உருளைக்கிழங்கு டிப்

தேதி: April 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு- 1 பெரியது.
சிறிய வெங்காயம்-3
தக்காளி விழுது- 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை ஜுஸ்-அரை ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது- கால் ஸ்பூன்
மயோனைஸ் சாஸ்- 3 அல்லது 4 மேசைக்கரண்டி
எண்ணெய்- 2 ஸ்பூன்
தேவையான உப்பு


 

உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
சின்ன வெங்காயம் மிகப்பொடியாக அரிந்து எண்ணெயில் இளஞ்சூட்டில் வதக்கவும்.
பின் பூண்டு, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
உருளைக்கிழங்கைச் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு கிளறவும்.
தீயை விட்டு எடுத்து எலுமிச்சை ஜுஸைக்கலந்து நன்கு கிளறவும்.
பிறகு அதை ஆற வைக்கவும்.
பின் மயோனைஸைக் கலக்கவும்.
இரு பிரெட் ஸ்லைஸ்களை சிறிது டோஸ்ட் செய்து ஒவ்வொன்றிலும் ஒரு பக்கம் நன்கு இதைத் தடவி இரண்டையும் ஒன்றாக்கி சாப்பிடவும்.


சாண்ட்விச்சின் உள்ளே தடவக்கூடிய சுவையான மசாலா இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த சேன்ட்விச்கள் எல்லாம் இனி ஒவ்வொன்றாக செய்து பார்கக் வேண்டும்..கரெக்டாக எனக்கு தேவைப்பட்ட சமயம் பார்த்து குறிப்பை கொடுத்து விட்டீர்கள்...நன்றி நன்றி மிக்க நன்றி