எதனைப் பற்றி இங்கு உரையாடலாம்?

உணவு விடுதிகள் என்ற பிரிவில் எதைப் பற்றி உரையாடலாம்?

உணவு விடுதிகளில் சாப்பிடுவது என்பது இன்று பலருக்கும் கட்டாயமாகப் போய்விட்டது. ஏராளமான உணவு விடுதிகள் இருந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் பிரபலமான உணவு விடுதிகள் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிலேயே இருக்கும். நீங்கள் சாப்பிட்ட நல்ல உணவு விடுதிகள், அங்கு கிடைத்த சிறப்பு உணவு இதனைப் பற்றியெல்லாம் இவ்விடம் உங்கள் கருத்துக்களைக் கூறலாம். அதோடு மட்டுமன்றி உணவு விடுதிகளில் உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத, சுவையான, கசப்பான அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அல்லாஹு அக்பர்...
சகோதரிகளே,உங்களுக்கு சென்னையில் தெரிந்த நல்ல கேட்டரிங் (நான் வெஜ்) இருந்தால் சொல்லுங்களேன்.சமீபத்தில் கலந்து கொண்ட உற்வினர் வீட்டு பங்ஷனுக்கு சென்று வந்த தோழிகள் அங்கு சாப்பிட்ட மெனு,கேட்டரிங் பெயர், சொல்லுங்களேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website


என்ன சரிதானெ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கு ஏற்பட்ட கசப்பான ஒரு சம்பவம், நாணும் என்னோட ஃப்ரண்ட்சும் ___ ஹோட்டலுக்கு போயிருந்தோம், தமிழ்நாடு முழுக்க கிளைகள் கொண்ட நல்ல சைவ உணவகம், எங்க கெட்ட நேரம், அவங்க அன்னிக்கு டம்ளர் எல்லாம் க்ளீன் பண்ணாம் மறுபடியும் அதுல தண்ணி எடுத்து வச்சுட்டு போய்ட்டாங்க.

எப்பவுமே டம்ளர்ல பாத்துட்டு தான் என் தோழி தண்ணி குடிப்பா, அன்னிக்குன்னு அவளும் பாக்காமலே குடிக்க, டம்ளர் அசிங்கமா இருந்ததை பாத்துட்டு ஒரே வாந்திதான், அப்புறம் ஹோட்டல்ல supervisor கூப்பிட்டு ஒரே complaint

அன்புடன்
பவித்ரா


எல்லாரும் இங்கு வரும்படி கேட்டுக்கறேன்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வந்தாச்சு

அன்புடன்
பவித்ரா

மாமி நானும் வந்துட்டேன்......

சொல்லுங்கோ....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


எங்க ஊர்ல ஒரு ஹோட்டல்ல ‘இன்றே கடைசி’னு போட்டிருந்தா
நேக்கு ரொம்ப பயமாயிடுத்து.
சினிமா தியேட்டர்லதானே இப்படி போடுவானு நெனச்சுண்டு போய் கேட்டா
அந்த சைவ ஹோட்டல் நாளைமுதல் அசைவமாகபோறதுனு சொல்றா!
ஹோட்டல் பேர் தெரியுமோ
”சுபம்”

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


நாங்கல்லாம் காசிக்கு பேர்ந்தோம்.திரும்பி வரப்போ ஒரே மழை.ட்ரெயின கல்கத்தால நிருத்திட்டாங்கொ.
நங்கல்லாம் சின்ன கொழந்தேள்.ஸ்டெஷன்ல இருந்த ஹோட்டல்ல போய்
சாப்டோம்.
எங்கம்மா தயிர் கேட்டாங்கோ. சாப்பாடு போட்டவன் ஹிந்தில என்னவோ சொன்னான்
எங்கம்மாக்கு கொவம் வந்துடுத்து. ’ஏண்டா கடங்காரா! அங்க நெறைய தயிர கப்பு கப்பா வெச்சிண்டு வையரியா? படவா ஒன்னை என்ன பண்றேன் பார்.’னு சத்தம் போட ஆரம்பிச்சுட்டா.
கடோசிலெ ஹிந்தி& தமிழ் தெர்ஞ்சவர் வந்து ’அம்மா நீங்க சொல்றது அவனுக்கு புரியல்லை. அதைதான் சொல்ரான்னு சொன்னதும் ‘ அம்மாக்கு ஒரே ஷை ஆயிடுத்து.
இப்பவும் நாங்க அதை சொன்னா அம்மாக்கு வெக்கம் வந்துடும்
.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி....

பாவம் மாமி அம்மா.... கிண்டல் பண்ணாதேள்...

நான் சின்னப்பொண்ணா இருந்தப்போ.... எங்கப்பா என்னை மதுரை ல ஹோட்டல் கூட்டிண்டு போனார்... ஹோட்டல் பேரு காலேஜ் ஹவுஸ் னு நினைக்கிறேன்....

உனக்கும் உன் அண்ணாக்கும் சேர்த்து ஒரே ஒரு தோசை தான் ஆர்டா் பண்ணுவேன்... அதுக்கு மேல ஒண்ணும் கேக்கப்டாதுனு சொன்னார்.....

எனக்கும் எங்கண்ணாக்கும் ஒரே கோபம்..... ஒரு தோசை ரெண்டு பேருக்கு எப்படி போதும்னு சண்டை...

எங்கப்பா முடியவே முடியாது... எவ்ளோ பசியா இருந்தாலும் வர்றத அட்ஐஸ்ட் பண்ணிக்கோங்கோ... என்கிட்ட காசுல்ல னு சொல்லிட்டார்... நாங்களும் கடைசியா சரின்னு சொல்லிட்டோம்....

ஆனா அப்பா ஆர்டா் பண்ண தோசைய எங்க ரெண்டு பேராலயும் சேர்த்து கூட காலி பண்ண முடியல..... அது ராக்கெட் தோசையாம்......... ரொம்ப ரொம்ப பெரிசா இருந்தது..... அப்பறம் அப்பாவும் சேர்ந்து சாப்பிட்டு காலி பண்ணினோம்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்