பட்டிவைதியம் இதபற்றி தெரிந்தவங்க சொல்லுங்களேன் ப்ளீஸ்

ஹாய் தோழிகளே
குழந்தயளுக்கு சலிதொந்தரவுக்கு நெஞ்சில் வெத்தல சுடுபன்னிபோடலமா இது ஒரு பட்டிவைதியம் இதபற்றி தெரிந்தவங்க சொல்லுங்களேன் ப்ளீஸ்.உங்கள் பதிலா உடன் எதிர் பார்கிறேன்.
அன்புடன்
சுகா

இஞ்சி ரசம்
ஏப்ரல் 27, 2009 - 2:22pm - வழங்கியவர் Jaleela Banu
இஞ்சி ரசம்

வயிறு அப்செட் ஆனவர்களுக்கும் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும்,மற்றும் குளிர் காலத்திலும் செய்து சாப்பிடலாம். சளி, வீசிங் பிராப்ளம் உள்ள பிள்ளைகளுக்கும் இது ரொம்ப நல்லது

தேவையான பொருட்கள்
புளி - லெமென் சைஸ்
தக்காளி - ஒன்று
துவரம் பருப்பு - ஒன்னற மேசை கரண்டி (வேக வைத்தது)
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வருத்து அரைக்க
-------------
நெய் - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிள்காய் - ஒன்று
மிளகு - 9
சீரகம் - ஒரு தேக்கரன்டி
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - இரண்டு பல்லு
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
இஞ்சி - இரண்டு அங்குல துன்டு
தாளிக்க
-------
எண்ணை - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
வெந்தயம் - முன்று
கொத்து மல்லி தழை - சிறிது

செய்முறை
துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ள வேண்டும்.
புளியை நன்கு முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை இரண்டாக (அ) நான்காக அரிந்து போட்டு உப்பு அரை தேக்கரண்டி , மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
வருத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெயில் வருத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
தக்காளி வெந்ததும் வருத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றிகொதிக்க விட்டு இரக்க வேண்டும்.
கடைசியில் கடுகு, கருவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்

இஞ்சி ரசம்

வயிறு அப்செட் ஆனவர்களுக்கும் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும்,மற்றும் குளிர் காலத்திலும் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்
புளி - லெமென் சைஸ்
தக்காளி - ஒன்று
துவரம் பருப்பு - ஒன்னற மேசை கரண்டி (வேக வைத்தது)
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வருத்து அரைக்க
-------------
நெய் - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிள்காய் - ஒன்று
மிளகு - 9
சீரகம் - ஒரு தேக்கரன்டி
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - இரண்டு பல்லு
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
இஞ்சி - இரண்டு அங்குல துன்டு
தாளிக்க
-------
எண்ணை - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
வெந்தயம் - முன்று
கொத்து மல்லி தழை - சிறிது

செய்முறை
துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ள வேண்டும்.
புளியை நன்கு முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை இரண்டாக (அ) நான்காக அரிந்து போட்டு உப்பு அரை தேக்கரண்டி , மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
வருத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெயில் வருத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
தக்காளி வெந்ததும் வருத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றிகொதிக்க விட்டு இரக்க வேண்டும்.
கடைசியில் கடுகு, கருவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்

ஜலீலா

பதிலளி
இஞ்சி சாறு
ஏப்ரல் 27, 2009 - 2:44pm - வழங்கியவர் Jaleela Banu
இஞ்சி சாறு

50 கிராம் இஞ்சி எடுத்து கொள்ளுங்கள்

தோலெடுத்து கழுவி பொடியாக அரிந்து அதை சுத்தமான மிக்ஸியில் அரைக்கவும், தேவை பட்டால் சிறிது ஆறிய வென்னீர் சேர்த்து அரைத்து மையாக அரைக்க வேண்டாம் இரண்டு திருப்பு திருப்பினாலே அரைந்து விடும்.
அதை அப்படியே ஒரு டம்ளரில் டீ வடிகட்டி வைத்து அதில் பிழியுங்கள்.
சக்கையை டீ போட வைத்து கொள்ளுங்கள்.

டம்ளரில் ஊற்றிய இஞ்சி சாறை பத்து அதற்கு மேல் அப்ப்டியே வையுஙக்ல் சிறிது நேரம் கழித்து தெளிந்தாற் போல் வேறு ஒரு டம்ளரில் அதை ஊற்றுங்கள் அடியில் வெள்ளையாக நஞ்சு உறைந்திருக்கும் அதை பயன் படுத்த வேண்டாம்.
எடுத்த சாறீல் ஒரு பின்ச் உப்பு, தேன் (அ) சர்க்கரை சேர்த்து குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கவும். இரண்டு தேக்கரண்டி அளவிற்கு கொடுத்தால் போதும்.
இது பெரிய‌வ‌ர்க‌லும் குடிக்க‌லாம்.

வாமிட் (அ) மோஷ‌ன் மூல‌ம் ச‌ளி வெளியாகும்.
ஒரு ஆளுக்கு ஐம்பது கிராம் இஞ்சி இல்லை கொஞ்ச்மா போட்ட அரையாது.
இல்லை 25 கிரமும் போட்டு கொள்ளலாம்

Jaleelakamal

ஜலீலா பானு மேடம் உடன் பதில் தந்ததற்கு மிக்கநன்றி.
நான் இன்சிசறு வுட்டு பிலேன்ரி குடுத்தேன் சளி குறையல மோசன் பிரைசன வந்திற்றுது.முலகு சுக்கு குட்டுத்து பார்க்கணும் நல்லசுக்கு கிடைக்கல.நிங்க சொன்னமாதிரி இன்சிசறு தனிய குடுத்து பாக்கிறன்.கலையில வெறும் வயித்தில குடுக்கலாமா?அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

இஞ்சி சாறு வெரும் வயிற்றில் கொடுக்க கூடாது, காலை 11 மனிக்கு அல்லது மாலை இரவு கொடுக்கலாம்.
இது தொடர்ந்து இரண்டு நாள் கொடுங்கள். உடனே போகாது, சளி ஜுரம் எது வந்தாலும் ஒரு வாரம் ஆகும் சரியாக.

Jaleelakamal

ஹாய் சுகா
வெத்தலையில் கொஞ்சம் விக்ஸ் தடவி
அதை விளக்கில் காட்டி பொறுக்கும் சுட்டில்
குழந்தைக்கு நெஞ்சில்,முதுகில், வைக்கலாம்
நான் இதை என் மகன் 1 மாதத்திலே செய்து
உள்ளேன்

ரொம்ப நன்றி ஜலீலா பானு மேடம் என் பைஜனுக்கு எந்த நேரமும் சளி தொந்தரவுதான் ஒரு மதத்தில ஒரு கிழமைதான் தடிமல் இல்லாம இருப்பன் அதோட எந்தநேரமும் பம்தான். அதுதான் எங்கட கைவைத்தியம் செய்துபக்கல எண்டு முயற்சி செய்யிறன் உங்கள் குறிப்புக்கு நன்றி.

ஹாய் ராஜி
ரொம்ப நன்றி குழந்தைகளுக்கு பயன்படுத்திற விக்ஸ் அல்லது நாங்கள் பாவிக்கிறதா எத்தினமுறை போர்றனிங்க ஒருநாளைக்கு.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் ஜலீலா பானு மேடம்
இந்த இன்சிசறை எத்தின நாள் வைத்து பயன்படுத்தலாம்.ப்ரிஷ்சில் வைக்கலாமா.நான் இஞ்சி ப்ளியிரத்துக்கு ஒன்று வைத்திருக்கிறேன் அதன் முலலம் தன்னிவிடமல் சாரு பிழியலாம் அப்படி ப்ளின்சு குடுக்கலாமா அனா நஞ்சு நிக்கமுடியாது. சழி பிடித்த குழந்தைக்கு எந்த சாப்பாடு தவிர்க்கிறது நல்லது.நிறைய கேள்விகேட்டிட்டன் நேரம் கிடைக்கும் பொது பதில் தங்கோ ப்ளீஸ். நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு சுகா
இஞ்சி சாறு நான் முபெல்லாம் பிரிட்ஜில் வைத்து தான் கொடுத்தேன் ஆனால் எனக்கு தெரிந்தவர்கள் அதை பிரெஷாகதான் கொடுக்கனும் என்றார்கள்.
இப்ப பிரெஷா அப்ப எடுத்து கொடுத்து விட்டு அந்த சக்கையை, பிரிட்ஜில் வைத்து முன்று நாட்கள் டீ போட பயன் படுத்தலாம்.

கட்டியா உள்ள இஞ்சி சாறில் சிறிது வெண்ணீர் ஊற்றி (ஒரு தேக்கரண்டி) அப்படியே வையுங்கள்.
கண்டிப்பா தெளியும். தெளிந்ததும் அதை பயன் படுத்தவும்.
இதி கொடுத்து வயிற்று வலி அல்லது ரொம்ப மோஷன் போனா அதிகமா கொடுக்க வேண்டாம்.
தொடர்ந்து முன்று நாட்களுக்கு மாலை 5 மணி அளவி கொடுக்கலாம்.

குளுமையான உணவு வகைகள் கொடுக்க வேண்டாம்

Jaleelakamal

ஹாய் ஜலீலா பானு மேடம் ரொம்ப நன்றி உங்களுடைய பதிலைத்தான் எதிர்பத்துகொண்டிருந்தேன் நிங்கள் சொன்னமாதிரி இன்று குடுக்கிறேன்.
இருமல் இருந்தாலும் குடுக்கலாம் தானே? நன்றி மேடம்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் சுகா, என் பெயர் சுபா. சிறிது நெய்யில் கொஞ்சம் கறிவேப்பிலை, சிறிது மிளகு சேர்த்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் கலந்து அரைத்து வடிகட்டவும். அந்த சாறை மட்டும் குழந்தைகளுக்கு குளித்து முடித்த பின் கொடுக்கவும். சளி சட்டென்று பறந்துவிடும்.

குறிப்பு:- மிளகு கம்மியாக பயன்படுத்தவும்.

ஹாய் சுபா நன்றி
நான் குடுத்து பார்கிறேன் கருவேப்பிலை உடம்புக்கு நல்லதுதானே.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மேலும் சில பதிவுகள்