பல்லரிசி

தேதி: May 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தரமான பச்சரிசி - 1 கப்
தேங்காய் - 2 மூடி
சர்க்கரை - 1 கப்


 

பொடியாக, நல்ல வெண்மை நிறமான, நல்ல தரமான அரிசியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
சுத்தம் செய்து நீரில் சுமார் 5 மணி நேரம் ஊற விடவும்.
ஊறிய அரிசியை வடிதட்டில் போட்டு வடிய விடவும். பாதி உலர்த்தலாக நீர் வடிந்து இருக்க வேண்டும்.
தேங்காயை சன்னமாக துருவவும். அடியில் உள்ள கருப்பு நிற பகுதி துருவலில் கலக்கா வண்ணம் வெண்மை பகுதியை மட்டும் துருவவும்.
தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்துக்கலந்து கொள்ளவும்.
பிறகு அரிசியை சேர்த்து நன்கு கலந்து கப்புகளில் விட்டு ஸ்பூன் போட்டு கொடுக்கலாம்.
பல்லுக்கு நல்ல எக்ஸசைஸ். சுவைக்கு சுவை.


எங்கள் பகுதியில் குழந்தைக்கு ஒரு வயதாகும் பொழுது இந்த இனிப்பு அரிசியை செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். குழந்தைக்கு பல் முளைத்து விட்டதற்கு கொடுப்பதால் இதற்கு பல்லரிசி என்று பெயர். சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

சாதிகா லாத்தாவ்வ்வ் சுகம்தன்னே?நாந்தான் பிள்ளைகுட்டின்னு அம்புட்டு பிஸி நீங்க என்ன ஜாலியாதானே இருக்கீங்க அனியாயத்துக்கு போன் இல்லை ;)ஊர்ர் பக்கம் ஓடிட்டீங்களோ?

என் மகனுக்கு லேசா லேசா பல் எட்டி பார்கிறது இவர் பல்லரிசி பண்ணலாம்னு சொன்னார் இண்ட்ரெஸ்ட் இல்லாமல் இருந்தேன் ..உங்க இந்த ரெஸிபியை பார்த்தது செய்யலாம்னு சின்ன ஆசை பிரியாணி அரிசியில் செய்யலாமா?பதில் வரோனும் ஆமா!

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி,நான் ரொம்ப சுகம்.அநியாயத்திற்கு நான் ஜாலியாக இருக்கின்றேன்.நீங்கள் குழந்தைகளுக்கு குறைவில்லாமல் ஆயா வேலை பார்த்துக்கொண்டு இருங்கள்.உங்கள் புது வீட்டில் சீக்கிரம் ஒரு புகைப்போக்கி வைத்து விடுங்கள்.ஏன்னா..உங்கள் காதில் இருந்து வரும் புகை, புகை போக்கி வழியாக வெளியேறிவிடும் அல்லவா?பிள்ளைகள் எப்படி இருக்கின்றீர்கள்.பல்லரிசி பிரியாணி அரிசியில் செய்தால் பிரியாணி ஸ்மெல் வரும் .பரவாஇல்லையா?
பல்லரிசி செய்யும் நாளன்று மறக்காமல் ஒரு மெசேஜ் கொடுத்து விடுங்கள்.

arusuvai is a wonderful website