வெண்டைக்காய் பொரித்த குழம்பு

தேதி: May 14, 2009

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

வெண்டைக்காய் - 250 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு


 

வெண்டைக்காயை கழுவி ஒரு அங்குல நீளத்தில் வெட்டவும்.
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும்.
ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொரித்து எடுக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பூண்டு, மிளகாய், பெருஞ்சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புளியைக் கரைத்து விடவும், அத்துடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிவரும் போது மிளகாய்த்தூளை சேர்த்து கொதிக்க விடவும்.
மிளகாய்த்தூள் வாசனை போனதும் பாலைச் சேர்க்கவும்.
குழம்பு தடிப்பாக வந்ததும் பொரித்த வெண்டைக்காயை போட்டு கிள்றி 2 நிமிடம் விட்டு இறக்கவும்.
இது சாதம், புட்டு, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் நல்லது.


மேலும் சில குறிப்புகள்


Comments

I have tried out this dish today after seeing the comments with a hope that it would make this day delight. But, the 'perucheeragam' and milk seems to change the actual taste of the dish.

I have tasted the dish before adding the milk. It was really awesome. Then, I thought that adding milk would add flavour. But, unexpectedly, it added a cream and bitter taste.

So, I would suggest that adding milk should be mentioned as optional choice. Please taste that before adding milk. You'll belive my words. Otherwise, everything is fantastic.

Cheers,
Ganesh.

ஹாய் வத்சலா
வெண்டக்காய் பொரித்த குழம்பு இன்று செய்தேன் ரொம்ப நல்லாய் இருந்தது நன்றி
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சுகா, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"