செர்ரி டொமெட்டோ சாலட் (Cherry Tomato)

தேதி: April 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

செர்ரி டொமெட்டோ (குட்டி தக்காளி) – ஒரு பாக்ஸ் (குறைந்தது 20 – 25 தக்காளிகள்)
கறிவேப்பிலை – 5 இலைகள்
எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 3
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு


 

பூண்டு பற்களை நசுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கி வைத்திருக்கும் பூண்டினை போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் பூண்டுடன் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவினை சேர்த்து கிளறவும்.
நொடியில் ரெடியாக கூடிய செர்ரி டொமெட்டோ சாலட் தயார். மிகவும் சுவையாக இருக்கும் இந்த சாலட். இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Looks yummy and healthy...

Vaazhga Valamudan

This item is my favourite dish.Thank u very much.

with love
shameema