நார்மல் டெலிவெரி ஆகுமா

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் சலாமும் வணக்கங்களும்.

நான் இப்போது 6 மாதம் கற்பமாக இருக்கிறேன். எனக்கு முதல் குழந்தை பனி குடம் உடைந்ததால் சீசேரியன் மூலம் பிறந்தது. எனது செல்வத்தை நான்கு மாததிலேயே நான் இழந்து விட்டேன். இறைவன் கருணையால் இப்போது மறுபடியும் கர்ப்பமாக உள்ளேன். டாக்டரிடம் கேட்டதற்கு முதல் குழந்தை சீசேரியன் என்பதால் இரண்டாவது குழந்தையும் அப்படி தான் என்கின்றார்கள். நான் ஆபரேசன் மூலம் ரொம்ப கஷ்ட பட்டேன். 20 நாட்கள் என்னால் நடக்க முடியாய வில்லை. முதுகு வலி அதற்கு மேல் இருந்தது. தொடர்ந்து அரை மணி நேரம் கூட உட்கார முடியாமல் கஷ்ட பட்டேன். அதனால் ஆபரேசன் என்றாலே பயமாக உள்ளது

அதனால் ஆபரேசன் என்றாலே பயமாக உள்ளது

எதுவாயினும் எனது குழந்தை எனக்கு நலமாக பிறந்தால் போதும் என்ற எதிர்பார்போடு நாங்கள் இருக்கிறோம்

இரண்டாவது குழந்தைக்கு நார்மல் ஆக வைப்பு உள்ளதா? அதற்கு ஏதும் எக்சர்சைஸ் செய்ய வேண்டுமா? ப்ளீஸ் தயவு செய்து சொல்லுங்கள் ப்ளீஸ்

ஃபாத்திமா,

முதல் டெலிவரி எப்படியோ அப்படித்தான் இரண்டாவதும் இருக்க வேண்டும் என்ற அவசியமல்ல. அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தே டாக்டர் முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் இப்பவே உங்கள் டாக்டர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. முதல் டெலிவரியில் வேறு ஏதும் பிரச்னை இருந்ததா? உங்கள் திருப்திக்காகவும், செகண்ட் ஒப்பினீயனுக்காகவும் வேறு ஒரு டாக்டரையும் கன்சல்ட் செய்யுங்கள்.

முதல் டெலிவரி சிஸேரியனும், இரண்டாவது நார்மலும் ஆகியிருக்கும் தோழி் எனக்கு உண்டு.

உங்களுக்கு முதல் பிரசவத்தில் பிரச்னைகள் இருந்துள்ளதால் எந்த உடற்பயிற்சி செய்வதென்றாலும் டாக்டர் ஆலோசனையோடுதான் செய்ய வேண்டும். மற்றபடி சாதாரணமாகச் செய்யும் வீட்டு வேலைகள், வாக்கிங் போன்றவையே போதும்.

மிஸஸ் ஹுசைன் நல்ல இருக்கீங்களா? உங்கள் மெயில் ஐடி வேண்டுமே?

Jaleelakamal

பாத்திமா கவலை படவேண்டாம் முதல் டெலிவரி சிசேரியன் என்றாலும் இரண்டாவது நார்மல் ஆகியும் இருக்கு.
ரொம்ப வெயிட்டான வேலைகள் செய்ய வேண்டாம், எழுந்திருக்கும் போது உட்காரும் போது மெதுவாக எழுந்திருக்கவும் சட்டுன்னு எழுந்திருக்க வேண்டாம், படுத்த்திருக்கும் போதும் சட்டுன்னு எழுந்திருகக் வேன்டாம்.
அதான் கொடி சுற்றிகொள்ளும் என்பார்கள்.

Jaleelakamal

வஸ்ஸலாம்..உங்க பதிவை பார்த்ததும் பதில் போடாமல் இருக்க முடியல கவலை வேண்டாம்...எனக்கு முதல் குழந்தையும் சிசேரியந்தான் இப்ப இரண்டரை மாத குழந்தை கையில் இருக்கு அதும் சிசேரியந்தான் எனக்கும் டாக்டர் இதேதான் சொன்னாங்க முதல் சிசேரியன் என்பதால் இரண்டாவதும் மோஷ்ட்லி சிசேரியனாகும்ன்னு அதற்க்கு காரணம் உண்டு குழந்தை வளர வளர வயிறு எடை போட்டு பெரிசாகும் அதனால சிசேரியன் செய்த இடத்தில் வலி வர சான்ஸ் ரொம்ப உண்டு நார்மல் ன்னா லாஸ்ட் டைம் வரை பொறுத்து இருக்கனும்..அந்தளவு வெயிட் நம் வயிறு தாங்காது சிசேரியன் இடத்தில் வலி வந்துட்டா உடனே ஆப்ரேஷந்தான் ஏன்னா வலி அதிகமானால் தையல் பிரியும் அப்படாக்டர்ஸ்லாம் அபப்டி சொல்லுவாங்க ஒரு சொலருக்கு நார்மலாகாம்...அவங்கவங்க உடல் அமைப்பை பொறுத்த விஷயம் இது! நாங்க அனைவரும் உங்களுக்காக பிராத்திகின்றோம்..பயப்படாமல் இருங்க நல்லதே நடக்கும்னு மட்டும் நினைங்க நல்லதே நடக்கும்..பையைனை மடியில் வைத்துட்டு டைப்பிங் பிழை இருந்தால் மன்னிகவும்...அ

ஜலீலாக்கா நேற்று ஒரு மெயில் போட்டேன் பார்கலட்யா?சீக்கிரம் ரிலே கொடுங்க நான் வைட்டிங் :(

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆபரேஷன், நார்மல் டெலிவரி எதுவானாலும் வலிதான். எனக்கு நார்மல்தான் ஆனாலும் ஒருமாதம் கிட்ட ரொம்பவே கஷ்டப்பட்டேன். நீங்க அதையெல்லாம் நினைத்து வருந்தாதீங்க. வயிற்றில் வளரும் உங்க அன்பு செல்லத்தை நினைச்சு சந்தோஷப்பட்டு கொண்டே இருங்க. நல்ல மாதிரி பெற்று எடுத்து சந்தோஷமா வருவீங்க. இறைவன் உங்களுக்கு நிச்சியமா உதவி புரிவான். உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அப்படி சொல்லு தனிஷா...ஆமாம் ஃபாத்திமா எல்லோரும் சொல்வது சரி..வெளிநாட்டில் அவர்கள் இரண்டாவது நார்மல் ஆக்க ட்ரை பன்னுவார்கள் நம்மூரில் பெரும்பாலும் சட்டென்று முடியாது என்று ஆரம்பமே சொல்லி விடுவார்கள்..
நர்மல் டெலிவெரியில் முதல் குழந்தை பெற்ற என் கசின் அதிகப்படியான தைய்யலால் சிரமமமாகி இரண்டாவது சிசேரியனில் மருத்துவர் ஆலொசனை படி பெற்றெடுத்தாள்.எதுவும் நம் கைய்யில் இல்லை மருத்துவர் சொல்படி செய்யுங்கள்..எதற்கும் மற்றொரு நல்ல டாக்டரையும் கேட்டு பாருங்கள்
...கவலைப்படாமல் இருங்கள்..நல்லபடியா ஆரோகியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்

ஜலீலாக்கா,

Sorry, இப்போதான் உங்க பதிவு பாத்தேன். இதோ என் மெயில் ஐ.டி.

hussainamma@gmail.com

என்னிடம் மெயில் ஐ.டி. கேட்ட முதல் ஆள் நீங்கதான்!!

Hussain akkaa, Jaleela akka, Marliya matrum padhil kodutha anaivarukkum mikka nanRi. Time ila athan english la type paniten Sorry. Enaku ipa than koncham manasu nimadhiya irukku. Nichayama vera doctor kita consult panitu soluren. Elaarukum rmba thanks pa.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்