அரட்டை அரட்டை அரட்டை... பகுதி 77

ஹைய்யா.........தனிஷா....உன் வேலையை நான் செய்து
விட்டேன்.தோழிகள் இங்கே அரட்டையை தொடர அன்புடன் அழைப்பது உமா.எல்லோருக்கும் குழப்பமாக இருக்கும் யாருப்பா இது புதிய ஆளு என்று...நான் ரொம்ப பழைய ஆளு தான்... எல்லோரும் அரட்டையை இங்கே தொடருங்க....நானும் முடியும் பொழுது கலந்து கொள்கிறேன்.

யாரு ஆரம்பித்தால் என்னங்க? அரட்டை தானே முக்கியம்......
"பெண்கள் இவ்வுலகில் இருக்கும் வரை அரட்டைகளும் உண்டு" - இது என் புது மொழி.

அன்புடன்
உமா,Riverside,CA,USA.

தோழிகளே...எனக்கு பலருடைய பெயர்கள் தெரியும் ஆனால் அதையெல்லாம் சொல்லி விடு பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பதை விட(என்னை தெரிந்தவர்கள் கூட என்னை பற்றி கேட்டதில்லை தெரியுமா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அரட்டைக்கு வரவே எனக்கு நேரமில்லை அப்போ எப்படி என்னை பற்றி கேட்பீர்கள்....யாரும் கோவிச்சுக்காதீர்கள்...தோழிகளே ஜாலியா அரட்டை மட்டுமே அடிங்க!!! ) அனைத்து அருசுவையின் தோழிகள்,தோழர்களை அரட்டைக்கு அழைக்கிறேன்.

நன்றி
உமா.

உமா உங்களுக்கு இருந்தாலும் ரொம்ப தன்னடக்கம் தான் ஒத்துக்கிறோம்.. அதுக்காக இப்படியா... எங்க போனாலும் என்னை யாருக்கும் தெரியாது ன்னு சொல்லிக்கிட்டு சுத்துவது? உண்மையாலுமே எங்க யாருக்கும் நீங்க தெரிய மாட்டீங்க தான்.... என்ன செய்வது??

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா,இப்படி சொன்னாலாவது யாராவது வந்து யாருப்பா இது என்று கேட்க மட்டாங்களா? என்று தான்...கேட்டா மட்டும் என்ன செய்வேன்னு கேக்கறீங்களா?எனக்கு கேட்கிறது,நீங்க சொல்றது.ஒன்னும் சொல்ல மாட்டேன்......நானும் இந்த கூட்டத்தை சேர்ந்தவ தான் என்று சொல்லுவேன்.ஏன் இவ்ளோ கோவப்படறீங்க.........என்னையும் சிலருக்கு தெரியும் என்று தானே சொல்லியிருக்கிறேன்....... தெரியாமல் சொல்லிட்டேன் தங்கச்சி சந்தனா ........அங்கே சொன்னது மறந்துவிட்டது.மன்னிச்சு விட்டுடுங்களேன்.
கோவமா பார்க்காதீங்க......எனக்கு பயமாயிருக்கு........அழுதுடுவேன்.......ஆங் ங் ங்ங்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

நான் இங்கே ஒருத்தி அடுத்த பாகம் ஆரம்பித்தும் இங்கே வராமல் முன் த்ரெடையே தொடர்கிறீர்களே தோழிகளே இது நியாயமா...சொல்லி விட்டு போங்க. இதனால் தான் நானெல்லாம் அரட்டையே தொடங்கறதில்லை,சரி பரவாயில்லப்பா நான் போய் வேலையை பார்க்கிறேன்.இப்படித்தான முன்பு ஒரு முறை தொடங்கி யாருமே கண்டுக்காமலே போய்விட்டது.

எல்லோருக்கும் வரேன்
Good bye.
உமா.

மன்றம் வந்த தென்றலுக்கு முகம் காட்ட நெஞ்சமில்லையே?? அதான் இப்படியெல்லாம் பிட்டு போட்டு பார்க்கிறேன்! ஆமா,அதென்ன ---- ---- ??? இப்படி ஒரு வித்யாசமான பேரு??
அப்புறம் இன்னிக்கு இளைப்பாறப் போலயா?? :) இளவரசியாயிட்டிங்க...வெயிட் ஒரு 5 கிலோ ஏறியிருக்க வாய்ப்பிருக்கு..கூடவே ஓய்வு வேற..ஊருக்கு வரும் போது கதவெல்லாம் இடிச்சு வைக்கணுமா?? :)

அன்புடன்,
மகி

அண்ணி அண்ணி

என்ன சொல்லறீங்க ஒண்ணுமே புரியலையே???
வழி தவறி எங்கயோ எதையோ பாத்து பயந்து குழம்பி போய் எழுதினா மாதிரி இருக்கு???

இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன்... ஹி ஹி கொஞ்ச நேரம் கழிச்சு தான் உறக்கம் பிறக்கும்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

உமா நீங்க தனியா புலம்பிகிட்டு இருக்கீங்கன்னு கம்பனி குடுக்க தான் அண்ணியும் தண்ணியும் சேந்து வந்திருக்கோம்... நாங்க பேசரத பாத்து பயந்துராதீங்க... ஆமா இப்பவே சொல்லிட்டேன்...

இதுக்கு கூப்பிடாமையே இருந்திருக்கலாம்னு நீங்க நினைக்கிறது இங்க வரைக்கும் கேட்குது...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

தூக்க கலக்கத்துல "அறுசுவை"க்குள்ள உலவுனா அப்டிதான் இருக்கும் தண்ணீ.....
சரி,அது கிடக்குது...இன்னிக்கு என்ன சமையல்???
நல்ல வேளை..உமா அவர்களிடம் நீயே சொல்லிட்டே.."நற,நற" சத்தம் கேட்குது..அவங்க தான் பல்லைக் கடிக்கறாங்கன்னு நினைக்கிறேன்...நானும் ஜுட் உட்டுகிறேன்..
உன்ன மாதிரி ஓய்வெடுக்கிற பழக்கமெல்லாம் இல்ல கண்ணு...வால்மார்ட் போறேன்...வர்ட்டா...அப்றமா கண்டுக்கலாம்!!

அன்புடன்,
மகி

கெளம்பிட்டாங்கய்யா....கெளம்பிட்டாங்க......... அண்ணீயும்,தண்ணியும் நல்லா இருக்கிறீர்களா? அதெப்படி அண்ணியும் தண்ணியும் சண்டை போடாமலே இருக்கிறீங்க?
இருக்கட்டும்...இருக்கட்டும்...நல்லது தானே.............

ஆமா சந்தனா.....இங்கே பாருங்க யாருமே அரட்டைக்கு வரதேயில்லை.எல்லோரும் ஹெல்த் கிளப் பக்கமே திசை திரும்பிட்டங்க.......எனக்கும் கூட அங்கே போக சில சமயம் போர் அடிக்குது.....என்ன பண்ணலாம் சொல்லுங்க.........

உமா மீண்டும் வருவேன்.

கிராமத்துல ஆல‌மரத்தடியில அல்லது டீககடையில‌ கூட்டம் போட்டு வம்பு வளக்குறதுக்குன்னே ஒண்ணு, ரெண்டு பேர் மட்டும் எப்பவும் இருப்பாங்க. அவங்களைத் தவிர வேற யாரும் (அங்கேயே) இருக்க மாட்டாங்க. அது மாதிரி, இந்த அண்ணியும், த்ண்ணியும் அரட்டையில பண்ற அலம்பல் இருக்கே.... பருத்தி வீரன் படத்துல வர்ற கார்த்தியும், சித்தப்பும் தான் ஞாபகத்துக்கு வருது!!

மேலும் சில பதிவுகள்