வீட்டு உபயோக பொருட்கள்

நான் தற்போது ஜப்பானில் வசிக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் சென்னையில் செட்டில் ஆக போகிறோம். வீட்டிற்கு உடனடி தேவையான Mixie, Grinder, Fridge, Washing machine போன்றவை எந்த Brand, எந்த model வாங்கினால் நல்லது (இரண்டு நபர்களுக்கு). இங்கே வந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது , அதனால் தற்போதைய பெஸ்ட் Brands and models குறித்து தெரியவில்லை. <!--break-->

மேலும் சென்னையில் குளிக்க உபயோகிக்கும் தண்ணீர் முகம் மற்றும் உடலை கருக்க செய்யும் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் என்று கேள்விபட்டுளேன். எதாவது purifier or machine பொருத்தினால் அதை குறைக்க முடியுமா ? நான் சென்னையில் வசித்தது இல்லை. <!--break-->

உங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன். தோழிகள் உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.<!--break-->

நன்றி <!--break-->

G.சஞ்சு.

hi anju naangal saudi arabiavil erukkiran, naangal madurailirunthu varum poluthu oru water purified kondu vanthoom. athu normal tapell connect seythaal poothum. water Bisleri vida good taste, athu eppoluthu ella edathilum kidaikirathu. water best and taste.

நான் purifier குடிநீருக்காக கேட்கவில்லை, குளிக்கும் தண்ணீரின் உப்பின் அளவை கட்டுப்படுத்த கருவி இருப்பதாக கேள்விபட்டுளேன், (water softner) ஆனால் அது பற்றி விவரங்கள் (cost, maintainence, etc) தெரியவில்லை.

உங்கள் பதிலுக்கு நன்றி.

Sanju

நான் திருமணம் முடிந்ததும் இங்கே வந்து விட்டேன். நாங்கள் இங்கே இருப்பது full-furnished home, அதனால் இது போன்ற பொருட்கள் எதுவும் இதுவரை நான் சென்று வாங்கியது இல்லை. கணவர் இந்த பொறுப்பை என்னிடம் தந்து விட்டார், அதனால் தோழிகள் உதவுங்கள் ப்ளீஸ்......

Sanju

புது வீட்டிற்கு தேவையான தரமான வீட்டு உபயோக பொருட்கள் name(brands) சொல்லுங்க பா

வீட்டு உபயோக பொருட்கள் என்னென்ன என்று சொல்லுங்கள்..நான் Brand சொல்கிறேன்..:)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அபி பிரிட்ஜ்,வாஷிங் மெஷின்,மிக்ஸி,கிரைண்டர், குக்கர்,பாத்திர வகைகள்,ஏசி,இன்வெட்டர், வாட்டர் ஹுட்டர், எல் இ டி இ‌வ்வளவு தான் நியாபகம் இருக்கு பா.

//இ‌வ்வளவு தான் நியாபகம் இருக்கு பா.// அப்படின்னா நீங்கள் லிஸ்ட் போட்டு இதெல்லாம் நீங்கள் வாங்க‌ போறீர்களா ?

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ..

பிரிட்ஜ் ‍ - LG
வாஷிங் மெஷின் ‍ - IFB / LG
மிக்ஸி ‍ - Preethi (ப்ரீத்திக்கு நான் கேரண்டி)
குக்கர் / பாத்திரவகைகள் ‍ - நிறைய‌ பிராண்டுகள் வந்து விட்டது.. சரியாக‌ தெரியவில்லை.. மொத்த‌ கடையானால் ஒரே பிராண்டில் எல்லா பாத்திர‌ வகைகளையும் வாங்கிவிடலாம்.. ஆனால் எங்கள் வீட்டில் உள்ள‌ பாத்திரங்கள் ஆனந்தா பிராண்டு.
இன்வெர்ட்டர் ‍- V-Guard
ஏசி ‍- Voltas / Blue Star / LG

இவ்வளவு தான் பா எனக்கு தெரிந்தது..

- பிரேமா

நான் use பண்ற Brand எல்லாம் நல்லாவே இருக்கு. இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை..

பிரிட்ஜ் Samsung நன்றாக இருக்கும்..இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை..வாஷிங் மெஷின் ifb வைத்திருக்கிறேன் அதுவும் பிரச்சனை வராது.mixie preethi வாங்கலாம்.grinder preethi யே வாங்கலாம்..cooker prestige நல்லா இருக்கும்.பாத்திரம் நீங்கள் லோகல் கடைகளில் பார்த்து தரமாக வாங்கலாம். AC voltas ,onida இரண்டும் இருக்கு நல்லாவே இருக்கும்.led sony செம்ம சூப்பர். இன்வெட்டருக்கு பேட்டரி தான் மிக முக்கியம்.. Exide நன்றாக இருக்கு..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி பா, ஆமா prema நா இந்தியா போகிறேன் அங்க உபயோகிக்க தான். List ல எதாவது விட்ருந்தா நியாபகம் வந்ததும் கேட்கிறேன் யாரும் திட்டாதேங்க

நானும் பிரிஜ்‍‍‍‍‍ வாசிங்மிசன்= சாம்சங் தான் உபயோகிக்கறேன் நல்லா இருக்கு, குக்கர் மற்ற‌ நான்ஷ்டிக்& இன்டக்சன் வகைகள் ல‌ ஐடியல்&பிரீத்தி பெட்டர், டிவி சம்சங் & சோனி பெட்டர்

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்