தக்காளி இஞ்சி சட்னி

தேதி: May 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (14 votes)

 

அரைக்க‌:
நன்கு பழுத்த தக்காளி - நான்கு
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
காய்ந்த மிளகாய் - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - சிறிது
தாளிக்க‌:
எண்ணெய் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்


 

த‌க்காளியை பொடியாக‌ நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக‌ நறுக்கி அத்துட‌ன் த‌க்காளி, உப்பு, காய்ந்த மிள‌காய், தேங்காய் துருவல் சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.
தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான‌ த‌க்காளி இஞ்சி ச‌ட்னி ரெடி


இது க‌ர்ப்பிணி பெண்க‌ள் வாய்க்கு ருசிப்ப‌டும்.
தோசைக்கு தொட்டு கொள்ள‌ சூப்ப‌ராக‌ இருக்கும், செய்வ‌தும் சுல‌ப‌ம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

முயற்சி செய்தேன். சப்பாத்தியுடன் சுவைத்தேன். மிகவும் நன்றாக இருந்தது. தோழி ஜலிலாவுக்கு நன்றி.

So nice to eat.. Best chutney for pregnant ladies like me.

N நல்ல‌ ருசியான சட்னி..பகிர்வுக்கு நன்றி

Anbudan,
Viji