தொழிலாளர் தினம்

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்...

இன்று மே ஒன்று....தொழிலாளர் தினம்....

நூறு வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் உழைத்தார்கள் உழைப்பாளிகள்... உங்களுக்கு தெரியாததையா சொல்ல போகிறேன்...ம்ம்ம்ம்...

எட்டு மணி நேரம் தான் வேலை பார்ப்போம் என்று சொல்லி போராட்டம் எல்லா இடங்களும் நடந்தது... அப்படி போராடியவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது... அவர்கள் சிந்திய ரத்தத்தின் நினைவாக நாம் இன்று தொழிலாளர் தினமாக... சரி முடிச்சுக்கிறேன்....

அப்படி அவர்கள் போராடி இருக்கா விட்டால் நான் இப்படி சொகுசா இருக்க முடியாது... நான் இன்று இல்லை... எல்லாருக்கும் அப்படி தான்.... என்னை கேட்டா அறுசுவை உறுப்பினர்கள் இந்த தினத்தை கொஞ்சம் அதிகமாக நினைவு கூர வேண்டிய நாள்.... பின்ன... உங்க வீட்டு தலைவர்கள் எல்லாரும் சீக்கிரம் வீடு திரும்ப வழி வகுத்தவை மேற்சொன்ன தொழிலாளர் போராட்டம் தானே...
எல்லாரும் நினைவு கூருவோம்..... "பாதையை தேடாதே.. உருவாக்கு" - புரட்சியாளர் லெனின் சொன்னதையும் உரத்து கூறுவோம்...

அப்புறம் என்னை விசாரிச்சு இருக்கிற சில பதில் மொழிகளுக்கு அப்புறம் வந்து, ரீ பதில் மொழி கொடுக்கிறேன்... ஹி ஹி...

நல்லது... மீண்டும் பாக்கலாம்...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

எப்படி இருக்கீங்க? இவ்ளோ நாளா எங்க போயீருந்தீங்க? ரொம்ப பிஸியா? ரொம்ப பேர் அருசுவைல உங்கள தேடினாங்க..மே முதல் தேதிக்கு வாழ்த்து சொல்ல மட்டும் தான் வரணும்னு நினைச்சீங்களோ?

///உங்க வீட்டு தலைவர்கள் எல்லாரும் சீக்கிரம் வீடு திரும்ப வழி வகுத்தவை மேற்சொன்ன தொழிலாளர் போராட்டம் தானே...///

என்னப்பா எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா? நேரம் பார்த்து உழைக்க முடியுமா? காலைல போறவங்க தான்,திரும்பி வர எவ்ளோ நேரம்ன்னாலும் ஆகுது,விடிய விடிய ஆபிஸ்ல இருந்துட்டு காலைல கூட வரமா அடுத்தநாள் சாயந்தரம் கூட வர வேண்டி இருக்குங்க..யாருக்கு அது இப்படி நேரத்துக்கு வரமுடியுமோ இங்க அப்படி இல்ல..

இருந்தாலும் உங்களுக்கும் தோழிகள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்..

ஹாய் அருண், மீண்டும் நல்வரவு.
எனக்கு இங்கு இரண்டாம் தேதி ஆகி விட்டது. பரவாயில்லை. சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வணக்கம் வந்தனம் தாமரைச்செல்வி... ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை பதில் போடுவது போல நம்ம நிலைமை ஆகி போச்சு.... எப்படியோ ஒரு வழியா மீண்டும் பதில் மொழி கொடுக்கிறேன்-ல...

அப்புறம் சந்தோஷ் எப்படி இருக்கார்??? ம்ம்ம்... நம்ம பக்கம் எல்லாம் நல்ல படியா போகுது... நேரம் இருக்கிற அப்போ குசலம் விசாரிக்கவும்... ஹி ஹி...

எஸ் இமா அம்மா... நலம் நலம் அறிய அவா.... எப்படி நம்ம தமிழ்???? அறுசுவை பக்கம் வரல... பசங்களுக்கு சரியா மெயில் பண்ணல... நண்பர்கள் வீட்டுக்கு போகல... வீட்டுக்கு போன் பண்ணல என்ற என் மீதான எக்கச்சக்க புகார்களுக்கு நடுவே இந்த பதில் மொழி கொடுத்து இருக்கேன்.. சோ சீக்கிரம் பதில் போடுங்க அம்மா...

மற்ற படி என் நல விரும்பிகளுக்கு ஸ்பெஷல் warm wishes...நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்... அப்புறம் நீங்க பதில் போடுங்க... சீக்கிரம் மறுமொழி அனுப்புறேன்... ஏனென்றால் பாஸ் ரெண்டு நாளைக்கு வர மாட்டார்... ஹி ஹி...

நல்லது...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

அருண் மகன், நானும் நலம். தொழிலாளர் தினத்தின் கீழ் வந்து அரட்டை நடக்கிறதா? :)

எனக்கு 'மே தினம்' என்று நினைத்தால் முதலில் 86ல் கொழும்பில் நான் பார்த்த பயங்கரமான காட்சிகள்தான் நினைவு வரும். சுதந்திரச் சதுக்கத்தில் அன்று நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து கலவரம், சிறிது நேரம் கழித்து அவ்வழியே போக வேண்டிய கட்டாயம். தெருவெங்கும் ரத்தம் வெள்ளம், இன்றுவரை அந்தப் பயங்கரமான காட்சி என் மனதை விட்டு அகலவில்லை. முன்பு இங்கே பதிவு போடுகையில் கூட அந்தக் காட்சி அப்படியே கண் முன்னே வந்தது. :(

//ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை//
அப்படியானால் இனி பதிவு ஆடி மாதம்தானா? அமாவாசை எப்போது?

தமிழ் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கும் நல்..ல தமிழ் தெரியும், ஆனால் அந்த 'எஸ்', 'சோ' ??? புரியவில்லை. :( ஒரு வேளை மழை பொழிகிறதோ?? :)
என்னிடம் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லி ஆயிற்று. அருண் இனி இரண்டாவது கேள்வியைக் கேட்கலாம். :)

பாஸ் ரெண்டு நாளைக்கு பாம்பே போய்ட்டாரா? அதுதானே பார்த்தேன். பூனையில்லாத வீட்டில் எலிக்குக் கொண்டாட்டம். இப்பிடியாவது அறுசுவைக்கு வர்றீங்க. :)
பாஹ்ரெய்னில் இப்ப மத்தியானம் ஆகி இருக்குமே, என்ன லன்ச்?

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மே 1ல் எழுதிய பதிவிற்கு ஜீன் 14ல் பதில், அடே அப்பா இவ்ளோ சீக்கிரம் பதில், சமீபத்திய பதிவில பார்த்தேன் யாரு இது இந்த திரட்ல திரும்ப இப்போ வாழ்த்து சொல்லி இருக்காங்கனு...இருந்தாலும் ரொம்ம்ப சந்தோசம் உங்க பதில் பார்த்து, அதோட என் பையன் பேரையும் மறக்காமல் யாபகமா விசாரிச்சு இருக்கீங்க...நன்றி..

இப்போதான் ஊருக்கு போய்ட்டு வந்து இருக்கேன்,இனி பிஸி இல்ல, அதனால அடிக்கடி குசலம் விசாரிக்கிறேன்,,, அருண் நலமா? சாப்பாடு ஆச்சா? கொஞ்ச நேரத்துல திரும்பவும் மறுபடி விசாரிக்கிறேன்...

மேலும் சில பதிவுகள்