தேதி: May 6, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உருளைக்கிழங்கு – 3 பெரியது
சர்க்கரை - 2 கப்
பால் – 2 கப்
நெய் - ஒரு தேக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் பாலை ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

உருளைக்கிழங்கு பாலுடன் சேர்ந்து நன்கு வெந்ததும் மசித்து விடவும்.

மசித்த உருளைக்கிழங்கில் சர்க்கரையை சேர்த்து கிளறி விடவும்.

கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் குறைந்த தீயில் வைத்து அடிபிடிக்காமல் கைவிடாமல் கிளறவும்.

அதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி விடவும்.

எல்லாம் சேர்ந்து ஒன்றாக ஒட்டாமல் உருண்டு வரும் வரை கிளறவும்.

ஒரு நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டவும். அகலமான அடிப்புறத்தைக் கொண்ட கரண்டியின் பின்புறத்தை வைத்து நன்றாக பரத்தி விடவும்.

அதன் பிறகு விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும். சுவையான உருளை பர்ஃபி ரெடி. திருமதி விஜி அவர்களின் குறிப்பினை பார்த்து திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் செய்து காண்பித்த உருளை பர்ஃபி இது.

எளிதில் வேகக்கூடிய நல்ல உருளைக்கிழங்கில் செய்யவும். சால்டியாக இல்லாத உருளைக்கிழங்கு தான் இதற்கு நன்றாக இருக்கும்.
Comments
So Nice,,, its very attractive
Daily morning i use to see arusuvai..Potato Burfi is so good..and Attractive.
Friendly
கீதா, உருளைக்கிழங்கு
கீதா,
விஜி இந்த ரெஸிபி போட்ட நாளிலிருந்தே செய்ய ஆசை. ஆனால் உருளைக்கிழங்கு என்பதால் ஆசையை அடக்கி இருந்தேன். இப்படி செய்து ஆசையைத் தூண்டுகிறீர்களே!!
1. உ.கிழங்கு முதல் படத்தில் சிவப்பாகத் தெரியுதே, ஏன்?
2. பால் ஊற்றி குக்கரில் வேக வைக்கக் கூடாதா?
உருளைகிழங்கு பர்பி
சூப்பரா படம் போட்டு அசத்திட்டிங்க கீதா, மிக்க நன்றி. நான் போன வாரம் கூட செய்தேன், எல்லாமே காலி அயிந்தி, நன்றாக ஸ்டெப் பை ஸ்டெப் படம் போட்டு கல்க்கிட்டிங்க. நான் டைமன் ஷேப்பில் செய்தேன் அவ்வளவு தான் வித்யாசம் மற்றவை எல்லாம் இதே. மிக்க மகிழ்ச்சி கீதா.
mrs.hussain
ஆமாம் எப்பவாவது தானே சாப்பிடுகிறோம், ஆசைக்கு ஒருதடவை செய்து சாப்பிடுங்க. ஒன்றும் ஆகாது. என்ன ஹார்போ ஹைட்ரேட் வேற ஒன்றும் இல்லை,ஒரு நாளக்கி கொஞ்சமா சாபிடுங்க.
இங்கு சிவப்பு கலரில் கிடைக்கும்.
தாராளாமா வேக வைக்கலாம்.
கீதா உங்க சார்பில் நானே சொல்லிட்டேன்.
நன்றி ஹுசைன்,கீதா.
raji
மிக்க நன்றி. செய்து சாப்பிட்டு சொல்லுங்கோ.
urulai parfi
akka unkalathu urulai parfi seithu parthen. nanraka irunthathu. enathu makan 18 (months) virumbi sappitan. mikka nanri. englishil type panniyathukku mannikavum.
அக்கா
அக்கா உங்களது பர்பி செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. எனது 18 மாத மகன் விரும்பி சாப்பிட்டான் நன்றி.
உருளை ஃபர்பி ரொம்ப ஈஸியான ,
உருளை ஃபர்பி
ரொம்ப ஈஸியான , இனிப்பான டிப்ஸ் செய்துரலாம்.சூப்பர்
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *