புலம்பல்ஸ் பகுதி :-)

ஹாய் அருசுவையின் அங்தினர்களே உங்க புலம்பல்களை இங்கே வந்து புலம்பிட்டு போங்க...

உமா வாங்க இங்கே...நாம புலம்பனே தொடங்கிட்டேன் ஹா ஹா..

எப்பவோ தொடங்குனும்னு நினைத்து இப்பதான் முடிஞ்சது சரி இவன் முழிக்குறதுக்குள்ள பதிவு போட்டுகறென்..

இரண்டாவது தடுப்பூசி போட்டாச்சு உமா நீங்க போட்டுட்டீங்களா?குழந்தைக்கு குளிப்பாட்டுறப்ப ஷேம்பு ஹேட் போட்டு தலைக்கு ஊற்றூங்க முகத்தில் த்ண்ணீர் படாது..

அப்புறம் நான் கண்ஸீவா இருக்குறப்ப ஒருத்தங்க அவங்க பெயர் சங்கீதான்னு நினைக்கிறேன் சரியா தெரியல அவங்களும் கண்ஸீவா இருந்தாங்க அவங்களுக்கு என்ன குழந்தை பிறந்ததுன்னு யாருக்கும் தெரியுமா?தெரிஞ்சவங்க பதில் பிளீஸ்

ஹாய் அருசுவையின் அங்தினர்களே உங்க புலம்பல்களை இங்கே வந்து புலம்பிட்டு போங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சங்கீதாவுக்கு பெண்குழந்தை பிறந்துருக்குனு சொன்னாங்க எல்லோரும் வாழ்த்தினோம். அதன் பிறகு இன்னும் அவங்க வரல.

நான் எப்படி உடம்பை குறைப்பதுனு புலம்பிட்டு இருக்கேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆரம்பிச்சுட்டாங்கையா

arusuvai is a wonderful website

நல்ல விஷயங்களை துடங்கினா இப்படியா லாத்தா போகட்டும் என் புலப்பம் என்னோட :D லாத்தா எனக்கு நான் கேட்ட மெயில் வரவே இல்லை

அட தனிஷா என்னை செமத்தியா ஏமார்றிட்டீங்க போங்க :( ஓஹ் அவங்க பெயர் சங்கீதாதானா நான் டவுட்டில்தான் கேட்டேன்..உடம்பை குறைக்கவா முதலில் என் வயிரை குறைக்கனும் வலி இருக்கா :(

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தனிஷா,

நான் முன்னமே சொன்னேன், மர்ழியாவிடமிருந்து நிறைய புலம்பல்களை எதிர்பார்க்கலாம்னு. இப்பப் பாருங்க, புலம்புறதுக்குன்னே தனி திரெட் ஆரம்பிச்சுட்டாங்க!!

சில நாட்களாக மலையாளம் சானெல்களில் கேட்டு வரும் செய்தி
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் 2.5 வயது ஆண் குழந்தையை திடீரென காணவில்லை
வீட்டினர் பலதூரம் சென்று தேடியும் குழந்தையை கிடைக்கவில்லை..கடைசியில் அழுகிய சடலமாக மண்டையோடு மட்டும் மிஞ்சிய நிலையில் காட்டில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது..திருட்டு நோக்கத்தில் குழந்தை கொலை செய்யப்பட்டதோ என்றால் அதுவும் இல்லை அழுகிய கைகளில்லும் இடுப்பிலும் கழுத்திலும் நகைகள் அப்படியே இருக்கிறது..பிறகென்ன காரணம்???
அதன் பின் மேற்கொண்ட விசாரனைகளில் பிடிபட்டது குழந்தையின் சித்தப்பா..அவர் கொடுத்த வாக்குமூலத்தில் பெயரில் தெரிய வந்தது பணக்கஷ்டம் வந்தபொழுது திடீரென உதித்த ஆலோசனை..குழந்தையின் நகைகளை எடுத்து கொண்டு போய் விற்று விடலாம் என
அதன் முயற்சியாக குழந்தையை தூக்கி கொண்டு யாரும் பார்க்காமல் இருக்க அருகிலுள்ள தோட்டத்துக்கு போகவே குழந்தை அழுக தொடங்க சரியாக அங்கு ஆள் நடமாட்டமும் ஏற்பட குழந்தையின் வாயையும் மூக்கையும் அடைத்தது தான் குழந்தை மூச்சடைத்து இறந்து போனது
இப்படி ஒரு உத்தேசமில்லாத சித்தப்பா பதறி குழந்தை இறந்ததறிந்து தூரமாக காட்டில் போட்டு விட்டு ஓடிவிட்டார்..
விசாரனையில் பிடிபட்டவரை காட்டுக்கு இடத்தை காண்பிக்க போலீஸ்படையுடன் வர குழந்தையின் அப்பா அவன் மேல் பாய குழந்தையின் அப்பாயென தெரியாமல் போலீஸ் குழந்தையின் அப்பாவிற்கு லாத்தியடி பார்க்கவே கண்கள் குளமாகிவிடும்...அப்படி ஒரு வேதனையாக இருக்கிறது
அவர்கள் செய்தியில் கடைசியில் சொன்னது இது தான்" குழந்தையை அலங்கரிக்க ஆசைபட்டு அவர்கள் வாழ்க்கைக்கே வேட்டு வைக்க கூடாது ...நம் பிள்ளைகளை சுற்றிலும் இது போன்றவர்கள் இருப்பதை நாம் அறிய முடியாது"
இதனை படித்து தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்...குறிப்பாக கல்யாண வீடு,விஷேஷங்களில் மிகவும் கவனம் தேவை

எல்லோர் கண்ணிலும் பட

ஹலோ தோழிக்ளே எனக்கு தின்மும் என் ஹ்ஸ்க்கு ம்திய உண்வு என்ன கொடுத்து விடுற்துனு ஒரே குழ்ப்ப்ம் ஒரே டென்ஷ்ன் எனக்கு ஒரு வீக் மெனு கொடுங்கப்ப யாராவ்து குழ்ந்தைக்கு என்ன் ஹெல்த்தியான் சாப்பாடு கொடுக்கலாம் 3 வ்ய்து குழ்ந்தைக்கு என் அம்மா வீட்டில் இருந்த்தால் ஒரு க்வ்லையும் இல்லை இப்ப இங்க் த்னியா இருக்கும் போதுதான் எல்லாம் தெரியுது ச்மைய்லுக்கு நான் வேற் புதுசு

ஆஹா ஆரம்பிச்சிட்டீங்களா நல்லது தான். நம்ம டவுட்டெல்லாம் கிளியர் பண்ணலாமே. என்னப்பா நான் அரட்டைல கேட்ட கேள்விக்கு பதில் தரலையே நீங்க சரிப்பா இப்ப கேட்கிறேன். ரோட்டா வைரஸ் வேக்சின் கண்டிப்பா குடுக்கனுமா? உங்க Dr அதைப்பத்தி சொன்னாரா ஏதும்?

இல்லைப்பா நாளைக்கழிச்சு தான் தடுப்பூசி போடப்போகனும்.

//ஷேம்பு ஹேட் போட்டு தலைக்கு ஊற்றூங்க// எனக்கு புரியலையே மர்ழி. என்னப்பா அது?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

எப்படி இருக்கீங்க?குட்டீஸ் 2ம் நல்லா இருக்காங்களா? செக்கப் போறீங்களா? உங்களோட அதிகம் பேசியதில்ல..இப்போ நீங்க சொன்ன விஷயம் படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, என் பையனும் எப்பவும் ஒரு செயின் கழுத்துல போட்டு இருக்கான், அவங்க பாட்டி போட்டது கழட்டினால் மாமியார் மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு நினைச்சு விட்டுவிட்டேன்,இப்போ கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவனே கழட்ட வேண்டாம்னு சொல்றான்..ஆனால் அவங்க அப்பாக்கு முதல்ல இருந்தே செயின் போடுறது பிடிக்கல..நானும் அட்ஜஸ்ட் பண்ணி சட்டைக்குள்ள பின் பண்ணி போட்டு விடுவேன்,வெளில போகும் போது தெரியாமல் இருக்கனும்னு கஷ்டபட்டு கவனமா இருப்பேன், நீங்க சொல்ற மாதிரி சொந்தங்களே இப்படி பண்ணினால் என்ன செய்ய முடியும்? எவ்ளோ கவனமா இருந்தாலும் அசந்ததும் ஆபத்து வந்திரும்னு நீங்க சொன்ன விஷயத்துல இருந்து புரியுது, உடனே கழட்டி வைக்க ஏற்பாடு பண்ணனும்..இது முதல்லயே தெரிஞ்சாலும் கொஞ்சம் அசால்ட்டா தான் இருக்கேன்..இனி முடியாது.. பார்க்கலாம்..நன்றி தளிகா...

மேலும் சில பதிவுகள்