கறி உருளை சால்னா

தேதி: April 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரைக் கிலோ
தக்காளி - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - எட்டு
மிளகாய் தூள் - நான்கு தேக்கரண்டி
த‌னியா தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
த‌யிர் - 75 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
டால்டா (அ) நெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - மூன்று மேசைக்க‌ர‌ண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - அரை க‌ட்டு
புதினா - கால் க‌ட்டு
தேங்காய் - நான்கு மேசைக்க‌ர‌ண்டி
முந்திரி - 25 கிராம்
க‌ச‌க‌சா ‍ - இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை ப‌ழ‌ம் - ஒன்று (சிறியது)
ப‌ட்டை ‍ - 2 அங்குல‌ துண்டு இர‌ண்டு
கிராம்பு - நான்கு
ஏலக்காய் - மூன்று


 

ம‌ட்ட‌னில் கொழுப்பு மற்றும் ஜ‌வ்வு போன்றவற்றை நீக்கி ந‌ன்கு 5 அல்லது 6 முறை த‌ண்ணீரில் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக‌ட்ட‌வும். வெங்க‌யாம், த‌க்காளியை நறுக்கி வைக்க‌வும் கொத்தம‌ல்லி, புதினாவை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்கவும், முந்திரியை திரித்து அத்துட‌ன் தேங்காய் பொடி சேர்த்து த‌ண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள‌வும். தேங்காய் சேர்ப்பது என்றால் ஒரு சிறிய‌ மூடியும், முந்திரி, க‌ச‌கசா சேர்த்து மையாக‌ அரைத்து வைக்க‌வும். உருளைக்கிழ‌ங்கை தோலெடுத்து மீடிய‌மாக‌ நறுக்கிக் கொள்ள‌வும். ப‌ட‌த்தில் உருளை வைக்க‌வில்லை.
குக்கர் அல்லது ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வெடிக்க விடவும். அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.
கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கி ஒரு நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும். பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.
பிற‌கு மிள‌காய் தூள், த‌னியாதூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ம‌சாலா ந‌ன்கு தக்காளியோடு சேரும் வ‌ரை கிள‌றி அதில் ம‌ட்ட‌ன் மற்றும் த‌யிர் சேர்க்க‌வும்.
தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா ம‌சாலா வ‌கைக‌ளும் க‌றியில் சேரும்படி ஐந்து நிமிட‌ம் விடவும்.
கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.
நறுக்கி வைத்திருக்கும்‌ உருளையை சேர்த்து ஒரு முறை கிள‌றி இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து குக‌க்ரை மூடி தீயை மித‌மாக‌ வைத்து ஐந்து விசில் விட்டு இறக்க‌வும். வெளியில் ச‌ட்டியில் வேக‌ போடுவதாக‌ இருந்தால் 20 நிமிட‌ம் வேக விடவும்.
குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் திற‌ந்து வெந்த‌ சால்னாவை வேறு ஒரு வாய‌க‌ன்ற‌ ச‌ட்டிக்கு மாற்றி அரைத்து வைத்துள்ள‌ தேங்காய் முந்திரி க‌ல‌வையை ஊற்ற‌வும். (குக்க‌ரில் எது வேக‌ வைத்தாலும் எவ்வ‌ள‌வு எண்ணெய் ஊற்றுகிறோமோ அது மேலே வ‌ந்துவிடும், பார்க்க நிறைய‌ எண்ணெய் போல் தெரியும், கொதிக்க‌ விடும் போது ச‌ரியாகிடும்.)
ந‌ன்கு‌ தேங்காய் வாசனை அட‌ங்கும் வ‌ரை கொதிக்க‌ விட்டு மீதி உள்ள‌ கொத்தம‌ல்லி, புதினாவை சேர்த்து இற‌க்க‌வும்.
சுவையான‌ இஸ்லாமிய‌ இல்ல‌ க‌ல்யாண‌ விசேஷ‌ங்க‌ளில் செய்யும் க‌றி உருளை சால்னா ரெடி. ப‌காறா கானாவிற்கு ஏற்ற‌ க‌றி உருளை சால்னா. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

சிம்மில் வைத்து மூடி போட்டே ச‌மைப்ப‌தால் வாச‌னை க‌ம‌ க‌ம‌வென்று இருக்கும். இதே போல் சிக்க‌ன், ம‌ற்றும் இறாலிலும் செய்ய‌லாம் ஆனால் போடும் அளவுகள் மாறும். இஸ்லாமிய‌ இல்ல விசேஷ‌ங்க‌ளில் உருளை ம‌ட்டும் தான் போடுவார்க‌ள், ஆனால் சாதார‌ண‌மாக வீட்டில் செய்யும் போது க‌றி உட‌ன் க‌த்திரிக்காய், க‌ருணை, முருங்கை‌க்காய், சிறு கீரை, முட்டை கோஸ், அவ‌ரைக்காய், மிக்ஸ்ட் வெஜ்டேபுள்ஸ், எல்லாமே ந‌ல்ல‌ இருக்கும் அத‌ற்கு அள‌வுக‌ள் மாறுப‌டும், எலுமிச்சை சேர்க்க‌ தேவையில்லை, த‌யிர் கொஞ்ச‌மாக சேர்க்க‌ வேண்டும். க‌ச‌க‌சா, முந்திரி சேர்ப்ப‌து சால்னா ந‌ல்ல‌ கிரிப்பாக,‌ இதில் கார‌ம் கொஞ்ச‌ம் குறைவாக‌ தான் போட்டு உள்ளேன் ரொம்ப‌ சுல்லுன்னு கார‌சார‌மாக‌ சாப்பிடுபவ‌ர்க‌ள், கூட‌ இர‌ண்டு ப‌ச்சை மிள‌காயும், அரை தேக்க‌ர‌ண்டி மிள‌காய் தூளும் சேர்த்து கொள்ள‌வும்.
இது மொத்தமாக விசேஷத்திற்கு செய்வதாக இருந்தால் பகாறா கானா, கறி உருளை சால்னா, வெஜ் தாளிச்சா, சிக்கன் பிரை (அ) மட்டன் கூட்டு, ஏதாவது ஸ்வீட், அப்பளம், ஊறுகாய், வெங்காய முட்டை ஆகியவை சேரும். இதெல்லாம் கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு வரும் போது இதனுடன் புரூட்ஸ், நாண், பிர்னி வகைகள், முட்டை வட்லாப்பம் எல்லாம் அடங்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

how many potatoes should be used?

ஒரு கிலோ விற்கு கால் கிலோ போதும்.
பொட்டேடோ அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் , 400 கிராம் போடவும், இதில் பொட்டேடோ சேர்ப்பது கிரேவி கெட்டியாக.

Jaleelakamal

பார்க்கவே அழகாக உள்ளது ஜலி.கிட்டத்தட்ட நாங்கள் செய்வது போல் உள்ளது.எதற்காக வேக வைத்தபின் தேங்காய் முந்திரி கலவையையை சேர்க்க சொல்லி இருக்கின்றீர்கள்?உருளைக்கிழங்கு சேர்க்கும் பொழுது சேர்க்கக்கூடாதா?ம்ம்..மட்டன் சால்னா சென்னை வரை மணக்கிறது..
ஸாதிகா

arusuvai is a wonderful website

நாங்க வேகவைத்த பின் தான் தேங்காய கலந்து நல்ல தர தரன்னு கொதிக்க விட்டு இருக்குவோம்.
இது விசேஷங்களுக்கு செய்வது (இதில் கரம் மசாலா, சீரகதூள் எதுவும் சேர்க்ககூடாது)ஏன் சொல்கிறேன் நா உங்கள் சமையலில் எல்லா பொடிவகைகளும் போடுவீர்கள் இல்லையா?

ஸாதிகா அக்கா இப்ப கொடுதுள்ள ஆலு கோபி செய்து பாருங்கள் சுவை அருமை சும்மாவே நிறிஅய சாப்பிடனும் போல் இருக்கும். நீங்க தா அடிக்கடி கோபி சமைப்பீர்களே.

ஜலீலா

Jaleelakamal

சிலர் மட்டன்,சிக்கன் சமைக்கும் பொழுது சீரகத்தூள் சேர்ர்த்தும்,சேர்க்காமலும் செய்வார்கள்.நான் இரண்டு மாதிரியும் சமைப்பேன்.சீரகத்தூள் சேர்க்காததால்,சேர்ப்பதால் என்ன வித்தியாசம்?தெரிந்தால் சொல்லுங்கள் ஜலி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்களின் இந்தக் குறிப்பினை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவருமே விரும்பி சாப்பிட்டோம்.

ஜலீலா அக்கா இன்று இந்த குறிப்பை சிக்கனில் செய்து சாப்பீட்டோம். ரொம்ப நன்றாக வந்தது. இன்று இரவு டின்னருக்கு ஃப்ரோசன் பரோட்டாவும் சால்னாவும் தான்.

ஸாதிகா அக்கா சீரக தூள் சேர்ப்பதால் சால்னா கலர் மாறி விடும். சுவையும், மாறும் தனியாதூள் கூட் ஐதற்கு அதிகம் சேர்க்க மாட்டோம்.
தனியா,சீரகம்,கரம் மசாலா, சோம்பு இதேல்லாம் மிளகு சால்னா செய்யும் போது, மிளகு கறி செய்யும் போது, சில குறிப்பிட்ட உணவுகளுக்கு தான் சேர்ப்போம்.

Jaleelakamal

டியர் ஓசன் கறி உருளை சால்னா செய்து பார்த்து உடனே பின்னூட்டம் கொடுத்தமைக்கு ரொம்ப சந்தோஷம்.
எல்லோரும் விரும்பி சாப்பிட்டது இன்னும் மகிழ்சியாக இருக்கு.

Jaleelakamal

ஏ கலா கலா லட்ச ரூபா கொடுக்கலாம்.

மாலி பரோட்டாவிற்கு அதுவும் சிக்க்கனில் ரொம்ப சூப்பராக இருக்கும்.

இது தான் எங்க வீட்டில் ரொம்ப பேம்ஸஸானா சால்னா (குருமா) ரொம்ப முடியாத நேரம் இத மட்டும் செய்து கொண்டால் போதும்.

மதியம் சாதத்துக்கு, இரவு பரோட்டாவிற்கு, மீதி ஆகும் சால்னா மறு நாள் மக்ரூனி, அல்லது பாஸ்த இத அப்படியே தண்ணீ கொஞ்சம் கூட சேர்த்து கொதிக்க விட்டு பாஸ்தா (அ) மக்ரூனி போட்டு குக்கரில் நாலு விசி வைத்து எடுத்தால் டிபனும் ஆச்சு, தோசை, இட்லி இடியாப்பம் எல்லாத்துக்கும் தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.

கலா என் ஆப்பத்துக்கு பிறகு இப்ப தான் என் குறிப்பில் நீங்கள் பதிவு போடுகிறீர்கள்.

இங்கு உங்களை பார்க்க ரொம்ப சந்தோஷம், பின்ன்ட்டம் அனுப்பியதற்கும் மிக்க நன்றி.
அறட்டை பாக இரண்டு இடத்தில் என்னை விசாரித்த மதிரி இருக்கு எங்கன்னு தேடி பதில் போடுவதற்குள் அடுத்த அறட்டை ஆரம்பித்து விடுகிறது.

Jaleelakamal

i tried this recipe.it came out well.thank you

Assalamualaikum akka ungaludaya intha salnaa seithen romba arumaya irunthathu