சாபம் - உண்மையா?

தோழிகளே.... இன்னைக்கு ஒரு சந்தேகத்தோட வந்திருக்கேன். ;) சாபம்'னு சொல்றாங்களே அது உண்மையா? சாபம் பலிக்குமா? பலிக்கும்'ன... எவ்வளவு நாளில் பலிக்கும்? யாருடைய சாபம் பலிக்கும்? எது போன்ற சாபம் பலிக்கும்? யாருக்காது அனுபவம் உண்டா? சொல்லுங்க.

ஏன் இப்படி ஒரு கேள்வி'னு நினைக்காதிங்க. ;) அனுபவத்தில் சிலருடைய மன வேதனையால் பாதிக்கபட்ட குடும்பங்களை நான் பார்த்தது உண்டு. அதற்கு இவர்கள் கண்ணீரே காரணம் என்றும் நினைத்தது உண்டு. அது நானாக நினைத்ததா, இல்லை உண்மையா'னு சந்தேகம் வந்துடுச்சு. ஏன்னா எனக்கு தெரிஞ்சு கெடுதல் பண்ண நிறைய பேர் நல்லாவே இருக்காங்க. :D அவங்களால் யார் கண்ணீர் விட்டாலும் அவங்க சந்தோஷமா தான் இருக்காங்க. அப்படின்னா பாவ புன்னியம்'னு ஒன்னும் இல்லையா? இல்லை அது எல்லாம் அடுத்த ஜென்மத்துக்கு தான் வருமா (அப்படி ஒன்னு இருந்தா)? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, எனக்கும் இதே சந்தேகம்தான் நீண்ட நாளாவே இருக்கு. நானும் நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன் சாபம் விட்டவர்கள், பாவம் செய்பவர்கள் மற்றும் ஒருவர் நல்லா இருக்கக் கூடாதென்று அவர்களுக்குக் கெடுதல் செய்பவர்கள் நல்லாத்தான் இருக்கிறார்கள். சிறு உதாரணம்:- எல்லா நாடுகளிலும் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் செய்த செய்கின்ற பாவங்கள் ஏனையவர்களைவிட கொடியது, ஆனால் அவர்கள் இறுதிவரை நன்றாகவே இருந்து மடிகின்றனர். என்னைப் பொறுத்தவரை என்ன தவறாக இருந்தாலும் நாம் இந்த ஜென்மத்தில் செய்த தவறுக்கு இந்த ஜென்மத்திலியே அனுபவிக்க வேண்டும். அதைவிடுத்து மறு ஜென்மத்தில் அனுபவிப்பது அல்லது அவர்கள் வாரிசுகள் அதற்குரிய தண்டனையைப் பெறுவதெல்லாம் கேட்பதற்கு வேணும் என்றால் நல்லா இருக்கும். ஆனால் நிஜமாகவே தவறு செய்பவர்கள் அதற்குரிய தண்டனைய பெற்றே தீரவேண்டும். அப்படியென்றால்தான் இனிமேல் தவறு செய்பவர்கள் அவர்கள் வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துத் திருந்துவார்கள்.
அப்படியே அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்குத் தண்டனை கிடைத்தால், அவர்களுக்கு எப்படித் தெரியும் ஏன் என்று, மற்றும் அவர்களால் பாதிக்கப் பட்டவருக்கு எப்படித் தெரியும் அவர் தனக்குச் செய்த பாவத்திற்குத் தான் இந்த ஜென்மத்தில் தண்டனை அனுபவிக்கிறார் என்று??!! இப்பொழுது நாட்டில் நடப்பதைப் பார்த்தால் எல்லோரும் தவறு செய்யும் முன் ஏற்கனவே தவறு செய்தவர் நன்றாக இருப்பதைப் பார்த்து அவரை ஒரு முன் உதாரணமாக வைத்துத்தான் செய்கின்றனர். பாவச்செயல்கள் எங்கு பார்த்தாலும் மலிந்து இருப்பதற்கு காரணம் ஏற்கனவே தவறு செய்தவர்கள் வாழும் விதம்தான்.
சிலர் பிறந்ததிலிருந்து இறக்குவரை கஸ்டத்தைத் தவிர எதையுமே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களைப் பார்த்துச் சிலர் "இவர்கள் முன் ஜென்மத்தில் ஏதோ கொடிய பாவம் செய்து விட்டார்கள் அல்லது சாபம் திட்டுகளுக்கு ஆளாகி விட்டார்கள் அதனால்தான் இப்படி அனுபவிக்கிறார்கள்" என்பார்கள். அப்படியென்றால் இங்கு இறைசக்தி எங்கு இருக்கின்றது? ஏன் அந்த சக்தி ஒருவரை மேலும் மேலும் துன்புறுத்துகின்றது?

பிருந்தா

;-D

மேலும் சில பதிவுகள்