தோழிகளின் கவனத்திற்கு... பகுதி - 2.

தோழிகள் அனைவரையும் பகுதி 2 க்கு அன்புடன் வரவேற்கிறேன்.இங்கே தங்களின் சந்தேகங்களை கேட்கலாம், பதில்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்.

நன்றி
உமா.

ஹாய் ஃபிரண்ட்ஸ்,
இன்று வீட்டில் விருந்தினர் வருகையால்,பகுதி - 2 ஐ தொடங்கி விட்டு மட்டும் செல்கிறேன். அனைவருக்கும் தவறாமல் பதில் கொடுக்கிறேன். வீட்டில் சிறிது வேலையாகிவிட்டதால் பிறகு சந்திக்கிறேன்.

கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம்
நன்றி
உமா.

கலக்குங்கோ உமா!!

உங்களோடு கை சேர்க்க இன்னொருவர்... குட்... செல்வி பாபு.... நீங்களும் கலக்குங்கோ... உங்களுக்காக டைப் செய்ய முடியாவிட்டாலும் ஒரு டிப்ஸ் -
http://www.google.com/transliterate/indic/Tamil#
இது எளிதாக இருக்கும்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

கண்டிப்பாக உமா, வந்து பதில் போடுங்கோ, அதுவரை காத்திருக்கிறோம். நீங்களும்தான் செல்விபாபு, வாங்க, உங்க வரவு நல்வரவாகுக!

செல்விபாபு, உங்க போன பதிவு (hypothyroid) பற்றி நீங்க போன பதிவில் (Part 1) விளக்கமாக எழுதி இருந்ததை படித்தேன். நீங்க சொல்லியிருந்த பல அறிகுறிகளில், எனக்கு இரண்டு மூன்று தற்போது இருக்கிறமாதிரி உள்ளது. முக்கியமா முடி கொட்டுவது, கடந்த 7,8 மாதங்களில் சும்மா எக்கச்சக்கமா கொட்டிவிட்டது. இதுபற்றி டாக்டரிடன் போன‌போது அயர்ன் சத்து இல்லை அதான் காரணம் என்று சொல்லி, டேப்லெட்ஸ் எடுத்துக்க சொன்னார்கள். இப்போதும்கூட கொஞ்சம்தான் பரவாயில்லை, ஆனாலும் இன்னும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த 7,8 மாதங்களில் எடையும் தாராளமாவே கூடியும் இருக்கு. (இது பற்றி என்னால் முழுதாக சந்தேகிக்க முடியவில்லை, ஏனென்றால் நான் நன்றாகவே அறுசுவை பார்த்து சமைத்து ருசித்துகிட்டு இருக்கேன்! :‍))
இதன் கூடவே முன்பு எப்போதும் வந்திராத அளவுக்கு முகத்தில் பரு கட்டிகள். (என்னோடது ஆயிலி ஸ்கின்+ பிம்பிள் ப்ரோன் ஸ்கின் தான்.) ஆனால், தற்சமயம் இருப்பது கொஞ்சம் தாராளமாகவே இருப்பது இப்போ டவுட்டா இருக்கு. இதுவும்கூட‌ hypothyroid -இன் அறிகுறியா?! கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ செல்விபாபு.
பி.கு. என் ப்ர‌ண்ட் ஒருவ‌ர், இந்த‌மாதிரி க‌ன்னா பின்னாவென்று க‌ட்டிக‌ள் வ‌ந்தால், அது polycystic ovary ப்ராப்ள‌மாக‌ கூட‌ இருக்க‌லாம், Gynecologist-ஐ பார்த்துவிடுங்க‌ள் என்கிறார். என‌க்கு இப்போ ஒரே குழ‌ப்பமா இருக்கு. : (
இப்போ இந்த சந்தேகத்தை ஊர்ஜித படுத்திக்க நான் என்ன பண்ணட்டும் செல்விபாபு?! டாக்டரிடன் சென்று செக் செய்ய வேண்டுமென்றால் எந்த டாக்டரிடன் செல்லவேண்டும் (PCP-?! அல்லது OB-Gyn?). அப்புறம் hypothyroid check செய்ய சொல்லி நானே கேட்கட்டுமா? இல்லை, எந்த மாதிரி இந்த பிரச்சனையை அணுக வேண்டும். எல்லா கேள்விகளுக்கும் கொஞ்ச‌ம் சிரமம் பார்க்காமல் பதில் போடுங்க, ப்ளீஸ்....

எதிர்பார்ப்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

எனக்கும் polycystic overy தான் என்று டாக்டார் கூறினார் அதை குனப்படுத்த எடைய குறைப்பதுதான் என்று கூறினார் இதைப் பத்தி உங்கள் கருத்து என்ன அதை குறைக்க வேறு வழியிருக்கிறதா எனக்கு விளக்கமாக பதில் தருங்கள்

benazirjaila

உமா,

பகுதி_1 ல் நான் போட்ட பதிவை மீண்டும் இங்கு பதிந்துருக்கிறேன், உங்கள் வசதிக்காக.
_______________________

உமா,

பதிலுக்கு நன்றி.

75 கிலோ எடையிலிருந்து ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டு டயட் & வாக்கிங் செய்து 60 கிலோவில் நிற்கிறேன். அந்த அனுபவத்தால் ஓரளவு எடையைக் கண்ட்ரோல் செய்து வைக்க முடிகிறது இப்போதும். ஆனால், சமைத்து அசத்தலாமில் கலந்து கொள்வது எனது உறுதியைத் தகர்க்கிறது இப்போ.

வயிற்றைக் குறைக்க நான் ab crunches செய்தேன், ஆனால் எனக்கு சிஸேரியன் என்பதாலோ என்னவோ, பக்க விளைவு ஏற்பட்டு இன்னும் கஷ்டப்படுகிறேன். அதனால் நான் செய்தது டிரெட்மில் வாக்கிங்க் மட்டுமே. வேறு எதுவும் முயற்சித்துக் கூடப் பார்ப்பதில்லை. எல்லாருக்கும் நான் பரிந்துரைப்பதும் அதுவே. நல்ல பயனளிப்பதும் கூட.

உடல் ஓரள‌வு சீரான எடையில் இருந்தாலும் வயிற்றில் சிறிது தொப்பை இருக்கத்தான் செய்கிறது. அதைக் குறைக்கப் பிரத்யேகமாகப் பயிற்சி செய்யப் பயமாக இருக்கிறது. ஹூலா ஹூப்ஸ் செய்ய ஆசையாக இருந்தாலும் பழைய அனுபவம் காரணமாகவும், லோயர் பேக் பெயின் காரணமாகவும், கணவர் வாங்க விடுவதேயில்லை.

உங்களின் விரிவான விளக்கத்திற்குக் காத்திருக்கிறேன், பின்னர் முடிவு செய்யலாம் என்று.

தனிஷா, நான் ட்ரெட்மில் 1200 திர்ஹம்ஸ் என்று கேர்ஃபோரில் வாங்கினேன், 4 வருடம் முன்பு. இப்பவும் பிரச்னை இல்லாமல் இருக்கிறது. கவனமாக உபயோகித்தால் போதும். இப்ப இன்னும் விலை குறைவாகக் கிடைக்கிறது. பேக் பெயின் இருப்பதால், நீங்கள் மற்ற அப்டாமன் பயிற்சிகள் ரொம்பக் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கும். என்னுடைய அனுபவப்படி, வாக்கிங்தான் பெஸ்ட். உமா, இங்கு என் அனுபவங்களைக் கூறுவதில் தவறில்லையே?

வணக்கம் செல்வி பாபு,

சென்ற பதிவில் மிக அருமையாக ஹைப்போதைராய்டு பற்றி விளக்கி விட்டீர்கள்... இந்த பதிவு எனக்கு மட்டும் இல்லாமல் பல தோழிகளுக்கும் உதவும் என்று நம்புகிறேன்.

எனக்கு தைராய்டு டெஸ்ட் செய்து 2 மாதங்களே ஆகிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை தான் அடுத்த டெஸ்ட் செய்ய வேண்டுமாம். இன்னோரு முறை டெஸ்ட் செய்து விட்டு மாத்திரை எழுதி தருவதாக மருத்துவர் சொன்னார். நீங்கள் சொல்வது போல
திடீர் எடை அதிகரிப்பு
மல சிக்கல்
தலைமுடி உதிர்வு
போன்ற அறிகுறிகள் எனக்கு இருக்கின்றன. ஆனால் மாதவிடாய் சீரகவே இருக்கிறது. உங்களுக்கு ஹைப்போ தைராய்டு இத்தனை வருடங்களாக இருக்கிறதா!!! மாத்திரைகள் இன்னும் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறீர்களா? இப்போது நார்மலாக தானே இருக்கிறது. ஹைப்போ தைராய்டு இருந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா?

///இந்த மாத்திரை கர்ப்ப காலத்திலும் எடுக்கலாம்.
tsh thyroid stimulating hormone உங்களுக்கு அதிக அளவு சுரக்கிறது அதுதான் hypothyroid. enaku இந்த நிலையில் இருத்ந்து தற்போது அதன் நிலைக்கு வந்துவிட்டது . அதனால் நீங்கள் பயந்து நடுங்கும் ஒரு பிரச்சினை அல்ல இது///

உங்களின் இந்த வார்த்தைகள் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது...

///புருவ மத்தியில் பொட்டு வைக்க வேண்டும், அங்கு தான் pituitary gland உள்ளது///

என்று நீங்கள் சொல்லிய தகவல் இதுவரை பலருக்கு தெரியாத ஒன்றாகும்...வீட்டில் இருக்கும் போது நான் அதிகம் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டேன். இப்போது தான் அதன் முக்கியத்துவம் புரிகின்றது.. நன்றி செல்வி
வீட்டில் இருக்கும் போது நான் அதிகம் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டேன். இப்போது தான் அதன் முக்கியத்துவம் புரிகின்றது.. நன்றி செல்வி

இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருப்பதாக சொல்லி இருந்தீர்கள். நேரம் கிடைக்கும் போது அடுத்த பதிவு போடுங்கள். இல்லை, டைப் செய்ய நானே ரெடி.. என் ஐடி முன் பக்கத்தில் தான் இருக்கும். விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் அன்புக்கு நன்றி.. !!!!!

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

உமா நேத்துதான் ஹஸ் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று ஆபிஸ் முடிந்து அப்படியே எளிப்டிக்கள் வாங்கி கொண்டு வீடு வந்தார். இன்றுதான் உன்னுடைய ரிப்ளே பார்த்தேன். நீ சொன்ன ஐயிட்டங்களில் ஏதாவது ஒன்று இந்த வாரம் வாங்கி விடுவ்து என இருக்கிறேன். வாங்கி விட்டு சொல்கிறேன். ரோஹித் என்ன பண்ணுகிறார் அப்ரா போல் அங்கும் சேட்டையா. உன் ஐடி நோட் பண்ணிக் கொள்கிறேன். எளிப்டிகல் பர்ப்பஸ் பற்றி சொல்லு உமா.

உசேன் எனக்கும் முதலில் த்ரெட்மில் வாங்கதான் விருப்பமாக இருந்தது 1500 திர்ஹம், 2500 திர்ஹம் எனவும் திக்கென்று ஆகிவிட்டது. எளிப்டிகல் லூலூவில் இருந்து வாங்கி வந்தார் நேற்று. நான் அன்னிக்கே பார்த்தேன் பிடிச்சிருக்கு என்று சொன்னேன். 598 திர்ஹம்ஸ். வெயிலில் வாக்கிங் நினைத்தாலும் பயமா இருக்கு உசேன். நீங்க எப்படி இப்படி வெயிட் குறைச்சீங்க. தினமும் த்ரெட் மில்லில் ஓடுவீங்களா. என் கஸின் பிஸியோதெரபிஸ்ட். அவன் நீ ஓவர் வெயிட் த்ரெட்மில்லில் ஓடினால் கால் வலி வந்துவிடும் என்று கூறினான். சைக்கிள் வாங்கி தொப்பையை குறைக்க வலிபார் என்றார். எனக்கு சைக்கிள் வாங்க இஷ்டமில்லை. உங்களோட டயட் பார்முலவ கொஞ்சம் சொல்லுங்க

சுஸ்ரீ நீங்கதான் எளிப்டிகல் யூஸ் பண்ணுறீங்க அதில் நல்ல பயன் கிடைக்குதா சொல்லுங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

உமா நேத்துதான் ஹஸ் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று ஆபிஸ் முடிந்து அப்படியே எளிப்டிக்கள் வாங்கி கொண்டு வீடு வந்தார். இன்றுதான் உன்னுடைய ரிப்ளே பார்த்தேன். நீ சொன்ன ஐயிட்டங்களில் ஏதாவது ஒன்று இந்த வாரம் வாங்கி விடுவ்து என இருக்கிறேன். வாங்கி விட்டு சொல்கிறேன். ரோஹித் என்ன பண்ணுகிறார் அப்ரா போல் அங்கும் சேட்டையா. உன் ஐடி நோட் பண்ணிக் கொள்கிறேன். எளிப்டிகல் பர்ப்பஸ் பற்றி சொல்லு உமா.

உசேன் எனக்கும் முதலில் த்ரெட்மில் வாங்கதான் விருப்பமாக இருந்தது 1500 திர்ஹம், 2500 திர்ஹம் எனவும் திக்கென்று ஆகிவிட்டது. எளிப்டிகல் லூலூவில் இருந்து வாங்கி வந்தார் நேற்று. நான் அன்னிக்கே பார்த்தேன் பிடிச்சிருக்கு என்று சொன்னேன். 598 திர்ஹம்ஸ். வெயிலில் வாக்கிங் நினைத்தாலும் பயமா இருக்கு உசேன். நீங்க எப்படி இப்படி வெயிட் குறைச்சீங்க. தினமும் த்ரெட் மில்லில் ஓடுவீங்களா. என் கஸின் பிஸியோதெரபிஸ்ட். அவன் நீ ஓவர் வெயிட் த்ரெட்மில்லில் ஓடினால் கால் வலி வந்துவிடும் என்று கூறினான். சைக்கிள் வாங்கி தொப்பையை குறைக்க வலிபார் என்றார். எனக்கு சைக்கிள் வாங்க இஷ்டமில்லை. உங்களோட டயட் பார்முலவ கொஞ்சம் சொல்லுங்க

சுஸ்ரீ நீங்கதான் எளிப்டிகல் யூஸ் பண்ணுறீங்க அதில் நல்ல பயன் கிடைக்குதா சொல்லுங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா,

ஆல் த பெஸ்ட்!! உங்கள் புதிய எக்ஸர்ஸைஸ் மிஷினுக்கும், உங்களுக்கும்!!

நான் டிரெட் மில்லில் ஓட மாட்டேன்; 4, 5 கி.மி. ஸ்பீடில் ஆரம்பித்து, 8 கி.மி. வரை நடந்து பின் அதே போல் குறைத்து 4 கி.மி. ஸ்பீடில் நிறுத்துவேன். மொத்தம் 45 நிமிடங்கள்தான் நடக்க முடியும். தடங்கல் எதுவும் இல்லையென்றால் 1 மணி நேரம். வாரம் 5 நாட்கள்.

டயட் எல்லாரும் சொல்வது போலத்தான்: எண்ணெய், தேங்காய், மைதா, அரிசி, கோழி, மட்டன், பிஸ்கட்ஸ், ஸ்னாக்ஸ் எல்லாம் அறவே இல்லை என்ற அளவுக்குக் குறைத்துவிட்டேன். பழங்கள், பச்சைக் காய்கறிகள், மற்றும் வெஜிடேரியன் சாப்பாடுதான். கெஸ்ட் வந்தால் அல்லது நான் கெஸ்ட்டாகப் போனால் மட்டுமே நான்‍-வெஜ்!!

முதல் 6 மாதங்கள் வெளியில் நடந்தேன்; பெரிய வித்தியாசம் இல்லை. பின் ட்ரெட்மில்லில் நடந்தேன்; ஒரே வருடம் - 57கிலோ ஆகிவிட்டேன். இப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட் டயட் இல்லாத‌தால் 60 வரை போகும். இழுத்துப்பிடித்து 58, 59ல் நிறுத்துவேன்!!

ஒரு முக்கிய விஷயம்: எந்த மிஷினில் வொர்க்‍அவுட் செய்தாலும் குழந்தை தூங்கும்போதே செய்து விடவும். துறுதுறுவென்று ஓடும் குழந்தையோடு செய்வதில் பலனும் இருக்காது; பாதுகாப்பானதும் அல்ல; உங்களுக்குத் தெரியாத‌தா என்ன?

ஹாய் உமா வாழ்த்துக்கள் இரண்டாவது பாகம் அரம்பிதிர்ரிர்கள்.தொடந்து எழுதுங்கள் நன்றி.செல்வி பாபு உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன்.ஹுசைன் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ததுக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மேலும் சில பதிவுகள்