அவசரமாக உதவவும்

எங்கள் வீட்டில் வீடு குடிபூரல் (கிரகப்பிரவேசம்)செய்ய இருக்கிறோம் அந்த நேரம்
மாதவிடாய் வரும் நேரம் பயமாக இருக்குது. மாதவிடாய் வருவதை இரண்டு நாளைக்கு தள்ளி வைப்பதற்கு ஏதாவது கைமருந்து இருக்குதா? இருந்தால் அறுசுவை தோழிகள் வந்து சொல்லுங்கள்.

சிமி

ஹாய் சிமி!
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை மென்று சாப்பிட்டால் பீரியட்ஸ் தள்ளிப்போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு என்றால் 2 நாட்களுக்குமே சாப்பிட வேண்டும்!
இது நான் ட்ரை பண்ணியதில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன்!

நான் இந்த முறையில் செய்து பார்க்கிறேன் உடனடியாக பதில் தந்தைமைக்கு நன்றி.

சிமி

Please................

மேலும் சில பதிவுகள்