தேதி: April 27, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – 5 இலை
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பினை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

பின்னர் பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

அரைத்து வைத்துள்ள பாசிபருப்புடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவினை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான பாசிப்பருப்பு வடை ரெடி. மிகவும் சுலபமாக செய்ய கூடியது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

Comments
anbu geetha, migavum
anbu geetha,
migavum thelivana pictures udan arumaiyaana elimaiyana kurippu...
sila doubts erukkiradhu.. maavu araithavudan suda venduma? soda bi carb serkka thevai ellaya? soft and crispyaaga varuma? nandri.. endru seyavendum endha kurippai...
கீதாஆச்சல்
ஹாய் கீதா நலமாய் இருக்கீங்களா? பாசிப்பருப்புவடை பார்க்க மிகவும் சுலபமாக இருக்கிறது, செய்து பார்த்துவிட்டு குறிப்பு எழுதுகிறேன். உங்க போளி செய்துபார்த்துவிட்டு படமும் அனுப்பி, அட்மின் அதை போட்டுவிட்டார். நீங்க அதைப்பார்க்கவில்லையா? ந்ன்றாகவும், டேஸ்டாகவும் வந்திருந்தது, நன்றி. அன்புடன் அம்முலு.
paasi paruppu vadai
Forward ,ever forward ,without fear and without hesitation.
hi geetha
i'm new to this arusuvai,ur recipes'r kids friendly,
this vadai 'll be a healthy food for kids.
Forward ,ever forward ,without fear and without hesitation.