முதல் நாள் பள்ளி சென்ற குழந்தை

தோழிகளே புலம்பி புலம்பி ஒருவழியாக சன்டே முதல் என் 3 வயது மகளும் ப்ரீஸ்கூல் போகிறாள்...ரெண்டு நாளா இதை நினைத்து எனக்கு தூக்கமும் இல்லை எதிலும் கவனமும் இல்லை பித்துபிடித்தது போல உள்ளது.
கெ ஜி 1 சேர்க்க சொன்னார்கள் எனக்கு விருப்பம் இல்லை 4 வயதில் கெஜி போனால் போதும் என்று நர்சரி விட முடிவு செய்தேன்.
பலபல டென்ஷனும் வந்து மண்டையெல்லாம் வெடிக்கிறது
1)ட்ரான்ஸ்போர்டேஷன் ஸ்கூல் vanல் தான் செல்ல வேண்டும்..சின்ன பிள்ளையை ஏற்றி விட்டு எப்படி பார்க்கநிம்மதியா இருக்க போகிறேனோ கடவுளுக்கு வெளிச்சம்..கொண்டு விட என் கணவரால் சில நாட்களே முடியும் மற்ற நாள் டேக்சியில் தினசரி கொண்டு விடுவதும் சாதியமில்லை
2)ஸ்கூளில் பிள்ளைகள் முரண்டு பிடித்தால் எதுவும் செய்துவிடுவார்களோ என்று ஒரே பயமாக உள்ளது..என் மகள் யார் அடித்தாலும் கூட என்னிடம் சொல்ல மாட்டாள் அதான் பயமே ..வீட்டில் இங்கு வா என்றால் வந்ததாக சரித்திரமே இல்லை வா என்றால் அதற்கு எதிர்திசையில் ஓடத் தான் செய்வாள் அவர்கள் இது போல் செய்தால் பொறுமையாக பார்த்துக் கொள்வார்களா
எல்லாத்துக்கும் பதிலும் யோசித்து நானே சமாதானப்பட்டாலும் திரும்ப திரும்ப இதே யோசனை.ஸ்கூலுக்கு போகிறேன் எஙிறாள் ஆனால் தனியாக தான் போக வேண்டும் நான் வரமாட்டேன் என்றால் முழித்துக் கொண்டு அப்போ நான் கத்துவேன் என்று பயமுறுத்துகிறாள்..எங்கிருந்தோ கற்றுக் கொண்டாளோ தெரியவில்லை டீச்சர் என்னை அடிப்பாங்க எங்கிறாள்
இதெல்லாம் வேண்டாத பயம் தான் இருந்தாலும் என்னைப் போல எல்லா தாய்மார்களும் இப்படி தான் தவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..உங்கள் பிள்ளையை முதன்முதலாக அனுப்பின அனுபவம் அதன்பிறகு நீங்கள் நிம்மதியாக இருந்தது எப்பொழுது எல்லாம் சொல்லி என்னை தேற்றி விடுங்கள்:-)..அதிரா சொன்னது இன்னும் வரிவரியாக என் மனதில் நிற்கிறது

தளிகா பஸ்ஸில் அமைதியா போய்வராளா?காரில் நீங்கள் முன்னாடி உட்காருங்கள்,அவளை மட்டும் பின்னாடி உட்காரவிடுங்கள்,பக்கத்தில் எங்காவது போகும் போது மட்டும்,என்னவர் என்னை முன் சீட்டில் விடவே மாட்டார்,பையன் பின்னாடி தனியா விழுந்துவிடுவான் என்பார்,ஆனால் அதை நான் காதில் வாங்குவதில்லை,விழுந்தால் சீட்டில் தானெ விழுவான் நாலுமுறை விழுந்தால் அப்பறம் ஒழுங்க உட்காந்து வருவான் என்பேன்,ஆனால் நின்னுகிட்டு வருவான்,நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது இப்படிதான் நின்னுகிட்டே போனேன்,பிரேக் போட்டு கிழவிழுந்து ரத்தம் வந்து ஊசி போட்டு டாக்டர் கசக்கற மருந்தா கொடுத்தார்,என்று ஒரு பெரிய கதையே சொல்லுவேன்,அப்படியே சீட்டில் சாய்ந்து உட்காந்திடுவான்,அந்த கதைய இன்னொருக்க சொல்லு என்பான்,யாராவது காரில் நின்னால்,உழுந்திட போறாங்க,உட்கார சொல்லு என்பான்,சில விஷ்யங்களில் பயம் தேவை,நாங்கள் எங்களுக்கு இப்படிதான் ஆயிடுச்சு என்று ஒரு தழும்பை கான்பித்தால் நான் இனி அது செய்யமாட்டேன் என்றிடுவான்,இவனிடம் பேச நிறைய பொறுமை வேனும்,சொன்னதையே திரும்ப சொல்ல சொல்லுவான்,ஒரு சில சமயம் சில வம்பு

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அப்படியா திருமதி ஹுசேன்
இப்ப தான் கேட்க சமாதானமாக இருக்கு..ஸ்கூளை பொறுத்தவரை அவளுக்கு நல்ல பிடித்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன்..டீச்சரை சந்தித்து பேசினேன் முதல் நாள் முதலே சந்தோஷமாக இருக்கிறாள் என்றார்கள்.
முதல் நாள் கேட்டேன் என்ன செய்தாய் என்று ஒன்றும் செய்யவில்லை என்றாள் ஆனால் என்னை பின்னால் வந்து ஓங்கி அடிப்பதும் தள்ளி விடுவதுமாக புதுபழக்கமாக தெரிய என்ன இது கெட்ட பழக்கம் என்று கேட்டேன்..இதையெல்லாம் தான் ஸ்கூளில் செய்கிறார்களாம்:-0

ஆமாம் ரேனுகா பலநாள் தூங்காமல் பயந்தேன்..ஈ ஜூனியரில் ஸ்கூள் க்லாசிஃபைட்ஸ் அவளுக்கு ரொம்ப இஷ்டம் அது வந்தால் கண்டிப்பாக எங்கிருந்தாலும் ஓடி வருவாள் அதனால் அவளது மனதில் ஸ்கூள் போகும் முன்பே ஸ்கூள் என்றால் அது தான் என்று நினைத்திருந்தாள்...ரெண்டு நாள் முன்பிருந்தே இந்த ஸ்கூளுக்கா நான் போவேன் என்று கேட்டபடி இருந்தாள்
முதல் நாள் காலை ரெடியாகி ஸ்கூள் வந்து கேட்டை திறந்தது தான் 3 வருஷமா அம்மா இருந்தாளே என்ற நினைவே இல்லாமல் உள்ளே என்னை திரும்பி பார்க்காமல் டீச்சர் கைய்யை பிடித்துக் கொண்டு ஏறி விட்டாள்..டீச்சர் உடனே கதவை சாத்தி விட நான் தான் முழித்துக் கொண்டு நின்றேன்..முதல் மூன்று நாள் குழந்தை கம்ஃபடபில் ஆகும்வரை 1 மணிநேரம் இருந்தால் போதும் கூட்டி செல்லுங்கள் என்றார்கள் ..இவள் முதல் நாளே நல்ல ஜாலியாக இருந்ததால் மூன்றாம் நாள் முதல் முழு நேரம் விட சொல்லிவிட்டார்கள்...
முதல் மூன்று நாள் எந்த கவலையும் இல்லாமல் போய் வந்தாள் நேற்று மட்டும் வித்யாசமாக ஸ்கூளிலிருந்து வர மாட்டேன் என்று அழுது கொண்டு வந்தாள்
எல்லா பிள்ளைகளும் போனபின் இவள் தனியாக ஸ்லிஅடில் விளையாடும்பொழுது தான் கூட்டி கோன்டு வந்தேன் இருந்தும் வர மனசில்லையாம்.வித்யாச பிறவியை பார்த்து டீச்சர் சிரித்துக் கொண்டிருந்தார்
முதல் நாள் ப்ரேக்ஃபாஸ்ட் வேண்டாம் ஒரு மணிநேரம் தானே என்றார்கள்..ஆனால் மற்ற பிள்ளைகள் சாப்பிடுவதை கண்டு ஆசைபட்டு எனக்கும் நாளை ப்ரெட் வேண்டும் என்றாள் கொடுத்தனுப்பினேன் சாப்பிட்டு விட்டு வந்தாள்...இரண்டாம் நாளும் கேட்டால் நான் தான் ஒன்றையே எப்படி கொடுப்பது என்று இட்லி கொடுத்து விட்டேன் சாப்பிடாமல் திரும்ப வந்து ப்ரெட் கேட்டால் இட்லி போட்டு ஏமாத்திட்டேன் எஙிறாள்...அதனால் அவள் விருப்பப்படியே கேட்டதை வைத்து கொடுக்க ஆரம்பித்து விட்டேன் அதனால் சமத்தாக சாப்பிடுகிறாள்..தண்ணீர் மட்டும் தான் பாட்டிளில் 2 சிப் ஸ்கூளில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததும் மொத்தமாக தாகம் தீர்க்கிறாள்.
பஸ்ஸில் அடுத்த மாதம் முதல் தான் விட போகிறேன்..இவ்வளவு நாளும் நான் டேக்சியில் தான் கொண்டு விட்டேன் அதனாலேயே வெயிலில் நின்று டயர்ட் ஆகிறாள்.
பஸ்ஸிலும் பெரிதாக ப்ரச்சனை பன்ன மாட்டாள் என்று நம்புகிறேன்...அடுத்த வாரம் வந்து சொல்கிறேன்.
எங்க விட்டில் இன்னமும் இவர் தான் ட்ரைவர் பாவம் அவர் சொல்வார் என்னை முன்னாடி உக்கார சொல்லி பின்னாடி அவளை உட்கார வைக்க..கேட்க மாட்டாள்..சிக்னல் வரும் நேரம் பார்த்து முன்னாடி தாவி அழுது அட்டஹாசம் பன்னி பெரிய ட்ராமா நடக்கும் வண்டி ஓட்டும்போது அவரும் டென்ஷனாகி எனக்கும் பிபி ஏறி விடும்
...ஆனால் திட்டுகிறார் இப்படியே விட்டால் இது பழக்கமாகிவிடும் அழுதால் பரவாயில்லை என்று என்னை முன்னாடி வர சொல்கிறார்..உங்க டெக்னிக்கை ட்ரை பன்னி பார்க்க வேண்டும்

கார் வாங்கியவுடன் குழந்தைகளுக்கென்று உள்ள கார் சீட்டும் கண்டிப்பாக வாங்கி விட வேண்டும். எப்பவும் அதில் உட்கார வைத்து பெல்ட் போட்டுதான் இருக்க வேண்டும். எடைக்கேற்றவாறு சீட்டைப் பார்த்து மாற்றிக்கொள்ள வேண்டும்

மூத்த மகன் இப்படித்தான் 3 வயதில் கார் வாங்கிய புதிதில் நடுவில் நின்று இது என்ன, அது என்ன, அதை இழுக்கவா, இதைப் போடட்டா என்று இருப்பான். அவன் அப்பாவுக்கு (எனக்கும்) வரும் டென்ஷனைப் பாத்து, உடனே ஒரு மாதத்தில் "கிட்ஸ் கார் ஸீட்" வாங்கி விட்டோம்.

அதே போல இரண்டாவது மகனுக்கு, 5 மாதம் முதல் (ஆமாம், 5 மாதம்தான்) சீட்டில்தான் உட்கார வைத்து பெல்ட் போட்டு போவது.

இப்போ சின்னவருக்கு 6 வயது, பெரியவர் 12 வயது. இப்பவும் காரில் ஏறியவுடன் ஸீட் பெல்ட் போட்ட பிறகுதான் விடுவது.

எல்லாரும் அப்படியே பழக்குங்கள். அதுதான் நல்லது. எப்படி நாம் பழக்கப் படுத்துகிறோமோ அப்படித்தான் குழந்தைகளும்.

குழந்தை பின்ஸீட்டிலேயே கீழே விழுந்தாலும் லேசான அடிதான் படும் என்று உறுதியில்லையே.

தெரிந்த ஒருவரின் மகன் 3 வயது, காரில் எக்ஸ்பிரஸ் ரோட்டில் போய்க் கொண்டிருக்கும்போது இப்படித்தான் நடுவில் நின்று கொண்டிருந்தவன் திடீரென்று (Automatic) கியரை ரிவர்ஸுக்கு மாற்றிவிட்டான். உயிர் தப்பியது பெரிய விஷயம் ஆகிவிட்டது. அவர்கள் ஊருக்குப் போவதற்காக ஏர்போர்ட் சென்று கொண்டிருந்தார்கள் அப்போது.

உங்களைப் பயமுறுத்த நினைக்க‌வில்லை தளிகா/ ரேணுகா.

ஹூசைன் நானும் கார்சீட்டில் தான் உட்கார வைப்பேன்,2 1/2 வய்து வரை அதில் உட்காந்திருந்தான்,வளந்துவிட்டதால் அதில் உட்கார வைக்க முடியவில்லை,கார் சீட் சின்னதா ஆயிடுச்சு,அதனை எடுத்துவிட்டோம்,இங்கு வெளியே செல்லும் போது பின்னாடி தனியே விடுவேன்,துபாய் சென்றாலோ ரெம்ப தூரம் பயனம் என்றாலோ நானும் பின்னாடி அவனோடுதான் உட்காருவேன்,எனக்கு என் பிள்ளையின் மேல் அத்தனை நம்பிக்கை,எது சொன்னாலும் அதனால் எற்படும் நன்மை தீமை என அனைத்தையும் விளக்குவேன்,காரில் எதைதொட்டால் என்ன பண்ணும் எப்படி ரோட்டில் காரில் போகனும் என்று எல்லாத்தையும் சொல்லிடுவேன்,அதனால் அவன் என்ன பிரச்சனைஆகும் என்று தெரிந்து கொள்வதால் அதனை பற்றி சிந்திக்க தொடங்கிடுவான்,அதை நாம் மீண்டும் மீண்டும் சொல்வதால் அவன் செய்யகூடாது என்றால் அதை தொடமாட்டான்,அதை ஏன் தொடகூடாது என கேட்பான்,அப்பொழுது விளக்கமாக சொல்லிவிட்டால் அவர்கள் புரிந்துகொள்வார்கள்தானே,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தளிகா ஆரம்பத்தில் 10 நிமிடம் டிரைவிங்,மால் போகும் போது இப்படி உட்கார வைத்து பழக்குங்கள்,இவனும் என்னை அத்தனை எளிதில் முன் சீட்டில் விட் வில்லை,அவனுக்கு ஒரு எண்ணம் நான் அவனோடு உட்காராம்மல் அவர் அப்பா பக்கத்தில் உட்காருகிறேன் என்ற கோபம்,
கொஞ்சம் சொஞ்சமா சொல்லி புரியவைச்சாச்சு,இப்பவும் வீட்டில் நான் வாயே திறக்க முட்டியாது,,என்னால் அவரிடம் டீ வேனுமா என்று கூட கேட்கமுடியாது அவன் தான் கேட்டு சொல்லுவானாம்,அப்பப்ப சொல்லி எப்பவாது பர்மிஷ்ன் தருவான் அவரிடம் பேச என் நிலைமையை நினைத்தால் எனக்கே கோபம் வரும்
நான் எதுக்கும் யோசிக்க மாட்டேன்,அழுதாலும் அழு என்று விட்டுடுவேன்,பிடிவாதம் பிடித்து அழும் போது வீட்டில் கண்ணாடி முன் நான் நின்னுவிடுவேன்,அவனும் அழுதுகிட்டே என்னிடம் வருவான் அவன் அழுவதை பார்த்து அவனுக்கே சிரிப்பு வரும்,சாப்பிடவில்லை என்ற்றாலும் கட்டாய படுத்தி ஊட்டமாட்டேன்,ஒரு நேரம் கண்டுக்கவில்லை என்றால் அடுத்த முறை அவனே பசியில் சாப்பிட வருவான்,கொஞ்சம் பாவம் பார்க்காமல் சில் விஷ்யங்கள் பழக்கிவிட்டால் பிரச்சனைகளிருக்காது

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உண்மைதான் ரேணுகா, குழந்தைகளிடம் செய்யாதே என்பதை விட ஏன் செய்யக் கூடாது என்று விளக்கிச் சொன்னால் அது அதிகப் பயன் தரும்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு "பூஸ்டர் ஸீட்" கிடைக்குதுப்பா, பார்த்திருப்பீர்கள். 40 கிலோ எடை வரை அதில் உட்கார வைக்கலாம் என்று நினைக்கிறேன். நாம் பின்னால் அவர்கள் கூட உட்கார்ந்தாலும் கூட, குழந்தைகளுக்கு பெல்ட் மாட்டுவது மிக அவசியம். பெரியவர்களுக்கும்தான்.

ஆமாம் சரி தான் சென்டிமென்ட் பார்த்து விட்டுவிட்டேன் அநியாயத்துக்கு ஊர்பட்ட விலை கொடுத்து ஆசையாக பிறந்த குழந்தைக்கு கார் சீட் வாங்கினோம்..படாத பாடு பட்டோம் 2 மாதம்..இப்படி அழுகையை கேட்டு கொண்டிஉர்ப்பதற்கு பின்னாடியே உக்காரலாம் என்று அந்த கார் சீட்டை தூக்கி வீசி விட்டு நானும் பின்னாடியே உக்கார தொடங்கி விட்டேன்...இனி ஹுசேன் சொன்னபடி சீட் வாங்கி பிடித்து உட்கார வைக்க வேண்டும்..
என் மகளுக்கும் ப்ரச்சனை அதே தான் அதெப்படி அப்பா கூட நீங்க மட்டும் உக்காரலாம் என்பது தான்..பின்னாடி போர் அடிக்குதாம் முன்னாடி நோண்டிகிட்டு இருக்கலாம் எல்லாத்தையும்
நான் ஒரு ப்லான் வைத்திருக்கிறேன் எல்லாம் நல்லபடி நடந்தால் இன்னொரு 5 மாதம் போனால் அடுத்த பிள்ளை வந்து விட்டால் இரண்டையும் சேர்த்து சீட்டில் போட வேண்டும் அப்பொழுது பழகி விடும்.
நான் இந்த முறை பிரசவத்துக்கு ஊர் போகாமல் இருப்பதில் இதுவும் ஒரு காரணம்...என் மகளுக்கு ஊரில் இருந்து 2.5 மாதத்தில் வந்ததால் அதன் பின் சீட்டில் போட மறுத்து விட்டாள் ஒரே அழுகை
பிறந்த குழந்தை என்றால் பேசாமல் படுத்துக் கொள்ளும்..நடக்குமா பார்ப்போம்.இப்பல்லாம் சீட் பெல்ட் போட்டு விடுவேன் பின்னாடி ஆனால் அது போட்டால் அவளுக்கு நெஞ்சு வலிக்கிதாம்

தளி ரொம்ப நல்ல திரட் இப்பதான் எல்லாமே படிச்சேன்..என் பொண்ணு 10 நாளா ஸ்கூல் போகிறாள் எது செய்து கொடுத்தாளும் மம்மி பரு அழகா அப்படியே கொண்டு வந்துட்டேன்னு டிபனை காட்டுறா எவ்லவோ சொல்லிட்டேன் முதல் 2 நாள் மட்டுமே சாப்டாள்..நார்மலாகவே இவ டிபன் சாப்பிடும் பழக்கமே இல்லை..ஸ்கூலிலாவது சாப்பிடடும்னு கொடுத்து அனுப்பினா அப்பயே வருது எனக்கு இது ரொம்பவே கவலையாகவே இருக்கு..என்ன செய்யலாம்..
சொல்லுங்களேன் பிளீஸ்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லி இந்த ஒரு விஷயத்தில் நான் தப்பிச்சேன் ..எவ்வளவு நேரம் விட்டாலும் சாப்பாடு கேக்காத பிள்ளைகள் கொஞ்சம் கஷ்டம் தான்..போக போக தானா மனசு வச்சா தான் உண்டு
என் பொண்ணு நிறைய சாப்பிடாட்டியும் நேரத்துக்கு 1 இட்லி 1 சப்பாத்தியாவது சாப்பிட்டுடனும் இல்லன்னா பைத்தியம் புடிச்ச மாதிரி பன்னுவா..
ஆனால் எதெதையோ கொடுத்தா சாப்பிடுரதில்ல..ஸ்பெசிஃபிக்கா சிலது கொடுத்து விடுவேன்
ப்ரெட்குள்ள விதவிதமா ஸ்டஃப் பன்னி கொடுத்து விடுவேன்..ஆனா டோஸ்டரில் வச்சு கொடுத்தா தான் சாப்பிடுவா ஏன்னா உள்ள பிரிக்க முடியாது.இல்லன்னா ரெண்டா பிரிச்சு பாத்துட்டு வன்திருப்பா
உள்ள சிக்கன்,சீஸ்,கார்ன்,சும்மா பட்டர் அப்படி எதுவாது கொடுப்பேன்..சில நாள் சீரியோஸ், சில நான் கார்ன்ஃப்லேக்ஸ், சில நாள் கேக் சப்பாத்தி அப்படியெல்லாம்..காலையில் ஓரளவு வயிறு நிரம்பி தான் அனுப்புவேன் அதனால் கொஞ்சமா சாப்பிட்டாலும் கவலையில்லை..சுத்தமா சாப்பிடாட்டி கவலையா இருக்கும்

மேலும் சில பதிவுகள்