"சாதிகா" "மாலினி"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பத்து பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 13 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "சாதிகா" "மாலினி"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

அசத்தலாக எல்லோரையும் கூவி கூவி (அதாவது கத்தி கத்தி) அழைத்து சமைக்க வைத்த அதிராவுக்கும், கடமையே கண்ணாக உடம்புக்கு முடியாத நேரத்திலும் கணக்கெடுத்து போட்ட பொறுமையின் சிகரம் ரேணுகாவிற்கும் எங்கள் நன்றிகள்...

அருமையான சமையல் குறிப்புகள் கொடுத்ததோடு, அதிரா போட்ட கதிரையில் கன நேரம் கூட உட்காராமல் ஓடி ஓடி வந்து எங்கள் சந்தேகங்களை சரியாக தீர்த்து வைத்து ஊக்கும் வித்து எங்களை சமைக்க வைத்த ஸாதிகா விற்கு நன்றிகள்... ஸாதிகா இப்போதாவது கொஞ்சம் ஓய்வெடுங்கள்....
நல்ல குறிப்புகளை கொடுத்த மாலினி சுரேஷ் அவர்களுக்கும் நன்றிகள்...

வாழ்த்திய அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எங்கள் நன்றிகள்... (சித்தி லதா ஹைஸ் உட்பட)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஐயையோ ஐயோ.....
இதைக் கேட்க யாருமே இல்லையா?:), நான் தான் அசத்தல் ராணி, இந்நேரம் என்னை எல்லோரும் அழகாக வாழ்த்திக்கொண்டிருப்பார்கள், என்று கற்பனையில் மிதந்தபடியே ஓடிவந்தேனே:), இப்படிப் பண்ணிட்டார்களே!!!!, நான் நினைத்தேன் ரேணுகாவிற்கு உடல் நலமில்லையென்பதால், நிட்சயம் தப்புத்தப்பா கணக்கெடுத்து, என்னை எப்படியும் அசத்தல் ராணியாக்கிப்போடுவா என்று, சந்தனாகூடச் சொன்னார் "அதிரா நீங்க மலை என்று" நானும் அதை மலைபோல நம்பினேனே:) இப்படி ஆச்சே:).....
எல்லோருமாகச் சேர்ந்து ஒரு அப்பாவிப் பூனைக்கு மணிகட்டிவிட்டார்களே:), சரி பறவாயில்லை.... "பதின் மூன்றாவது தடவை விழுந்தவனைப் பார்த்துப் பூனைசொல்லியதாம், 12
தடவைகள் எழும்பியவரல்லவா நீ", "நன்றி பூஸ்" , நன்றி இலா(இரவல் தந்தமைக்கு வசனத்தை):). இனி என் கைகளையும் கடவுளையும் மட்டுமே நம்புவேன்,,,:) யாரையும் நம்பமாட்டேன்....:).

நம்பிக் கெட்டவர் எவரையா? உமை நம்பிக் கெட்டவர் எவரையா?......... இதோ எழுந்துவிட்டேன்.
(அதிரா உதட்டாலதான் புலம்பினேன்.... இதோ உள்ளத்தால் வாழ்த்த வருகிறேன்....... யாரும் தப்புக் கருத்துக் கொள்ளவேண்டாம்).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மனமார வாழ்த்துகிறேன்
எனக்கு என் கண்ணையே நம்ப முடியவில்லை, மெதுவாகப் போனதுபோல் தெரிந்தாலும் இத்தனை குறிப்புக்கள் செய்து அசத்திய அனைத்து தோழியருக்கும் மிக்க மிக்க நன்றி.

ஓயாது ஓடியோடி அதிகம் குறிப்புக்கள் செய்து அசத்தல் ராணியாகிவிட்ட மைதிலிக்கு என் வாழ்த்துக்கள். போட்டி போட்டுச் செய்து கடுகானாலும் காரம் பெரிதென்று காட்டியுள்ள தோழி சந்தனாவுக்கு என் வாழ்த்துக்கள்.
உடம்பு முடியவில்லை எனச் சொல்லிச் சொல்லியே எமக்காகவும் இதில் பங்கு கொண்டே தீரவேண்டும் எனவும் விடாமுயற்சியாகச் சமைத்து அசத்திவிட்ட தனிஷாவிற்கு என் வாழ்த்துக்கள்.

உடல் நலமில்லையென்றாலும் கரெக்ட்டாகக் கணக்கெடுத்துப் போட்டு எம்மை அசத்திவிட்ட ரேணுகாவிற்கு நன்றிகள்.

அத்தோடு இதில் பங்குகொண்டு, ஆசையாகவும் அக்கறையாகவும் எம்மோடு பங்குபற்றி சமைத்து அசத்திய அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். இதே போல் தொடர்ந்து எம்மோடு பங்குபற்றுங்கள் என்பதே எங்கள் ஆசை எதிர்பார்ப்பு, இதை எல்லோரும் நிட்சயம் நிறைவேற்றுவீங்களென்றே நம்புகிறேன்.

நல்ல குறிப்புக்களைத் தந்தும், எம்மோடு முட்டி மோதி தானும் சரிவரக் கூக்குரலிட்டு ரெயினில் பயணம் செய்து, அதோ களைப்படைந்து "பூஸ்ட்" குடித்துக்கொண்டிருக்கும் ஸாதிகா அக்காவுக்கும், நல்ல குறிப்புக்களைத் தந்த மாலினிக்கும் எமது நன்றிகள்.

///இன்னும் கலந்து கொண்ட ஸ்நேகிதிகள்,ஐடியா மல்லி அதிரா,கணக்கெடுத்த அதிரா அனைவருக்கும் என் நன்றி/// ஸாதிகா அக்கா ரேணுகாவின் பெயருக்கு பதில் அதிராவின் பெயரைப் போட்ட உங்களுக்கு டபிள் நன்றிகள்:) (அப்பாடா இரவுக்குள் பத்திவிடும்:) ). அதென்ன "ஐடியா மல்லி அதிரா"... புதுவிதமான பெயரெல்லாம் உணவுக்கு வைப்பதுபோல் பட்டமும் கொடுக்கிறீங்களோ?:) நல்லாவே இருக்கு:).

நான் தான் புலம்புகிறேன் என்றால் ஜலீலாக்கா நீங்களுமா? மிக்க நன்றி. ஓ கேட்டதில் என் காது அடைக்கிறது:).

தனிஷாவுக்கு மிக்க நன்றி.

லதா அக்கா, நீங்க இங்கதான் இருக்கிறீங்களா? காணவில்லையே எனத் தேடினேன். எனக்கு அறுசுவையில்தான் அதிகம் பட்டங்கள் கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. வாழ்க அறுசுவை!!!, வாழ்க மறைந்திருக்கும் ஆணிவேர்!!!!:). லதா அக்கா வீ மிஸ் யூ!!!!.

ஆஸியா மிக்க நன்றி. உங்கள் விடாமுயற்சியைக் காண உண்மையில் எனக்கு சந்தோஷமாக இருக்கு. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் உங்களை.

சந்தனாக்கும் மிக்க நன்றி:). பின்னர் வருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு ரேணுகா,உங்கள் பெயருக்கு பதிலாகா அதிராவின் பெயரை போட்டு விட்டேன்.
அதிரா,அக்காவுக்கு கத்தி கத்தி ரொம்ப களைப்பாக இருந்ததா.அதுதான் இந்த குழப்பம் :-)
ரேணுகா,உடல் நிலையை காரணம் காட்டாமல் இத்தனைப்பொறுமையாக கணக்கெடுத்து பதிவுப்போடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.தொடருங்கள் உங்கள் அரும் பணியை.
என் குறிப்புகள் கொண்ட வாரம் வந்த பொழுதுதான் இந்த திரட்டோட அருமை தெரிகின்றது.
அதிரா,இன்னும் நான் சோம்பி பூஸ்ட் குடித்துக்கொண்டிருக்கவில்லை.இதோ இன்னும் சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் வரும் சமைத்து அசத்தலாமுக்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கேனாக்கும்.(முகப்பைப்பாருங்கள்)
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜலிலா அக்கா மல்லிகை பூவா?ரெம்ப நன்றி,எனக்கு ரெம்ப பிடிக்கும் மல்லிகை.நீங்க இரண்டாவதாக வந்ததால் டிரைவர் சீட் எனக்கு வந்திட்டது,என்னிடம் கேட்டு இருந்தால் நான் குடுத்து இருப்பேன் தானேமுடியும் போது வந்து கலந்து கொள்ளுங்கள்,ஊருக்கு போறீங்களா?

ஆசியா அக்கா,தனிஷா இருவருக்கும் நன்றி

சந்தனா மலை மிளகு என்றே பட்டம் வாங்கியாச்சு
நன்றி

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

லதா அக்கா நலமா?நீங்க ஊருக்கு போய்வீடுவீர்கள் என்றதும் கவலையாகிவிட்டது,ஏனோ விட மனசு வரலை,எப்படியும் நீங்கள் இளவரசி பட்டம் வாங்குவீங்கன்னு நினைத்தேன்,ஒன்னே ஒன்னு கம்மியா போச்சு போங்க அக்கா,ஓ.கே ஊருக்கு போனாலும் எங்களை மறக்காதீங்க,எனக்கு வெயில் காலம் வந்தாலே அப்படிதான் அடிக்கடி படுத்தும்,பழகி போயிடுச்சு,நல்ல படியா போய்வாருங்கள்,அடுத்தமுறை வந்தால் 1 மாதமாவது இருங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அய்யோ இந்த அதிராவை கேட்க யாருமே இல்லையா?நான் எவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கேன்,எப்ப பார்த்தாலும் பட்டம் தரலைன்னு ஒரு சண்டை,இந்த வனிதாவ வேற கானாம்,வனி இல்லாத அதிரா சரியில்லை,வம்பு இழுக்க ஆளுஇல்லைன்னு என்னை வம்பு இழுத்துக்கிட்டு இருக்காங்க,சந்தனா மலைன்னு ஐஸ் வைச்சு உங்களை கொஞ்சம் கனவில் உட்காரவைத்து பட்டம் வாங்கிட்டாங்க,நீங்க கனவிலேயே இருங்கோ,இதுல ரேணு பட்டம் தரலை என்று எல்லாத்தையும் கூப்பிட்டு ஒரே அழுகை,
எமக்கு இந்த அப்பாவி பூனையை பார்த்தால் சிரிப்புதான்வருது,தப்பு வந்தால் எல்லாத்தை குட்டு வைக்க தூண்டிவிடுவது,இங்கு வந்து பட்டம் தர தப்புதப்பா கணக்கு எடுக்கசொல்லுவது,இது சரியில்லை,எல்லாரும் கொஞ்சம் உதவுங்க,அதிராவுக்கு ஒரு குட்டு வைக்க

சாதிகா அக்கா அதிரா பத்த வைத்தாலும் நாங்க பத்திக்கிட்டு சண்டைக்கு எல்லாம் வரமாட்டேன்,கவலை படாதீங்க,அவாவுக்கு பத்தவைக்க தெரியும் என்றால் எனக்கு பத்திக்கிட்டதை அனைக்க தெரியும்,:)அக்கா அதிரா என்னொட குறிப்பை மட்டும் கணக்கு எடுப்பாங்க,சமைக்காமல் ஓடிட்டா என்ன பண்ணுவது என்று தான்,அதனால் கணக்கு அதிராவுக்கு கவலை படாதீங்கோ

அதிரா சரிசரி இந்தாங்க,ஜில்லுன்னு ஜூஸ் குடிங்க,சமாதானம் ஆகிடுவோம்,
நல்ல பிள்ளை அல்லவா நீங்கள்,அடுத்த முறையாவது பட்டம் வெல்லுங்கள்,நான் உங்க வீட்டுக்கே வருகிறேன், வாழ்த்த,சமத்து சிரிங்க பார்க்கலாம்
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நான் அசத்தல் ராணியா ரொம்ப சந்தோஷம் பா.
நான் லேட்டாக வந்ததற்கு எல்லோரும் என்னை மன்னிக்கவும்.
நேற்று என் குட்டி பாப்பாவுக்கு ஜுரம் அதான் வரவில்லை.
இப்போ பரவாயில்லை.

ஸாதிகா அக்காவின் குறிப்பு எல்லாம் எனக்கு செய்யறதுக்கு ஈஸியா இருந்தது.
ஸாதிகா அக்காவுக்கும்,மாலினிக்கும் எனது நன்றியை தெரிவித்துகிறேன்.
அசத்தல் இளவரசிகள் தனிஷா, சந்தனா உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பா.

வாழ்த்து தெரிவித்த ஸாதிகா அக்காவிற்கு எனது நன்றி. உங்கள் ரோஜா மாலை ரொம்ப நல்ல இருக்கு அக்கா. அதை விட உங்கள் கையாலேயே சமைத்து நிஜ விருந்து தருகின்றேன் என்று சொன்னிங்கள் இதை கேட்ட எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்கள் ஸ்விட் சூப்பர் போங்க.

ஜலிலா அக்கா எப்படி இருக்கீங்க? வாழ்த்து தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றி அக்கா. கண்டிப்பா உங்கள் குறிப்பிலிருந்து KFC சிக்கன் செய்துவிட்டு பின்னூட்டம் கொடுத்து உங்களை தேடுகிறேன்.

தனிஷா வாழ்த்து தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றி.

லதா வாழ்த்து தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றி.

ஆசியா அக்கா வந்துட்டிங்களா? வாழ்த்து தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றி.

அதிரா வாழ்த்து தெரிவித்த உங்களுக்கும் எனது நன்றி.

இதை நடத்தும் கூவி.....கூவி...அழைக்கும் அதிரா மற்றும் உடல்நிலை சரியில்லத போதும் சரியான நேரதில் முடிவு அறிவித்த ரேணுகா உங்களுக்கும் எனது நன்றி பா.
சமைத்து அசத்தலாம் பகுதி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
மைதிலி

Mb

ரேணுகா என்ன இப்படிக் கேட்டிட்டீங்க?:).
என்னை மிரட்டியவர்களைக் காணவில்லை சிலகாலம்:) அனேகமாக அதிராக்குப் பயந்து புகைக்கூட்டுக்குக் கீழேதான் இருப்பார்கள் என நினைக்கிறேன்:. எங்கள் அட்மினும் அங்குதான் இருக்கிறாரோ தெரியவில்லை:), ஏனெனில் காணவில்லையே கனகாலம். ஆனால் அவர் அங்கிருந்தாலும் எனக்கா? பயமா? என்பதுபோல் சிரித்துக் கொண்டுதானிருப்பார்:), முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளமாட்டார்:), ஐயையோ எனக்கேன் இந்தக் கதையெல்லாம்:).

இருந்தாலும் ரேணுகா இத்தனை அனுபவசாலிகள், வயதில் பெரியவர்களெல்லாம் இருந்தும், யாரும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை:), நீங்கள் ஒரு சின்னப்பிள்ளை(உங்களை விடச் சின்னப்பிள்ளையும் இங்கிருப்பதாகக் கேள்விப்பட்டேன்:) ) எனக்காக எவ்வளவு ஆறுதலாகப் பதில் தந்திருக்கிறீங்கள். உங்கள் இந்தப் பொறுப்பைப் பார்த்துத்தான் சின்ன வயதிலேயே திருமணம் முடித்துக் கொடுத்தார்கள், குடும்பப்பொறுப்பான பிள்ளையென்று, என நினைக்கிறேன்:), எங்கள் வீட்டில் இப்பவும் சொல்வார்கள் அவசரப்பட்டு அதிராவை முடித்துக் கொடுத்துவிட்டோமோ:) என்று.

உங்கள் பதிலைப் படித்த பின்னர்தான், எனக்கு ஆறுதல் வந்து, இந்த சிக்கின் 65 ஐ உள்ளே தள்ளினேன்:), அதுவரை எதுவும் சாப்பிடவில்லை(உள்ளே தள்ள வயிற்றில் இடமில்லை என்பது வேறு கதை:) ). மிக்க நன்றி ரேணுகா யூஸ் தந்தமைக்கு. நான் இப்பவே சமைக்கத் தொடங்கட்டே:)? இல்லாவிட்டால் பட்டம் கிடைக்காதெல்லோ:)?

மைதிலி மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சமைத்து அசத்திய மைதிலி, சந்தனா, தனிஷா, குறிப்புகள் கொடுத்த ஸாதிகா, மாலினி, இந்த இழையைக் கொண்டு நடத்தும் அதிரா, ரேணுகா அனைவருக்கும் என் பாராட்டுக்கள்
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்