கொத்துக்கறி கயிறு கட்டி கோலா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்துக் கறி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 15 பல்
சோம்புப்பொடி - ஒரு தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 100 கிராம்
கசகசா - 25 கிராம்
தேங்காய் பூ - ஒரு மூடி
முந்திரிபருப்பு - 50 கிராம்
கரம்மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வாழை நார் - சிறிது
எண்ணெய் - பொரித்து எடுக்க


 

தேங்காய்ப்பூ, கசகசா, பொட்டுக்கடலை மூன்றையும் வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு சட்டியில் உள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
இஞ்சி விழுது, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாதூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த கொத்துக்கறியை சேர்த்து நன்கு வதக்கவும். கறி வதங்கியவுடன் பொடி பண்ணிய தேங்காய் பூ கலவையை கொட்டிக் கிளறவும்.
அதன் பின் வறுத்த முந்திரியைச் சேர்த்து வதக்கவும். உப்பு தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
கலவை எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி வேறு கிண்ணத்தில் மாற்றி சிறிது ஆறவிடவும்.
ஆறிய பிறகு எலுமிச்சை பழம் அளவு உருண்டை உருட்டி அதன் மேல் வாழை நார் கொண்டு சுற்றவும்.
எல்லா உருண்டைகளையும் தயார் செய்து பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்