அறுசுவை - காணாதவர் பக்கம் - 2

யாராவது காணாம போயிட்டாங்களா?!
யாராவது காணாம போக போறாங்களா??!!
யாராவது காணாம போய் வந்திருக்காங்களா???
யாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா???

- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)

நம்ம அறுசுவையில் வர வர காணாம போறவங்க அதிகமா போயிட்டாங்க. அட... மத்தவங்க காணாம போனா கூட பரவா இல்லைங்க... இந்த பகுதிய ஆரம்பிச்ச வனிதா'வே காணாம போன கொடுமையை என்னன்னு சொல்ல??!! [அது யாருன்னுலாம் கேக்க கூடாது.... நான் தான் வனிதா.]

எப்ப போவா எப்ப மறக்கலாம்'னு சிலர் சுத்திகிட்டு இருக்காங்க (நம்ம சந்தனா மாதிரி) :(

எப்ப வருவா எப்ப பழையபடி ஓட்டலாம்'னு சிலர் காத்திருகாங்க (நம்ம மிசஸ் ஹுசைன் மாதிரி) ;)

எப்பனா போ எப்பன்னா வா கண்டிப்பா உன்னை விசாரிச்சிகிட்டே இருப்பேன்'னு சிலர் இருக்காங்க (என்னை விசாரித்த அன்பு தோழிகள் மாதிரி) :)

எல்லாருக்கும் ஒரு ஹாய். சவுக்கியமா?! நானும் குழந்தையும் நலம். பழைய பகுதி 90'அ தொட்டதால் புதிது.

செந்தமிழ் செல்வி.... நலமா? மகள் நலமா? பாக்கறீங்களா அறுசுவை?

இலா, உத்ரா.... வந்தீங்களா இந்த பக்கம்?

காணாம போன பாபு அண்ணா, செண்பகா நலமா?! என்ன ஆச்சு அண்ணா உங்க தலையை கொஞ்சம் நாளா அறுசுவை பதிவுகளில் காணோம்??!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சகோதரி வனிதா வாங்க வந்து சிரியா பகுதி மூன்றை சீக்கிரம் ஆரம்பியுங்கள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடறவங்கல்லாம் எப்படியிருக்கீங்க?

நேரத்தைப் பாருங்க, வரமாட்டேன், வரமாட்டேன்னு சொல்றவங்கதான் அடிக்கடி வந்துட்டு இருக்காங்க!! அதுல 2ம் பாகம் வேற ஆரம்பிச்சுட்டு.... இந்த2ம் பாகத்துக்குத் தலைப்பு "காணாமல் போனவர்கள், காணாமல் போனவர்களைத் தேடும் பகுதி"ன்னு வச்சிருக்கணும் நீங்க!!

நீங்க ரெகுலரா வாங்க, அப்புறம் வச்சுக்கிறேன் முழுக் கச்சேரிய....

ஹா ஹா தாமரை என்ன சொன்னீங்க... நான் ஓட்டுவதை பார்த்து வனிதா ஓடிடுவாங்களா? புலி பதுங்குவது பாய்வதுக்கு தான் ன்னு நிரூபிச்சிட்டாங்க பாத்தீங்களா?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

எல்லோருக்கும் ஒரு பெரிய ஹாய்!!!!!!!!!!!!!
எல்லோரும் நலமா? நான் நலம்னு பொய் சொல்ல மாட்டேன்:-(
ரொம்ப நாள் கழித்து இன்று தான் கொஞ்சம் நேரமும், பிசியும் கிடைத்தது.
பொண்ணுக்கு 14 ந்தேதி டேட் சொல்லி இருக்காங்க. அவளுக்காக ஸ்பெசல் சமையல், வாக்கிங் கூட்டிப் போவது, இடையே ஆபீசும் போவதுன்னு நேரம் ரெக்கை கட்டி பறக்குது. உடம்பு படுத்தல் ஒரு பக்கம். நான் இல்லாம எல்லாரும் சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு. நடக்கட்டும். நடக்கட்டும்....

ஸாதிகா, ஜலீலா, தனீ, உமா, தாமரை, மகா, அதிரா, ரேணு, வனி, சந்தனா, மிஸஸ். ஹுசைன், மர்ழி, இலா, வானு, மாலி, ஹாசினி, ஹர்சு, ஹரி காயத்ரி, ஜெயலட்சுமி, வினு, திவ்யா, ப்ரபா, சோனியா, மைதிலி, 3 உமாஸ், கதீஜா, கவிசிவா, கவின், உத்ரா, செல்வி, சாய்கீதா, தீபு, விஜி டிவிஎம், இமா, ஆசியா, துஷ்யந்தி, சுரேஜினி, வத்சலா, அம்முலு, சுஸ்ரீ, கவி, லதா ஹைஸ், சகோதரர் ஹைஸ் எல்லோருக்கும் எனது அன்பான விசாரிப்புகள். இன்னும் யாரும் விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கும் ஹாய்!

இனி பொண்ணுக்கு டெலிவரி டைம் நெருங்கி விட்டதால் ரொம்ப நாள் கழித்து தான் வருவேன்.
எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்றேன்:-(
மறந்துடாம இருங்கப்பா, மீண்டும் எப்பவாவது வருவேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வாவ் செல்விமா...

நான் தான் முதலில் கண்டேன்... எனவே எனக்கே பரிசு....

சரி, உடம்ப பாத்துக்கோங்க (ரெண்டு பேருக்கும் தான் சொல்லறோம்).... நல்ல செய்தி வந்தவுடன் சொல்லுங்க...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அப்பாடா பேசி ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க உங்க மகள் நலமுடன் குழந்தை பெற்றெடுக்க இறவனிடம் வேண்டி கொள்கிறேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

செல்விஅக்கா,

என்ன எட்டிப்பாத்துட்டு ஓடிட்டீங்க? இந்த களைப்பு, சோர்வு எல்லாம் பேரக்குழந்தையப் பாத்தவுடனே ஓடிடும் இல்லையா? உங்களேஒட சேர்ந்து நாங்களும் ஆவலோடு காத்திருக்கோம்!!

அக்கா, உங்க இ‍மெயில் senreb@rediffmail.com தானே? அதுக்கு மெயில் அனுப்புனேன், பதில் அனுப்புங்களேன், ப்ளீஸ்!!

மர்ழியா,

மறுபடியும் ராத்திரியிலா உலா இங்க‌?

எல்லோருக்கும் ஒரு பெரிய ஹாய்!!!!

செல்வி ஆண்ட்டி பொழுது ரெக்கைக்கட்டி பறக்குதுனு இப்போவே சொல்லிட்டீங்க, அப்போ கொஞ்ச நாள் உங்க வாசமே கூட தெரியாது இனி, வாழ்த்துக்கள் உங்க மகளுக்கு...அங்கிள் எப்படி இருக்காங்க?

சரி நான் இந்த திரட் தேடி பிடிச்ச காரணத்த எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன், நானும் இந்தியா போக போறேன்...கொஞ்ச நாள் இங்க வரமுடியாது,கண்டிப்பா ஒரு மாசத்துக்கு வரமுடியாது.. எவ்வளவு முடியுமோ அவ்ளோ சீக்கிரமா திரும்பி வரேன்..ரொம்ப சந்தோசமா தான் கிளம்புகிறேன்..1 1/2 வருசத்திற்கு அப்பறம் என் அப்பா அம்மா மற்றும் சொந்தங்கள பார்க்க போறேன்...ரொம்ப நாளா ஆசைப்பட்ட ஒரு விஷயம்(இந்தியா பயணம்) திடீர்னு அமைஞ்சு போச்சு...உங்களிடமிருந்து கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்க போறேனு வருத்தம் தான், எல்லோரும் சொல்ற மாதிரி யாரும் என்ன மறந்திராதீங்க..என்னாலயும் உங்கள யாரையும் மறக்க முடியாது...மீண்டும் சந்திப்போம்...

இவ்ளோ சொல்லிட்டு எப்போனு சொல்லவே இல்லையே? வரும் வியாழன் அதாவது மே14 கிளம்புகிறேன்..

மேலும் சில பதிவுகள்