கிரில்டு சிக்கன் (ஃபுல்)

தேதி: May 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முழுக்கோழி - ஒன்று
எலுமிச்சை - ஒன்று
தந்தூரி மசாலா - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
சப்பாத்தி மாவு - 2 பெரிய உருண்டைகள்
வெள்ளைத்துணி - சிறிது
விரும்பினால்:
பேபி உருளை - 10
கலர்பொடி - ஒரு பின்ச்


 

க்ரில்டு சிக்கன் செய்ய சிக்கன் வாங்கும் பொழுது 700 - 800 கிராம் அளவில் இருப்பதாக பார்த்து எடுத்துக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து கடைசியாக அதில் மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தயிருடன் இஞ்சி பூண்டு விழுது, தந்தூரி மசாலா, மிளகாய் தூள், உப்பு கலந்து சிக்கன் முழுவதும் நன்கு பூசி விடவும். சிக்கன் கலராக இருக்க வேண்டுமென்றால் சிறிது கலர் பொடி சேர்த்துக் கொள்ளலாம். மசாலா பூசிய சிக்கனை 5 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும். விருப்பப்பட்டால் பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மிளகாய் தூள், உப்பு கலந்து சிக்கனுள் வைக்கவும்.
மசாலா தடவிய சிக்கன் முழுவதும் ஆலிவ் ஆயிலை தடவி வெள்ளை துணியை வைத்து முழுவதுமாக சுற்றி வைக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு உருண்டையை பெரிய மெல்லிய வட்டமாக தேய்த்து வெள்ளை துணியில் மூடி வைத்திருக்கும் சிக்கனை நடுவில் வைத்து மூடவும்.
இதைப் போல் மற்றொரு முழு சிக்கனையும் சப்பாத்தி மாவை வைத்து மூடி தயாராக எடுத்து வைக்கவும்.
அவனை முற்சூடு செய்து வைக்கவும். நன்கு மூடிய சிக்கனை முற்சூடு செய்த அவனில் 200 F ல் 1 1/2 மணி நேரம் க்ரில் செய்யவும். அவ்வப்பொழுது சிக்கனை திருப்பி விடவும்.
மேலிருக்கும் சப்பாத்தி தீந்து போனாலும் உள்ளிருக்கும் சிக்கன் தீயாது, நன்கு வெந்து விட்டதை பார்க்க சப்பாத்தி மற்றும் துணியை சற்று நீக்கி விட்டு சரி பார்க்கவும்.
போதுமான அளவு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து சப்பாத்தியை உடைத்து விட்டு துணியை அகற்றி, கத்திரியால் நறுக்கி மெயோனைஸுடன் பரிமாறவும். அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b> திருமதி. ஸாதிகா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள க்ரில்டு சிக்கன் இது. நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மேசைக்கு மேலே ஏறிக்கொண்டார் முழுசாக!!!
ஸாதிகா அக்கா நன்றாகச் செய்து காட்டியிருக்கிறீங்க.

ஏன் துணி போடுறீங்கள்? தப்பித்தவறி நாம் பார்க்காதுவிட்டால் நெருப்புப் பிடித்துவிடுமல்லோ? அதுசரி அரை மணிநேரம் என்று போட்டிருக்கிறீங்களே, நான் 2 மணிநேரம் 350 பாகையில் வைத்தும் உள்ளே அவியாமல் பின்னர் துண்டுகளாக வெட்டி வெட்டித்தான் அவித்து எடுத்தேன். ஒருவேளை இது சிறிய கோழி என்பதாலோ? அதன் பின்னர் எனக்கு முழுதாக செய்யும் எண்ணமே வருவதில்லை. ஒருவேளை நீங்கள் மசாலா பிரட்டியிருப்பதால் விரைவில் அவிகிறதோ?. இன்னொருமுறை முயற்சிசெய்கிறேன்... ஆசையைத் தூண்டிவிட்டீங்கள்.

இப் படத்தைப் பார்த்ததும் எனக்கு குழந்தை நினைவு ஒன்று வருகிறது. எங்கள் அப்பம்மா எங்களுக்கு ஒரு பாட்டுச் சொல்வா கதையோடு.... அது எப்படியென்றால் ஒரு கோழியைப் பிடித்து, உரித்து, சமைத்து, உண்ணும்வரை அது எப்படியெல்லாம் சொல்லுமாம் என்று. நல்ல ஒரு பாட்டு ஆனால் மறந்துவிட்டேன் ஒரு வரி மட்டும் நினைவில் இருக்கு.

கறிசமைத்து சோற்றுக்கு மேலே கறியைப் போட்டதும் "வெள்ளைக் குதிரைக்கு மேலே ஏறிக்கொண்டேன் ஏறிக்கொண்டேன் என்று சொல்லுமாம்" .... இதுதான். நல்ல குறிப்பு ஸாதிகா அக்கா சென்னைக்கு வந்தால் கிடைக்கும்தானே:)?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
உங்கள் சந்தேகங்களுக்கு வரிசையாக பதில் போட்டு விடுகின்றேன்.

துணி போடுவது சிக்கன் உலர்ந்த தன்மை அடைந்து நீர் பதம் வெளியேறாமல் இருப்பதற்காக.அதன் மேலே சப்பாத்தியால் மூடி இருப்பதால் ஈரத்தன்மை இருக்கும்.தீ பற்றிக்கொள்ளாது.(அடுத்த முறை நான் இதை சமைக்க தயக்கம் காட்டி விட்டீர்களே அதிரா?:-))

ரைவருக்கு ஒரே ரெய்ன் நினைப்புதானா?நான் எங்கே 1/2 மணி நேரம் என்று போட்டுள்ளேன்.1 1/2 மணி நேரம் என்றல்லவா போட்டுள்ளேன்.மேலும் சிறிய சிக்கனாக தேர்ந்தெடுக்கவும் என்றும் போட்டுள்ளேன்.

இஞ்சி பூண்டு,தயிர் எல்லாம் சேர்ப்பதால் வெந்து விடும் .மேலும் சிக்கனை புரட்டி விட்டு கிரில் பண்ணலாம்.

உங்கள் கோழியைப்பற்றிய பாடல் அருமையோ அருமை.கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று நினைக்கும் ஜாதி போலும் இந்த சிக்கன் ஜாதி.அதுதான் வாய்க்குள் போகப்போகின்றோம் என்று தெரிந்திருந்தும் //"வெள்ளைக் குதிரைக்கு மேலே ஏறிக்கொண்டேன் ஏறிக்கொண்டேன் என்று சொல்லுமாம்" //என்ற வரிகளைப்படித்து விட்டுத்தான் சொல்லுகின்றேன் :-)இனி சாதத்தில் சிக்கனை வைத்து சாப்பிடும் போதெல்லாம் இந்த பாடல் தான் நினைவுக்கு வரும்.

சென்னைக்கு வந்தால் கிடைக்கும் தானே?ஓ..ஓ..சிக்கன் என்ன முழு ஆட்டையே கிரில் பண்ணித்தருகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

கிரில் செய்ய துணி சுற்ற வேண்டுமா அப்படியே வைக்ககூடாதா.

சற்று முன்னர் நான் கொடுத்த பின்னூட்டத்தைப்பாருங்கள்.பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஓ ஸாதிகா அக்கா!!
விளக்கமான பதிலுக்கு நன்றி. இப்பத்தான் பார்க்கிறேன். ஒரு அரை என நினைத்துவிட்டேனோ:) எனக்கு இன்னும் ஒரு கதை நினைவிற்கு வருகிறது.

எங்கள் அண்ணன் ஸ்கூலுக்குப் போகும்போது ஸ்கூல் பஸ்ஸில் போய்வருவது வழக்கம். இலங்கையில் அனேகமாக ஆண்கள்/ பெண்கள் என தனித்தனியேதான் ஸ்கூல் பஸ் இருக்கும். அப்போ ஆண்களின் பஸ்ஸில் அட்டகாசத்துக்கு அளவே இல்லையாம். கண்டக்ரர் மார் கிட்டத்தட்ட சூசைட் செய்யாத குறையாகவே இருப்பார்களாம். ஒரு முறை ஒரு மிகவும் குண்டுப் பையன் ஏறினாராம். ஒரு பத்து வயதிருக்குமாம், ஏறிக் கண்டருக்குச் சொன்னாராம் "அண்ண ஒண்டு அரை ரிக்கெட் கொடுங்கோ" என்று. (அதாவது அரை ரிக்கெட் ஒன்று), உடனே எரிச்சலோடு நின்ற கண்டக்ரர் சொன்னாராம் "ஓம் தம்பி உம்மட ஸைஸ்ஸுக்கு ஒண்டரை ரிக்கட் தான் தரவேண்டும்" என்று. ஒரே சிரிப்பாகிவிட்டதாம்.

இக்கதையை ஞாபகப் படுத்திவிட்டீங்கள். ஐயையோ முழுஆட்டைக் கிறில் பண்ணியா:)? எனக்கு அதுதான் சரியான விருப்பம். (காதோடு சொல்கிறேன், இப்போ நான் சைவம், வரும் புதன்கிழமைதான் இனிச் சாப்பிடத் தொடங்குவேன்)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சாதிகா லாத்தா சூப்பரா இருக்கு டிப்ரண்டாகவும் இருக்கு இந்த டைம் பார்த்து தந்தூரி அடுப்பை ஊரில் வைத்துட்டே வந்துட்டேன் அதனால் என்ன சீக்கிரம் எடுக்க விட்டு செய்துட வேண்டியதுதான் :)

உங்க முர்தபா சூப்பர்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நலமா?பையன் எப்படி இருக்கின்றார்?உங்கலுடன் போனில் பேசக்கூட நேரம் இல்லை.காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றாத குறை.கிடைக்கும் நேரத்தில் அலுப்பில் தூங்கத்தான் தோன்றுகிறது.ஊரில் இருந்து வந்து இருப்ப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா 1 மாதம் முன்பு (முழு கோழி கிரில்) இந்த சிக்கனை செய்தேன் ரொம்ப நல்ல வந்தது. துணியும் சுத்தல, ரொட்டியும் வைகக்ல அப்படியே 1 மணி நேரம் சூப்பர் , நான் மசாலா மட்டும் சிறிது மாற்றம் செய்து கொண்டேன். குபூஸ், ஹமூஸுடன் வைத்து சாப்பிட்டோம்

Jaleelakamal

ஜலீலா,பின்னூட்டத்திற்கு நன்றி.கிரில்ட் சிக்கன் செய்து பார்த்தமைக்கு மகிழ்ச்சி.துணி,ரொட்டி சுற்றி வேகச்செய்தால் அதன் டேஸ்ட் வேறாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website