உதவி தேவை !!

எனக்கு ஒரு சந்தேகம்

அழகு குறிப்புகளில் முகத்துக்கு போட கடலை மாவு என்றுள்ளதே - அது பொட்டுக்கடலையை பொடித்து செய்வதா இல்லை கடலை பருப்பை கொண்டு செய்வதா? இங்கு நார்த் இந்தியன் கடைகளில் கிடைக்கும் பேசின் / கிராம் ப்ளோர் அதற்க்கு மாற்றாகுமா இல்லை நாமே தான் வீட்டில் செய்யனுமா?

அப்புறம் பயத்தம் மாவு என்றால் பச்சைப்பருப்பை உடைத்து செய்வது தானே ?

கடலைமாவு என்பது கடலை பருப்பை அரைதால் வருவது, இந்தியில் பேசின். தோல் இல்லாத கடலை பருப்பு அரைக்க வேண்டும். (மசால் வடை).

பயத்தமாவு: பச்சைபருப்பு அல்லது பயத்தம் பருப்பு (பொங்கல் செய்ய பயன் படுத்துவது) ஆனால் இது தோல்லோடு அரைக்க வேண்டும்.

கண்களின் கீழ் கருமை என்றால், ஜீரண உறுப்புகள் வீக்காக இருக்கிறது என்று பொருள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்றி ஹைஸ்... ஹி ஹி அப்போ நீங்களும் உபயோகிப்பீங்க போல !!

ஜீரண உறுப்புகள் இப்போதைக்கு ஓகே தான்..... ஆனால் ஒரு வருஷத்துக்கு முன்பு பணியில் இருந்தப்போ ஏற்ப்பட்ட stress, தூக்கமின்மை, வெயிட் லாஸ் - அதுக்கப்புறம் தான் இப்படி !! இப்போ கொஞ்சம் பரவாயில்ல !! சரி செய்யனும் !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சகோத்ர்ன் அவ்ர்களுக்கு நான் உன்கள் பதிவுகளை படிப்பவள்.எனக்கு ஜீரனக்கோளாரு உன்டு.மருத்துவம் சொல்லமுடியும?வைருகடபுடனு இரைசல் உன்டு.

தாங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

1. அங்கு நாட்டுமருந்து கடையில், திரிஃபலா பொடிகிடைத்தால், வாங்கி இரவு தூங்கும் முன் 1 டீ ஸ்பூன் சாப்பிட்டு ஒர் கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்கவும். (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம எடையில் அரைத்த்து)

2. அல்லது மாலையில் 20 உலர்ந்த திராட்சையை வென்னீரில் உறவைத்து இரவு படுக்கும் முன் சாப்பிடலாம்.

3. அல்லது நிலவாகை மாத்திரை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) காலை இரண்டு இரவு இரண்டு சாப்பிடலாம். (21 நாட்கள் மட்டும்)

4. எமெர்ஜென்ஸி வைத்தியம்: சுக்கு-5 கிராம், ஓமம் 5 கிராம், எலக்காய் 5 எண்ணிக்கை பனை வெல்லம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.

5. புதிய அரிசி உபயோகப்படுத்துவதை தவிர்கவும், பழைய புழுங்கல் அரிசி மிகவும் நல்லது.

6. கோதுமை பண்டம் சேர்த்து கொண்டாலும் நல்லது.

7. தயிர் தினமும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி பல்.நான் த்ற்போது அமெரிக்காவில் உள்ளேன்.அடுத்தமாதம் இந்தியாவரும்போது நீங்கள் சொல்லியபடி செஇதுவிடு தெரிவிக்கிரேன்.னன்ட்ரி.

ஸ்கேன் எடுத்ததில் Bulky liver என்ட்ரு வந்துள்ள்து
விஜயா51

இது பெரிய விஷயம் இல்லை கவலை பட வேண்டாம். ஒவொரு உபாதைகளுக்கும் இயற்கையில், நூற்றுக் மேல்பட்ட தீர்வுகள் இயற்கையில் உள்ளது. கல்லீரலுக்கு எனக்கு தெரிந்தவரை ஒரே மருந்துதான். அது கீழா நெல்லி என்னும் மூலிகை, அதைதான் ஆங்கில, ஆயுர் வேத, சித்த, இயற்கை மருத்துவங்களில் பயன் படுத்துகிறார்கள்.

1. இந்தியா வரும் போது ஆயுர் வேத மருத்துவரை காணலாம்

2. அல்லது பஞ்ச கர்மா சிகிச்சை முயற்சி செய்து பார்கலாம்.

3. அல்லது நம்பிக்கை இருந்தால் வர்மவைத்தியம் முயற்சி செய்து பார்கலாம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரன் ஹைஷ் அவர்களே,
தங்களின் உட்னடியான பதிலுக்கு மிக்க நன்றி.பதிலை பார்த்ததும் பாதி தெம்பு வந்துவிட்டது.மிக்க நன்றி.

யோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்
போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரை
சேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்
மூக்குநோ யில்லை மொழி

- அகத்தியர் குணபாடம்

ஈரல் பாதிப்பு நீங்க

உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.

சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்

கருப்பை பலம்பெற

கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

மேலும் நீங்கள் வசிக்கும் நாட்டில் Foot Reflexology அருகாமையில் எங்கு உள்ளது என்று அறிந்து அந்த வைத்தியத்தை முயற்சி செய்து பார்கவும். அது சரியான முறையில் செய்யப்பட்டால் புற்று நோயைக் கூட குணப்படுத்தும்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

Dear Haish Thank u very much for ur interest and immediate reply.I came here for my son'sgraduation.I will be back next month & try there.Sorry for typing in english. Thank u once again.

மேலும் சில பதிவுகள்