கனடாவிற்க்கு என்னவெல்லாம் எடுத்துச் செல்லலாம்

ஹலோ தோழிகளே,
நான் இந்தியாவில் வசிக்கிறேன். எனது கணவரின் அலுவலக வேலையாக கனடாவிற்க்கு 3 மாதம் செல்லவிருக்கிறோம். இந்தியாவில் இருந்து என்னவெல்லாம் எடுத்துச் செல்லலாம்.(3 மாத தேவைக்கு).எதை எல்லாம் அனுமதிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றி.
சுருதி.

நீங்கள் கனடாவில் எங்கு போக போகின்றீர்கள். Toronto எனில் அங்கு நிறைய இந்தியன், இலங்கை கடைகள் இருக்கு. கனடியன் கஸ்டம்ஸில் பாலில் செய்த பொருட்கள், கருவாடுகள், காய்கறிகள் எதையும் அனுமதிக்க மாட்டார்கள். துணிகள் எவ்வளவு வேண்டும் என்றாலும் கொண்டு வரலாம். பாக்கெட்டுகளில் அடைத்த மிளகாய் பொடி, மற்ற பொடிகள் கொண்டு வரலாம். பிறகு ஞாபகம் வரும் போது எழுதுகிறேன்.
vaany

நன்றி,
நாங்கள் windsor,ontarioவிற்க்கு செல்கிறோம். அங்கு இந்தியன் கடைகள் உள்ளதா?. முக்கியமாக அரிசி கிடைக்குமா?.கனடாவில் உள்ளவர்கள் தயவு செய்து பதில் போடவும்.
suruthi

நான் நோர்வைஜில் வசிக்கிறேன். ஆனால் பலதடவை கனடா சென்று வந்துள்ளேன். அங்கு பல இந்தியன் கடைகள் உண்டு.நீங்கள் சாப்பாட்டுப்பெருட்கள் எதுவும் கொண்டுபோக தேவைஇல்லை, தவிரவும் எயபோட்டில் எதுவும் விடமாட்டார்கள்.உங்கள் பிரயாணம் நன்றாக அமைய வாழ்த்துகின்றேன்:) அன்புடன் ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வணக்கம்
நானும் கனடா தான், நீங்கள் போகும் பகுதியில் டோரோண்டோவில் இருபது போல இந்தியன் கடைகள் இல்லைமா. அப்படியே இருந்தாலும் விலை கொஞ்சம் அதிகம் இருக்கும். விண்ட்சொர் ரொம்ப நல்ல இடம். மசாலா பொடி மிளகாய்த்தூள் எடுத்து செல்லுங்கள், மற்றும்படி எல்லாம் வால்மார்ட் இல கிடைக்கும். ஏன் ஆச்சியின் தாய்வீடு சீதனதைகொண்டு செல்லுங்கள்:) குறிப்பாக எந்த ஏரியா என்று சொன்னால் மேலும் விசாரித்து சொல்லுவேன்.
நட்புடன் செல்விபாபு

அரிசியை பற்றி கவலை வேண்டம். அங்கு கிடைக்கும். பாஸ்மதி தானே??? டோரோண்டோவில் யாரும் நண்பர் இருத்தல் வங்கி வரலாம் , நீங்கள் விரும்பினால் நானே நீங்க விரும்புவதை வங்கி தருவேன். என்னுடன் கதைக்க விரும்பினால் சொல்லுங்கள் மெயில் தருகிறேன்.
நட்புடன் செல்விபாபு

செல்விபாபு, நீங்கள் toronto வா? நான் அமெரிக்கா, என் அப்பா, அம்மா கனடா(victoria park) தான்.

செல்விபாபு, நீங்கள் toronto வா? நான் அமெரிக்கா, என் அப்பா, அம்மா கனடா(victoria park) தான்.
vaany

ஆமாம் வாணி நான் இருக்குமிடம் டொரோண்டோ தான் படித்துக்கொண்டு இருப்பதால் usa இல இருக்கிறேன்

இங்கு எங்கே இருக்கிறீர்கள் விருப்பமிருந்தால் சொல்லுங்கள். நான் இருப்பது மேரிலாண்டில்.

வாணி எங்கு இருப்பது என்று சொல்வதில் என்ன விருப்பு வெறுப்பு இருகபோகிறது? நான் indiana வில் இருக்கிறேன்.அங்கு காலநிலை இப்படி, இங்கு டொரோண்டோ என்ன காலநிலையோ அதே தான்.நான் தனியே தான் இருக்கிறேன், கணவர் டோரோண்டோவில் வேலை செய்கிறார். அப்போ அப்போ வந்து போவர், லீவு கிடைக்கும் பொது நானும் போவேன். உங்கள் அடுத்த கேள்வி இதுவாக தான் இருக்கும் அதுதான் இப்பவே சொல்லிவிடேன். ஹ ஹா ஹாஆஆஆஆ

மேலும் சில பதிவுகள்