டீ கடை பெஞ்சு - ‍அரட்டை 78.

தோழிகளே,இது பெண்களே நடத்தும் டீ கடை,டீ போடுவது,அதை யாராவது வந்தால் கொடுப்பது இல்லையேல் தானே குடிப்பது அனைத்து வேலைகளும் பெண்களே செய்வதால் இது பெண்களின் டீ கடை என புலிகேசி மன்னரின் அஸிஸ்டென்ட் என்னால் பெயர் பெருகிறது.

சரி,இந்த த்ரெடில் எல்லோரும் முக்கியமான ஒன்றை பற்றி பேசுவோம்.பெண்களுக்கு(பெரும் பாலானோருக்கு)வெளியில் செல்லும் பொழுது புறப்பட அதிகம் நேரம் எடுக்கும்,இதை எப்படி தவிர்ப்பது?சுலபமால சீக்கீரம் எப்படி கிளம்புவது? குழந்தைகளையும் தயார்படுத்தி,கணவரையும் சமாளித்து,வீட்டில் மிச்சம்,மீதி வேலைகளை முடித்து எப்படி புறப்படலாம் என விவாதிக்கலாம்.

இது போல் நிறைய விஷயங்கள் விடை தெரியாமல் நம்மிடையே உலாவருகிறது.இதையெல்லாம் தீர்த்து அரட்டையும் அடிப்போம்...இந்த டீ கடை பெஞ்சில்...!!!

தோழிகளுக்கு வணக்கம்,
இப்படி ஒரு விஷயம் அதிகாலையில் எனக்கு உதயமாயிற்று,மொக்கையே போட்டுகொண்டிருக்கும் யாரும் கவலைப்பட தேவையில்லை.

ஏனென்றால்,ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை என் மகனை அழைத்துக்கொண்டு "பேபி ஸ்டோரி டைம்" செல்வது என் வழக்கம்.இன்று முடியாமல் போய்விட்டது.அது மட்டுமின்றி எனக்கே உடல் முடியாதது போல் ஒரே வலியும் கூட,சோம்பேறித்த‌ன‌மும் ஒட்டுக்கொண்ட‌து.
அத‌னால் உத‌ய‌மான‌தே இந்த‌ த‌லைப்பு.

முன்பெல்லாம்,ரொம்ப‌ ப‌ஞ்சுவ‌லாக இருந்தோம் நானும் க‌ண‌வ‌ரும் எங்கு செல்வ‌தானாலும்,பார்ட்டி,கோவில்,ஷாப்பிங் என‌, இப்போ குழ‌ந்தை எங்களுக்கு எதிராக‌ இருக்கிறான்.இப்போ எங்கும் லேட்...தான்.

எல்லோரும் இதை பற்றி கலந்துரையாடலாம் வாங்க...ஆரம்பிங்க தாரை தம்பட்டைகள் கிழிய‌ட்டும்!!!

நானும் அப்ப‌ப்போ வ‌ந்து இதை ப‌ற்றி கூறுகிறேன்.

ந‌ன்றி
உமா.

கட கடவென்று அரட்டை ஓடுகிறதே என்று பார்த்தேன். ப்ரேக் போட்டிருக்கிறீர்கள் உமா. எப்படி இருக்கிறீர்கள்?
உங்கள் க்ராப்ட் பார்த்தேன் வாணி. அனைத்தும் அழகு. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

பாப்ஸூ...வணக்கம்!
இப்ப வெயில் காலம் ஆரம்பிச்சிட்டதால்தான் யாரும் டீ கட பெஞ்ச் பக்கம் ஒதுங்க மாட்டேன்ராங்கன்னு நினைக்கிறேன்...நம்ம கடைல கோடைக்கேற்ற லெமன் ஜூஸ்,நன்னாரி சர்பத், கம்மங் கூல் [ கூழ் தாங்க,டைமிங்கா கூல்!!] , மில்க் ஷேக்,ஐஸ் டீ , எல்லா வெரைட்டி ஐஸ் கிரீம் எல்லாம் கிடைக்கும் என்று விளம்பரப் படுத்துங்க..அப்பவாவது கூட்டம் சேருதான்னு பார்ப்போம்! :)

பரவால்ல உமா, நீங்க முதல்ல பங்க்சுவலா இருந்திருக்கிங்க..நாங்க எப்பவுமே இண்டியன் ஸ்டாண்டர்ட் டைம்(!) தான்...எல்லா இடத்துக்கும் கடைசி,இல்ல கடைசிக்கு முன்னாடிதான் போய்ச்சேருவோம்... கிளம்பி,வீடு லாக் பண்ணப் போகும்போது தான் எங்க வீட்ல அட்ரஸ் செக் பண்ணறேன்,ரூட் பார்க்கறேன்னு சிஸ்டம் முன்னால உட்காருவார்..அப்படியே ஆஃபிஸ் மெயில் செக் பண்ணுவார்..அப்புறம் கேக்கவா வேணும்?? போன வீக் எண்டு கூட இதே கதைதான்...தண்ணியும் வந்து இதே கதைதான் சொல்லும்..அவங்க குடும்பமே இப்படிதான் போங்க... :D

இதனால் நான் சொல்ல வருவது என்னன்னா ஒரு இடத்துக்கு போறோம்னா, அட்ரஸ்,ரூட் அப்புறம் வேறு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் எல்லாத்தையும் வெல் இன் அட்வான்ஸ், தயார் பண்ணிகொள்ளுங்கள்!

ஓகே..நிறைய பேசிட்டேன்..போய் கூலா ஒரு கொய்யா ஜூஸ் குடிச்சிட்டு மெதுவா வரேன்!! மத்தவங்க எல்லாரும் வாங்க...வாங்க..வாங்க!

அன்புடன்,
மகி

இமா, ஜயய்யோ நீங்களும் பார்த்தாச்சா. நீங்கள் அதில் எவ்வளவு சூரப்புலி( நீங்கள் செய்யும் கிராஃப்ட் ஜத் தான் சொல்கிறேன்). நன்றி, இமா.
வாணி

உமா, என் அனுபவத்தை பிள்ளைகள் படுத்த பிறகு எழுதுகிறேன்.

ஆஹா எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க? நான் சின்ன வயசுல இருந்தே இப்படித் தான்...எனக்கே நெனச்சா கஷ்டமா இருக்கு... எப்பவுமே லேட்... எல்லாத்தையும் அரக்க பரக்க கடைசி நேரத்துல தான் செய்வேன்... ஸ்கூல் ல லேட் ஆகி அப்பப்ப திரும்பி வருவதும் உண்டு..இப்போ கொஞ்சம் பரவாயில்ல... சொந்தமா எல்லா வேலையும் செஞ்சு முடிச்சு கெளம்பனும்.. அதனால கொஞ்சம் பொறுப்பா இருக்கேன்... எங்காள் மட்டும் பர்பெக்டா கிளம்பி உட்கார்ந்து (நீங்க சொன்ன எல்லா வேலையும் முடிச்சு) பொறுமையிழந்து திட்டி..அப்புறம் தான் கிளம்புவேன்.. ஆனா இது ஷாப்பிங், பார்ட்டி, இல்ல பிரெண்ட்ஸ் வீடு இப்படின்னா தான்... ரொம்ப முக்கியமா எங்காவது கிளம்பனும்னா பொறுப்பா டைம்க்கு கிளம்பிடுவேன்...

உமா - இத்தனை மணிக்கு கிளம்பனும்ன்னா அதுக்கு ஒரு அரை இல்ல முக்கால் மணி நேரம் முன்னாடியே டைம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.. அப்ப தான் சரியா இருக்கும்.. குட்டிய முதலிலேயே தயார் பண்ணிட்டு அப்புறமா நீங்க கிளம்புனா சரியா இருக்கும்... கிளம்பினதுக்கப்புரம் டைம் இருந்தா டிவி மாதிரி ஏதாச்சும் பாத்துட்டு உட்கார்ந்திருக்கலாம்...முக்கியமான வேலைன்னா முன்னாடி நாளே என்ன வேணுமோ எடுத்து வச்சிட்டு, அடுத்த நாளுக்கு என்ன வேலைகள், எவ்வளவு நேரம் ஆகுமுன்னு ப்ளான் பண்ணி வச்சுக்கோங்க... இந்த தண்ணி, ஹான்ட் பேக், பர்ஸ், சாவி, காமரா - இதெல்லாமும் எடுத்து தயாரா வச்சிருங்க... மஹி சொன்ன மாதிரி எங்க போகுனுமுன்னு அட்ரஸ் பாத்து பிரிண்ட் அவுட் முன்னாடியே எடுத்து வச்சுட்டா நல்லது...

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்...

பி.கு - இது எனக்கு நானே சொல்லிக்கறதுக்கு... சரியா...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சந்தனா, உங்கள் லைசன்ஸ் என்னாச்சு?

நான் எப்போதும், எதிலும் நேரம் தவற மாட்டேன். மற்றவர்களும் அப்ப்டியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். டாக்டரிடம் போவது என்றாலும் 15 நிமிடங்களுக்கு முன்பே போய் விடுவேன். என் கணவரோ எனக்கு எதிர்மாறு.

நான் காத்திருந்தாலும் பரவாயில்லை எனக்காக மற்றவர்கள் காத்திருக்க கூடாது என்று நினைப்பேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு இந்த பழக்கம். என் தங்கைக்கு நான் இப்படி செய்தாலே ஆத்திரம் வரும். பெரிய மகாத்மா காந்தி என்று மனசிலை நினைப்பு என்று திட்டு விழும்.

வாணி

ஒருத்தருக்கொருத்தர் contrast ஆக தான் வாழ்க்கை அமைந்திருக்கிறது...ம்ம்... எங்கள் வீட்டில் நீங்கள் சொன்னதுக்கு நேர் எதிர்மாறாக அமைந்திருக்கிறோம்.... நல்ல கொள்கை வாணி... நானும் மாற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் - ரொம்ப நாளாக...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

தண்ணி,உங்க குடும்பத்தைப் பத்தி எனக்குத் தெரியாதா? பல வருஷமா பாக்கரனல்ல? குடும்பமே பங்க்சுவாலிடி-க்கு பேர் போன குடும்பமல்ல?
//ரொம்ப முக்கியமா எங்காவது கிளம்பனும்னா பொறுப்பா டைம்க்கு கிளம்பிடுவேன்...// உங்கண்ணனும் இதே டயலாக் தான் அடிப்பாரு...அதெப்படி அண்ணன்,தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசறீங்க? :)

இன்னிக்கு திருக்குறள் படிக்க ஆரம்பிச்சிட்டியா? குறள் தூள் பறக்குது? நல்லது..இங்கே வரவுங்க அல்லாரும் ஆளுக்கொரு குறள் சொல்லோணும்னு ஒரு கொள்கை வைச்சுக்கலாம் இந்த டீக்கடை பெஞ்ச்-ல? ஓகே-வா??
நான் சொல்லும் குறள்

" பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்."

அதாவதுங்க,மயிலிறகாய் இருந்தாலும் அளவுக்கு மீறி வண்டியில் ஏற்றி திணித்தால் அச்சாணி உடைந்துவிடும்..அதனால எதுவா இருந்தாலும் அளவா இருக்கோணும்...[ நம்ம அரட்டையும் சேர்த்துத்தான் சொல்லறேன்... :) ]

எனவே இந்த இழையில் அரட்டைக்கு வரும் எல்லாரும் ஒரு நல்ல குறளா சொல்லுங்கப்பா! இது எங்க டீக்கட பெஞ்சின் பணிவான விண்ணப்பமுங்கோ...

thanni,congrats for getting US drivers license!

அன்புடன்,
மகி

இமா,நான் நல்லா இருக்கிறேன்.நீங்க அன்போடு அப்பப்போ விசாரிப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.நீங்களும் இந்த தலைப்பு பற்றி ஏதேனும் சொல்லலாமே!.

வாணி,குழந்தைகள் இருப்போருக்கு இந்த அனுபவம் ரொம்ப நல்லாயிருக்கும்.கண்டிப்பாக வந்து சொல்லுங்கள்.உங்க சைட் ரொம்ப நன்றாக டிசைன் பண்ணியிருக்கிரீங்க,எல்லோரும் சொல்வது போல் கிராஃப்ட்ஸ் ஒர்க் சூப்பர்.

அண்ணியும்,த‌ண்ணியும் என‌க்கு தெரியும் எப்ப‌வும் கால‌ தாம‌த‌ பார்ட்டிக‌ள் தான்னு நானே ஒரு கெஸ்ஸிங்ல‌ தான் இருந்தேன்.
ஆமா த‌ண்ணி டெஸ்ட் என்னாச்சு ஊத்திக்குச்சா....ஹையா ஜாலி...
எங்க‌ளுக்கெல்லாம் மிக‌வும் க‌ஷ்ட‌மாக‌ இருக்கும்.ஈஸ்ட் சைட்ல‌ ரொம்ப‌ ஈஸின்னு கேள்விப‌ட்டேன்.எப்ப‌டி இருந்த‌து?...

அண்ணி,நிஜ‌மாவே வெய்யில் தாங்க‌ முடிய‌ல‌...அத‌னால‌ இந்த‌ டீக‌டை முடிஞ்ச‌தும் இழுத்து மூடிட்டு ச‌ர்ப‌த்,ஜூஸ் க‌டை போட்டிடுவோம்.

நாங்க‌ முன்பெல்லாம் ரொம்ப பர்ஃபெக்ட்,அப்பொவெல்லாம் மிக‌ச்ச‌ரியா எல்லாம் பேக் ப‌ண்ணி,5,10 நிமிட‌ம் முன்பே புற‌ப்ப‌ட்டு விடுவோம்.இது ஷாப்பிங் போகும் போது மிக‌வும் உத‌வியா டைமுக்கு எல்லாத்தையும் முடிக்கிற‌ மாதிரி இருக்கும்.இதே மாதிரி பார்ட்டிக்கு போனா அமெரிக்க‌ன்ஸ் பார்ட்டின்னா ப‌ர‌வாயில்லை,இந்திய‌ன்ஸ் பார்ட்டின்னா நாங்க‌ தான் முத‌ல்ல‌ இருப்போம்.இத‌னால‌ இங்கே இந்திய‌ன்ஸ் டைம்ன்னு ஒன்னு இருக்கு...அதாங்க‌ 2 ம‌ணி நேர‌ம் தாம‌த‌ம்.இது இப்போவெல்லாம் எங்க‌ளுக்கு கைகொடுக்கிற‌து.
இதே நம்ம‌ இந்திய‌ன்ஸ் ம‌ற்ற அஃபிஷிய‌ல் ஒர்க்கோ,பார்ட்டியோ எதுனாலும் ப‌ர்பெஃக்ட்டாக‌த்தான் இருக்காங்க‌,ஆனா ந‌ம‌க்குள்ளேன்னு ம‌ட்டும் வ‌ரும் பொழுது அடா...அடா....அடாஆஆஆ....சூப்ப‌ர் ப‌ஞ்சுவ‌ல்.
இதுல வெளி வேலைக்கும் போற பெண்மணிகள் ரியலி க்ரேட் தான்.
எல்லோரும் வ‌ந்து அவ‌ங்க‌வ‌ங்க‌ அனுப‌வ‌ம் பேசுங்க‌...

வ‌ர‌ட்டுமா...
உமா.

மேலும் சில பதிவுகள்