பூண்டு தோசை

தேதி: May 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி மாவு - ஒரு கப்
பூண்டு - 25 பல்
இட்லி மிளகாய் பொடி - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் அல்லது தோசைக்கல்லில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.
பூண்டை 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி அளவு தோசை மாவை எடுத்து ஊற்றி தோசை வார்க்கவும்.
மேலே இட்லி மிளகாய் பொடி தூவி அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் பூண்டை தூவவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். தோசை கரண்டியை வைத்து ஒரு முறை தோசையின் மீது அழுத்தி விடவும். திருப்பி போடும் போது பூண்டு கீழே விழாமல் இருக்கும்.
தோசை வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
மொறுமொறு பூண்டு தோசை ரெடி. இதனுடன் எதுவும் தொட்டுக் கொள்ள தேவையில்லை. விரும்பினால் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள <b> திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் </b> அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூண்டுத்தோசை நன்றாக இருக்கு. அதெப்படி இவ்வளவு மெல்லிசாக தோசை செய்திருக்கிறீங்கள்? எல்லாம் கைப்பக்குவம்தானோ?

எனக்கு ஒரு சந்தேகம், அதெப்படி இட்லி மாவில் தோசை செய்திருக்கிறீங்கள்? இட்லிக்கு வைக்கும் அளவுகளும் தோசைக்கு வைக்கும் அளவுகளும் வித்தியாசமெல்லோ? அப்போ எப்படி இட்லிமாவில் தோசை இவ்வளவு அழகாக வந்திருக்கிறது. இந்த இட்லி மாவிற்கு ரவை சேர்த்ததா அல்லது அரிசி சேர்த்துச் செய்ததோ? முடிந்தால் என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பார்க்க பார்க்க ருசிக்க தோணுது.மொறு மொறுன்னு அருமையாக இருக்கு.அதிரா நானும் இட்லிமாவில் தோசை வார்ப்பதுண்டு.உளுந்து ஒரு அளவு என்றால் அரிசி நான்கு அளவு வீதம் ஊறவைத்து முதல் நாள் மாலை அரைத்து மறு நாள் காலை சுடலாம்.நன்றாக வரும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.