காய்கறி சூப் (டயட்)

தேதி: May 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

கோவா (முட்டைக்கோஸ்) - 200 கிராம்
காரட் - 2
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
செலரி - ஒரு தண்டு
வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
மல்லி விதை - 2 தேக்கரண்டி
ஏலம் - 3
கிராம்பு - 3
கறுவா - ஒரு துண்டு
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

காய்கறிகள், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெட்டிய காய்கறிகளைப் போடவும்.
ஒரு சுத்தமான துணியில் மிளகு, பெருஞ்சீரகம், மல்லிவிதை, ஏலம், கறுவா, கிராம்பு போட்டு ஒரு மூட்டை மாதிரி கட்டி அப்பாத்திரத்தில் போடவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து காய்கறிகளை வேகவிடவும்.
காய்கறி வெந்ததும் அந்த சிறிய மூட்டையை வெளியில் எடுத்து விடவும்.
விரும்பினால் எலுமிச்சம்பழப்புளி சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எனக்கு கறுவா என்றல் என்ன என்று தெரியவில்லை. அது இல்லாமல் இந்த சூப்செய்தேன் நன்றாக இர்ருண்டடு. முடிந்தால் கறுவா என்றல் என்ன என்று குறவும்

நன்றி
swarna

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஸ்வர்ணா, நீங்கள் பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி. கறுவா என்றால் பட்டை.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹலோ மேடம் இதில் சேர்த்திருக்கும் செலரி என்பது கீரை தானே அது இல்லாமல் செய்தாலும் வெய்ட் குரையுமா கொஞ்சம் சொல்லுங்க என்க்கு மிகவும் பயனுளளதாக இருக்கும்.
மிக்க நன்றி.

அம்ரிரா,செலரி என்பது கீரைதான். இது இல்லாமலும் மற்றக்காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடித்தாலும் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹலோ மேடம் உடனே பதில் தந்ததர்கு மிக்க நன்றி . கண்டிப்பாக நாளை செய்து பார்க்கிறேன்.
அம்ரிதா

acca malli vithai enral enna

மல்லி விதை என்றால் தனியா.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா