்

அதே போல் கீதா நிறைய சொல்லி இருக்காஙக அதையும் ஃபாலோ பண்ணி கொள்ளுங்கள்

//இது நான் முந்தைய தலைப்பில் போட்டது,//

டியர் நிஞ்சு பாப்பு குழந்தைகள் ஸ்கூல் போக ஆரம்பித்தால் சளி ப்டிகக் தான் செய்யும், வீட்டில் தனியாக இருந்தவர்கள் 30 குழந்தைகளோடு என்றால் ஒரு குழந்தைக்கு உள்ளது மற்றவர்கலுக்கு வர தான் செய்யும் ஏதாவது அழுக்கில் கை வைப்பார்கள்.
அதோடு அபப்டியே சாப்பிடுவார்கள். ஆகைஅயல் வாரம் இர முறை இஞ்சி சாறு, இஞ்சி ரசம், சாப்ரான் பால், மிளகு பால் இது போல் ஏதாவது கொடுத்து கொண்டே இருக்கனும்,
குழந்தைகள் இந்த வயதில் அடிகடி சாலேட் சாப்பிடுவார்கள் அதற்கு வேப்பிலை ,இஞ்சி ,துளசி , ஓமம் சேர்த்து சார் எடுத்து சர்கக்ரை கலந்து கொடுகனும், பூச்சிகள் வெளியேறும்.

குழந்தைகள் பள்ளி சேர்க்கும் போது பென்சில் பிடித்து எழுத கை வலுவடைய பாலிதீன் கவரை , பேப்பர் துண்டுகள், எல்லாத்தையும் நல்ல டார் டார கிழிக்க சொல்லனும், ஒரு அதை அவர்களையே அள்ளி குப்பை குப்பையில் போட சொல்லி பழக்கி விடனும்

Jaleelakamal

ur daughter reminds my son,

he's starts his school 2 months ago.
feeding breakfast is big battle.
first few days he drinks only milk,and few bits of idly dosa or breadtoast,so i sent cereal bar with him,and asked his teacher to give it to him around 10 o clock,they provide lunch (american food) 1 o clock he comes home and he eats our food.

now hes ok he eats breakfast ok.i give him rava idly,idly, cheese toast,egg dosa like that,so if he eats just one its enough to fill the 3 years old tummy

ரீமா குட்டி ஸ்கூல் போக போறாங்களா?வெரி நைஸ்.கவலைபட வேண்டாம்.நீ ஆச்சிரியபடற மாதிரி ரீமா சமர்த்தா போவா.உங்க மனசு நல்லா புரியுது ரூபி.நம்ம கூடவே வச்சுகிட்டு இருந்துட்டு இப்ப முதல் முறை ஸ்கூல் போகும் போது குழந்தைங்களுக்கும் கஷ்டம் நமக்கும் கஷ்டம். கொஞ்ச நாள்ல குழந்தைங்க பழகிடுவாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்(அக்கா பையனோட அனுபவம்).அப்புறம் சரியாகிடும்.நல்ல திரெட்.எல்லோருடைய அனுபவமும் உதவியா இருக்கும்.எல்லாரும் வாங்க.உங்க அனுபவத்தை சொல்லுங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

தளிகா!! நாம் முன்பு கதைத்ததை இங்கே paste பண்ணியுள்ளேன்.....

////தளிகா......கதீஜா...
ஏப்ரல் 3, 2008 - 6:02am - வழங்கியவர் அதிரா
தளிகா......கதீஜா...
இங்கே புதிசா பெரிசா எதுவுமில்லை(இப்படித்தான் எங்கள் physics master படிப்பிக்கத் தொடங்குகிறபோது சொல்வார்) குழந்தைகளை டே கெயார்/நேசறிக்கு அனுப்புங்கள். இங்கே நிறைய எழுத நினைக்கிறேன் அறுசுவை இடம்தருகிறதோ தெரியவில்லை.

எனது மூத்தவரை 2 1/2 வயதில் டே கெயார்ரில் சேர்த்து நான் கூட்டிப்போனேன். அவன் என்னை விட்டு பிரியவே மறுத்தார்.... கொஞ்சநாளாக முயற்சி செய்தேன். பின்னர் யோசித்தோம் சிறிய வயது ஏன் விரும்பாமல் அனுப்புவான். என விட்டுவிட்டோம். பின்னர் 3 வயதில் நேசறி. அம்மாவும் என்னுடன் நின்றால் வருவேன் என்றார். நான் நிற்பேன் என சொல்லிக் கூட்டிப் போனேன். இங்கு அந்த நேசறியில் எல்லாம் வெள்ளைகள், அதனால் எங்களை மிகவும் கவனிப்பார்கள். இங்கே நம்மவர்... குறைவு.... அல்லது இல்லை என்றே சொல்லலாம்...எங்கள் ஏரியாவில்.

அப்போ நேசறிக்குள்ளேயே என்னையும் இருக்க விட்டார்கள். முதல்நாள் என் மடியைவிட்டு இறங்கவே இல்லை. மறுநாள் என் ஒரு கையைப் பிடித்தபடி ஒரு கையால் விழையாடினார். தண்ணி, மண் எல்லாம் இருக்கும் அதனால் அந்தக் கிழமை கொஞ்சம் தள்ளித் தள்ளி விழையாடினார். அடுத்த கிழமை எனக்கு அந்தரமாக இருந்தது நேசறியுள் இருக்க அது முறையில்லைத்தானே, அதனால் வெளியே வாசலில் இருந்தேன். விழையாடுவார். பின் அம்மா என்று கூப்பிட்டபடி என்னை வந்து பார்ப்பார் பின் போவார். இப்படி அடுத்த கிழமை போனது. பிறகு நான் நினைத்தேன் இனி விட்டுவிட்டு வரலாம் என்று. அன்றுவரை ஒருநாள் கூட நான் அவனைப் பிரிந்ததில்லை. கடைக்குப்போனாலும் என்னை வரும்படி நிற்பார்.
அதனால் முதல் பிரிவு எனக்கும் கஸ்டமாகத்தான் இருந்தது. ரீச்சரிடம் சொன்னேன், நான் போகப்போகிறேன் அழுதால் போன் பண்ணுங்கள் என்று. மகனுக்கு புரிந்துவிட்டது... நான் நேசறியால் வெளியே வர அம்மா என்று அழுதுகொண்டு ஓடிவந்தார் ரீச்சர் தூக்கிக்கொண்டார் கதவையும் பூட்டினார்கள். எனக்கு நெஞ்செல்லாம் அடைத்தது. அம்மா என்றது காதில் ஒலித்தபடியே இருந்தது அழுதுகொண்டுதான் வீட்டுக்கு வந்தேன். வீட்டில் கதவைத் திறந்தேன். எல்லாமே இழந்துவிட்டதுபோல் இருந்தது ஏதோ ஒரு தனிமை . எதுவும் செய்யப்பிடிக்கவில்லை. அப்படியே போனை வத்துக்கொண்டு சோபாவிலேயே இருந்தேன். என் hus... கதைத்தார் நடந்ததைச் சொன்னேன். அப்படியாயின் முடியும்வரை தாமதிக்காமல் வேளைக்குப் போய் கூட்டி வாருங்கள் என்றார். 2 மணித்தியாலத்தில் போனேன். பெல் பண்ணித் திறந்து கூட்டிப் போவதாகச் சொன்னேன். அவர் பிறகு அழவில்லை விழையாடினார் என்றார்கள். சந்தோசமாக இருந்தது. தூக்கிவந்தேன். அப்போ சொன்னான்... " அம்மா நீங்க போனீங்க நான் அம்மா என்று ஓடிவந்தேன் ஓ ஹறா(ரீச்சரின் பெயர்) என்னைத் தூக்கிக்கொண்டு டோரைப் பூட்டிவிட்டார்... நான் தேடினேன் நானின் (enathu)கண்ணுக்கு அம்மா தெரியவேயில்லை" என்றார். என்னை அறியாமல் என் கண்ணால் தண்ணீர் கொட்டியது. இப்பகூட அதை என்னால் மறக்க முடியவில்லை அழுதபடிதான் இதை எழுதுகிறேன். ஆனால் இப்போ வளர்ந்துவிட்டார். நிற்கச் சொன்னால்கூட நிற்கமாட்டார் தன் friends தேடுவார்கள் நான் போகவேண்டும் என்பார்.

ஆனால் 2 வது மகன் போக விரும்பினார். 2 வயதில் வாரத்தில் ஒருநாள் 3 மணித்தியாலம் மட்டும் விட்டோம். அவராகவே விரும்பிப் போனதால் எனக்குப் பெரிதாக கவலை தெரியவில்லை. அங்குதான் அனைத்துப் பழக்கமும் கற்றுக்கொண்டார். நான் நேசறிக்குள்ளேயே இருந்து பார்த்ததால் அங்கு நடப்பவற்றைச் சொல்கிறேன்.
ஒருவர் வைத்திருக்கும் toy பறிக்கக்கூடாது, அவர் கீழே வைத்தால்தான் எடுக்கவேண்டும்.
உணவை எப்படி சாப்பிட வேண்டும்.
விழையாடி முடிய எப்படி அடுக்கி வைக்கவேண்டும். குப்பைகளை அதற்குரிய இடத்தில் போடவேண்டும். . அதுபோல் வெல்கம்..... சொறி.......( இங்கே எனக்கொன்று நினவிற்கு வருகிறது நேற்று சுப்பமாக்கட் போனேன்... ஒரு தாய்(white) பிள்ளையை பிறாமில் கொண்டுவந்தார் 1 1/2 வயது இருக்கலாம் வாயில் சூப்பியுடன்.... அப்போ என் வண்டிலுடன் முட்டிவிட்டது... உடனே தாய் சொறி என்றார் அந்தக்குழந்தையும் சூப்பியுடன் எனக்குச் சொறி என்றது.... நான் தடவி விட்டேன்..) இப்படி நிறையப் பழக்குகிறார்கள். அதனால் என்னைப் பொறுத்தவரை பிள்ளை விரும்பினால் கட்டாயம் அனுப்புங்கள். தெண்டிக்க வேண்டாம். இடையில் மாட்டேன் என்று சொன்னால் நிறுத்தி மீட்டும் அனுப்புங்கள். சிலர் காசு கட்டிவிட்டோமே இனி நிறுத்தக் கூடாதென்று கூட்டிப் போவார்கள். அது நல்லதல்ல. அது வெறுப்பாகிவிடும். இடையிடையே விடுங்கள். இதனால் உங்களுக்கும் ஆறுதல். அதாவது சொப்பிங் செய்யலாம்... கிளீனிங் இப்படியான, அவர்களை வைத்துக்கொண்டு செய்ய முடியாத வேலைகளைச் செய்யலாம். நாம் வீட்டில் எவ்வளவுதான் பழக்கவழக்கம் சொல்லிக்கொடுத்தாலும், அங்கு உடனேயே பிடித்துக் கொள்கிறார்கள். இப்பகூட என் இரண்டாவது மகனை ஒழுங்காக விடுவதில்லை. இன்று போகவில்லை என்பார். மறித்துவிடுவோம். பாடசாலைதான் கட்டாயம்.
2வது மகன் சாப்பிடும் அழகைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவ்வளவு அழகாக ஒழுங்காகச் சாப்பிடுவார். கறண்டி பிடிப்பதெல்லாம் அங்குதான் கற்றுக்கொண்டார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பதிலளி
அன்பு அதிரா
ஏப்ரல் 3, 2008 - 12:29pm - வழங்கியவர் seyedkatheeja
எப்படி இருக்கிறீர்கள் பிள்ளைகள் நலமா.பரவாயில்லை தாமதமானால் என்ன உங்கள் பதில் எனக்கு உபயோகமா இருக்கு. நீங்க உங்க பெரிய பையன் பத்தி சொன்னதை படிக்கிறப்ப எனக்கும் அழுகை வந்துட்டு நான் எப்படி தான் என் பையனை அனுப்பபோறேனோ தெரியலை அதிரா. நானும் உங்களை போல தான் இப்பவே அவனை தனியா ஸ்கூலுக்கு அனுப்பனுமே என்னைவிட்டு பிரித்து என்று நினைத்தால் தூக்கமே வரமாட்டேங்குது அவனை விட்டு நானும் என்னை விட்டு அவனும் இதுவரை பிரிந்தே இருந்தது இல்லை.அவனை 2 1/2 வயசுல ப்ளேயிங் ஸ்கூலுக்கு அனுப்பினேன் அங்க நானும் கூடவே இருக்கலாம் அதனால அவன் கூடவே நான் இருக்கிறேன்னு பேசாமல் இருப்பான்.இப்ப ஊருல சும்மா ஒரு வீட்டுல வச்சி சொல்லி கொடுக்குறாங்க அங்க அனுப்புறேன் அவன் ஆரம்பத்துல என் மடிய விட்டு இறங்கவே மாட்டான் இப்ப கொஞ்சம் அங்கு சொல்லிகொடுக்குறதை படிக்கிறான் ஆனால் நான் போய்விடுவேனான்னும் பார்த்துக்கிறான் என்னை பிர்ந்து இருக்கவே மாட்டிக்கிறான் என்ன செய்யன்னு எனக்கு கவலையா இருக்கு நானும் அவன் கூட தான் இருக்கிறேன்.இப்ப ஜப்பான் போய் நான் அவனை கிண்டர்கார்டனில் சேர்க்கனும் எப்படி இருப்பான்னு தெரியலை ஹஸ்ஸும் அதனால் தான் கவலை படுறாங்க உன்னை விட்டு இவன் எப்படி இருப்பான் என்று நீங்க சொல்றதை பார்த்தே எனக்கு அழுகை வந்துட்டு என் பையனை பிரிந்து நான் முதல்ல எப்படி இருப்பேன்னு தெரியலை எப்படியும் அனுப்பிதானே ஆகனும் மனசை இப்பொழுது இருந்தே திடப்படுத்தி கொள்ளனும்னு சொல்றீங்களா சரி இப்பவே நான் தயார் படுத்திக்கிறேன் என்ன. உங்களின் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா.

பதிலளி
அன்புடன் கதீஜாக்கு
ஏப்ரல் 6, 2008 - 6:17am - வழங்கியவர் அதிரா
நீங்களும் அதே கேஸ்தானா? நான் நினைக்கிறேன் மூத்த பிள்ளைகள் எங்குமே இப்படித்தான் தாயை விட்டுப் பிரிவது கொஞ்சம் கஸ்டம். ஆனால் நல்லது, இப்போ நீங்கள் மகனை நேசறிக்குக் கூட்டிப்போவது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பழக்கலாம். எனது மூத்தமகன் அப்படி என்னைவிட்டுவிட்டு போகமாட்டேன் என்று அழ நான் நல்லா பயந்துவிட்டேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் பண்ணிக் கேட்ட்டேன் அனைவரும் சொன்னார்கள் மூத்த பிள்ளைகள் கொஞ்சம் அப்படித்தான் போகப்போகப் பழகிவிடும் என்று அதோடுதான் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதனால் நீங்களும் யோசிக்க வேண்டாம். அவருக்கு நேசறிக் கதைகளைச் சொல்லி ஆசையை மனதில் உருவாக்குங்கள்.

காலையில் எப்படியாவது 9 மணிக்கு முன்னர், காலை உணவைக் கொடுத்துவிடுங்கள். பின்பு 11 மணிக்குமேல் எதுவுமே சாப்பிட விடவேண்டாம். அப்போதுதான் அவர்களுக்குப் பசிக்கும். 1 மணிக்குள் மதிய உணவைக் கொடுங்கள். பின்னர் இரவுக்கும் உணவு கொடுக்கும் நேரத்திற்கு 1 மணித்தியாலத்திற்கு முன்னர் எதுவும் உண்ண விடவேண்டாம். எங்கள் வீட்டில் இப்பவும் நான் இதைக் கடைப்பிடிக்கிறேன். இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாற்று | பதிலளி
தளிகா பயப்பட வேண்டாம்
ஏப்ரல் 6, 2008 - 6:44am - வழங்கியவர் அதிரா
முதலில் எந்த நேசறிக்கு அனுப்ப யோசிக்கிறீங்களோ, அங்கே தெரிந்தவர்கள் யாராவது போயிருந்தால் ரீச்சேர்ஸ் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் 99% மான நேசறியும் பயப்படத்தேவையில்லை. ஒரு சில இடங்களில் சில பிரச்சனைகள் நடந்திருக்கிறதுதான். பிள்ளைகளின் குறும்பிற்கேற்ப அவர்கள் நல்லபடி பழக்குவார்கள். கொஞ்சம் குறும்பு கூடினால் பணிஸ்மென்ற் கொடுப்பார்கள் என்னவென்றால். அவர்கள் சொல்லும் வரை அந்த கதிரையை விட்டு எழுந்திருக்கக் கூடாதென்று அவ்வளவுதான். அடிப்பதெல்லாம் இல்லை.

நீங்கள் விலை அதிகம் என்பதால் வாரத்தில் ஒருநாள் 2 அல்லது 2 1/2 மணித்தியாலம் மட்டும் விடுங்கள். அனுப்ப முதல் அவவுக்கு திரும்பத் திரும்பச் சொல்லுங்கள் அடிக்கக் கூடாது எறியக்கூடாது என்று. ஓரளவாவது புரிந்து கொள்வார். இன்னுமொன்று சிறியவர்களுக்கு நாம் ஒரு கதை சொல்கிறபோது, ஏதோ அலுவலுடன் சொல்லக்கூடாது. கிட்டக் கூப்பிட்டு வைத்து, உங்கள் முகத்தைப் பார்க்கச் சொல்லிவிட்டுக் கதை சொல்லுங்கள் அதுவும் 2, 3 தடவை திரும்பத் திரும்பச் சொல்லுங்கள் அப்போதுதான் மனதில் அதைப் போட்டுக்கொள்கிறார்கள். இது என்னுடைய அனுபவம். நான் இப்படித்தான் இப்பவும் செய்வேன் இப்படி முகத்தைப் பார்க்கச் சொல்லிச் சொல்லியபின், சொல்லுகிற விசயங்கள் ஒழுங்காக நடக்கும். மற்றபடி எது சொன்னாலும் புரியாது. ok அம்மா என்றுமட்டும் சொல்வார்கள் ஆனால் புரிந்திருக்காது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்