சமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 12, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -13 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால்
முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான்
கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை ஸாதிகா அக்கா(179), மாலினி சுரேஷ்(22) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான
விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30)
இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள்.

வரும் செவ்வாய்க்கிழமை (05/05) முடிவடையும். புதன்கிழமை(06/05), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது
குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

சவுதி செல்வி, மைதிலி, வின்னி ,தனிஷா, கவிஎஸ், ரேணுகா, ஆசியா, அதி, திருமதி ஹுசைன், கீதா ஆச்சல், ராஜி, இமா, வனிதா, சுஸ்ரீ, ஜலீலா அக்கா, ஜாஸ்மின், வத்சலா ,சந்தனா, விஜி, மேனகா, மனோஅக்கா, ஸாதிகா அக்கா, சுரேஜினி ,மாலி அனைவருக்கும் மற்றும் மாலதியக்கா, துஷியந்தி அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(27/04) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இந்த முறை நான் தான் முதலவந்தேன்,அதனால் எனக்கு டிரைவர் சீட் எல்லாம் வேனாம்,நீங்க பட்டம் வாங்க வேனும் சரியா

என் கனக்கு சாதிகா அக்காவின் வெண்டைக்காய் மசாலா,சப்பாத்திக்கு செய்தேன்,மதிய சாதத்திற்க்கும் அதுதான் சூப்பரா இருக்கு,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா,

இந்த வெள்ளி/சனி வார விடுமுறையில் என்னை யாருமே விருந்துக்கு அழைக்கவில்லை. அந்த வருத்தத்தில் நாமே நல்ல (!!) சமையல் செய்வோம் என்று ஷாதிகா அக்காவின் குறிப்புகள் செய்தேன். கணக்கில் வரவில்லை என்றாலும் பரவாயில்லை.

அறுசுவை முகப்பில் வலது பக்கம் உள்ள வகைப்படுத்தலில் தேடினால் எல்லாருடைய குறிப்புகளும் அல்லவா வரும்? புது தளத்தில் எல்லாம் மேம்படுத்தப்பப்படும் என்று நினைக்கிறேன்.

புது தளத்தில் என்ன எதிர்பார்க்கலாம் அல்லது என்ன மாற்றங்கள் நாம் எதிர்பார்க்கிறோம் என்பது குறித்து ஏதாவது இழை முன்பு தொடங்கப்பட்டு உள்ளதா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அதிரா ரேணுகா... நானும் வந்துட்டேன் ஆனால் முடிந்ததை தான் சமைப்பேன். ஒகே வா..

இன்று காலை ஸாதிகா அக்காவின் வொன்டண்ஸ்.மீதி செய்ததை மாலை குறிப்பிடுகிறேன்.

எல்லோருக்கும் காலை டிபன் இது தான்.

அதிரா இந்த தடவை உங்கள் தலையிடிக்கு ஒரு மருந்து கண்டு பிடித்து விட்டேன் அதை முடியும் தருவாயில் போடுகீறேன் அப்ப தான் உங்களுக்கு தலையிடி வராது..

Jaleelakamal

இன்று காலையில் ஸாதிகா அக்காவின் தக்காளிசட்னி செய்தேன்.ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்,மட்டன்குருமா-இது மதிய சமயல்.
ரேணுகா இந்தமுறை நீங்கள்தான் ட்ரைவரா.
செல்வி

சவுதி செல்வி

சாதம்
---------
மஞ்ச சோறு
புதினாசாதம்
பிசின் அரிசி சாதம் - 2
தம் பிரியாணி
ஒயிட் புலாவ்
நாஸி மிஞ்ஞா
எள்ளு சாதம்
தேங்காய்சாத
வெஜிடபிள்பிரியாணி
பிசின் அரிசி சாதம்

குழம்பு,குருமா,பொரியல்,சட்னி,துவையல்
---------------------
தால் மக்கானி
வெஜ் சம்பல்
கீரைகூட்டு
தால் வித் தேங்காய்ப்பால்
காஜு மக்கன் வாலா
புளிகத்தரிக்காய்
பாகற்காய் கூட்டு
ஹோட்டல் சாம்பார்
தேங்காய்ப்பால் ரசம்
முட்டை குழம்பு
வாழைக்காய் பொரியல்
கோஸ் பொரியல்
ஸ்வீட் மாங்காய் கிரேவி
புதினா துகையல்
பட்டர் பனீர் மசாலா
மாசிக்கறி
முட்டை பொடிமாஸ்
ஹாட்&சோர் தால்
தால் ஃபிரை
தக்காளி சட்ன
டபுள் பீன்ஸ் குருமா
சாப் சோய்
வெண்டைக்காய் மசாலா
கீரை மசியல்
நெய் கத்தரிக்காய்
சேப்பங்கிழங்கு ரோஸ்ட
பாகற்காய் சிப்ஸ்
காலி பிளவர் மஞ்சூரியன் (டிரை)
கேபேஜ் வித் தால்
காராமணி கிரேவ
வாழைக்காய் கூட்ட
முருங்கைக்கீரை பொரியல்
கீரை மசியல்
அவரைக்காய்வறுவல்

டிபன் அயிட்டம்
--------------
குல்சா
சூப்பர் தோசை
பிரட்பீஸ் மசாலா
வெஜிடபிள் காய்ச்சி
வெந்தய மாவு
முட்டை ஊத்தப்பம்
கிரில்ட் மஷ்ரூம்
இடியாப்ப பிரியாணி
டோக்ளா
பனங்கிழங்கு புட்டு
மஞ்சள் ஆப்பம்
கிரில்டு வெண்டைக்காய்
மைதா அடை
வெண் பொங்கல்
ராகி ரொட்டி
அரிசி மாவு ரொட்டி
முட்டை ரொட்டி
ஷாஃப்ட் சப்பாத்தி
வெண்டைக்காய் பிரை
மைதா கொழுகட்டை
ஆசுரா கொழுகட்டை
புல்லு கொழுகட்டை
தஹி பூரி
ரவைபணியாரம்
இன்ஸ்டன்ட் பேல்
ஜம்பாலா சப்பாத்தி
சேவ் பூரி
இனிப்பு அவல்
இடியாப்பசோறு
சாட் ஐட்டங்களுக்குறிய இனிப்புச் சட்னி
சாட் ஐட்டங்களுக்குறிய காரசட்னி

அசைவம்
---------------
ஆப்ரிக்கன் ப்ரான் பிரை
சில்லி பிஷ்
பிரான் சம்பல்
மட்டன் பக்கோடா
கஜு சிக்கன்
கிரிஸ்பி நெத்திலி மீன் பிரை
மட்டன் கோஃப்தா
பெப்பர் சிக்கன்
மட்டன் ராரா
கறிதக்கடி
நண்டு மசாலா
பெப்பர் சிக்கன்
டிரை நெத்திலி வறுவல்
மீன் உப்பாணம்
வொண்டன்ஸ் – wontons
சிக்கன் சாண்ட்விச்
சோர் மீன் ஃபிரை
டிரை நெத்திலி தொக்கு
ஸ்குயிட் கட்லட்
மீன்மசாலா
ஆட்டுக்கால் பாயா
மட்டன் குருமா
கீழை மீன்குழம்பு
தாளிச்சா
மட்டன் கபாப்
மட்டன் கட்லட்
சிக்கன் மசாலா

சிப்ஸ்,கட்லெட்,கார ஸ்நாக்ஸ்
--------------------
கொகொநட் கோஃப்தா
இனிப்பு உருளை சிப்ஸ்

பிஸ்கட் டிலைட்
வெஜ் கட்லட்
ஒரிஜினல் மசால் வடை
மைதா முறுக்கு
கார நவ தானியம்
சக்க வத்தல்
நேந்திரன் சிப்ஸ்
மைதா சிப்ஸ்
பிங்கர் சிப்ஸ்
சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல
மெது பக்கோடா
பாதாம் ரோஸ்ட்
மசாலாப் பொரி
கிரிஸ்பி வெஜ் போண்டா
மசாலா பப்பட்
கீரை வடை
தால் பிங்கர்ஸ்
எண்ணெய் குறைந்த மிக்ஸர்
பனீர் போண்டா

ஸ்வீட் ஸ்நாக்ஸ்
------------------
வேர்க்கடலை சிக்கி
இஞ்சி மிட்டாய
இனிப்புப் பொரி அரிசி
பிரட் க்ரீம் டெஸர்ட்
ஷாஃப்டி தவா கேக்
இஞ்சி பர்பி
பொருள் விளங்கா உருண்டை
குறிச்சா
பால் போளி
கடலை உருண்டை
நேந்திரன் சுக்கு வரட்டி
பப்பட ரோல்
ஓட்டுமா
ரியல் குலோப் ஜாமூன்
பொரி உருண்டை
ஃபிரைட் ரஸகுலா வித் சாக்லேட்சாஸ்
தோடம்பழஷாஃப்டிகேக்

பாயாசம், ஜூஸ்,(குடிக்க உகந்தது)
-------------
மல்லி டீ
நன்னாரி பால்
காஜு பிர்னி
ரோஸ்மில்க்
ஃபலூடா
மசாலா பால்
நுங்கு ஜூஸ்
மாம்பழ மில்க் ஷேக்
வெந்தய பாயசம்
கொழுக்கட்டை பாயசம்
உருளைகிழங்கு பாயசம்
பொட்டுக்கடலை பாயசம்
நன்னாரி சர்பத்

சாலட், ரைத்தா
-----------
உருளைரைத்தா
கேரட் சாலட்
ஆனியன் சாலட்
நூடுல்ஸ் சூப்
வெஜிடபிள் ரைத்தா

ஊறுகாய், பொடி,(நீண்ட நாட்களுக்கு வைத்து கொள்ள)
-------------------------
அசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்
வெங்காய வடகம்
சில்லி பேஸ்ட்
முறுக்கு மிக்ஸ்
மாங்காய்ப்பாகு
இட்லிப்பொடி
உப்பு எலுமிச்சை
இடியாப்பமாவு
இஞ்சி குல்கந்து
கறிப்பொடி
கறிமசாலா
சில்லி பிளேக்ஸ்
ஸ்வீட்பாக்கு
டொமட்டோ கெட்ச்சப்
நன்னாரி சிரப்
மசாலா பாக்கு(இன்னொரு வகை)
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
அச்சார்
ஆம்சூர் பவுடர்

தோழிகளே அனைவரும் ஈசியா கண்டுபிடித்து செய்ய பிரித்து போட்டுள்ளேன்,இது அத்தனையும் சரி என்று சொல்ல மாட்டேன்,சிலவற்றை எங்கே சேர்ப்பது என தெரியாமல் ரெம்ப குழம்பி போய் போட்டூள்ளேன்,

சாதிகா அக்கா தவறு இருந்தால் பொறுத்துகொள்ளுங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்

இது நேற்றே அரைத்து விட்டேன் ஆனால் இந்த பகுதி இன்றூ தான் கண்ணில் பட்டது, அதிராவிற்கு தலையிடி வந்த்தால் கொஞ்சம் லேட்டா ஆரம்பித்து விட்டார்கள் போல.

ரேணுகா இந்த கணவெல்லாம் காணக்கூடாது, பாட்டும் பாடக் கூடாது சரியா.

Jaleelakamal

ரேணுகா யு ஆர் டூ கிரேட்
அட பொருமையின் சிகரமே, என்னாலே என் குறிப்பை பிரிக்க முடியாது.
எம்மாடி எப்படி பா இப்படி,

Jaleelakamal

திருமதி.ஹூசைன்,கணக்கில் வராது தான்,இருப்பினும் உங்கள் ஆர்வம் கொஞ்சம் பொறுத்து வந்திருக்கலாம்,இன்னொரு முறை செய்திடுங்கோ சரியாயிடும்

ஜலிலா அக்கா நீங்கள் முடிந்தவரை சமைத்தாலே சந்தோஷ்ம் தான்

செல்வி நீங்களும் வந்தாச்சா?செடியில் பூ பூத்ததா?
நான் வந்து பார்த்து யாரும் காணவில்லை,அதனால் தான் எனக்கு முதல் இடம்.நான் டிரைவரா இருந்தா பயப்படுவீங்களா?நல்லா ஓட்டுபவர் யாருன்னு சொல்லுங்க அவங்களையே ஓட்டுனர் ஆக்கிடலாம்

ஜலிலா அக்கா என்ன கனவு காணகூடாது?புரியல,புரியும் படி சொல்லுங்கள்

திருமதி,ஹுசைன்,ஜலிலா அக்கா,செல்வி இந்தாங்க களைப்பா வந்துஇருப்ப்பீங்க, ஐஸ் வாட்டார் குடிங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அதிரா எப்படி இருக்கீங்க. நலமா. தலையிடி இப்போ எப்படி இருக்கு. பிள்ளைகளுக்கு ஸ்கூல் திறந்தாச்சு பிஸியா இருப்பீங்கனு பார்த்தா. செல்லப்பிராணி த்ரெட்டெல்லாம் போட்டு கலக்குறீங்க.

ரேணுகா நலமா இருக்கீங்களாப்பா. கோகுல் சமத்தா ஸ்கூல் போறாரா. நல்ல படிக்கிறாரா. நல்ல அழகா பிரிச்சு போட்டுருக்கீங்க சாதிக்கா அக்கா சமையலை.

நான் செய்தது, ஹோட்டல் சாம்பார், பாகற்காய் கூட்டு, கீரை மசியல், பன்னீர் போண்டா, மாசிக்கறி, முட்டை பொடிமாஸ். அனைத்தும் சுவை சூப்பர். சாதிக்கா கை வண்ணம் சொல்லவும் வேண்டுமா டாப்போ டாப். பின்னூட்டம் இரவுதான் கொடுக்க வேண்டும் அறுசுவை இப்போது பிஸியா இருக்கு நெட்வொர்க் எரர் வருது. காலையிலே சமைத்ததால் எல்லாம் ஈஸியா ஓபன் ஆச்சு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்