குழந்தைகளுக்கு கண்ணாடி

தோழிகளே...குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே பார்வை குறைபாட்டுக்காக கண்ணாடி போட்ட அனுபவம் இங்கு யாருக்காவது உள்ளதா? கண்ணாடி போடாமலேயே ட்ரீட்மென்ட் செய்து வெற்றி கண்ட அனுபவம் யாருக்காவது உள்ளதா?உங்களது ஆலோசனைகள் எனக்கு உடனடியாக தேவைப்படுகிறது. பார்வை குறைபாட்டுக்கான (கண்ணாடி உபயோகப்படுத்தாத) ட்ரீட்மென்டும் அது பற்றிய வேறு இணையத்தள முகவரி தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்...இது பற்றி அறுசுவையில் ஏற்கனவே ஆலோசித்திருந்தால் அந்த லிங்கை கொடுத்தால் எனக்கு உபயோகமாக இருக்கும்.

naan 6th std padikkum podhe kannadi aniya aarambithu vitten...pondicherry arvind ashramil kangalukkana payirchi koduppadhai arindhu ennoda parents poi paarthanga...aanal andha payirchi thodarvadhai vittal power(+or-)adhigama aagidum...so,naan andha treatment eduthukkala..kannadi anivadhe best appadinnu ellorum sollranga...nalla therinja piragu neenga treatment edunga...kanngal vishayamache...

ஹலோ நித்யாபாரத்...நல்லா இருக்கீங்களா? . சிலவகை ட்ரீட்மென்டுகளில் இப்படித்தான் சில டிஸட்வான்டேஜஸ் இருக்கும். அதை எடுத்து சொன்னதற்கு நன்றி. நம்முடைய காலங்களில் 6வது படிக்கும்போது கண்ணாடி போட்டாலே என்ன ஏது என்று விசாரிப்பார்கள். இப்பொழுதுள்ள பிள்ளைகள் மிகவும் சிறிய வயதிலேயே கண்ணாடி போடுகிறார்கள். நேற்று வாக்கிங் போகும்போது கூட ஒரு 6 வயது சிறுவன் க்ளாஸ் போட்டிருந்ததை பார்த்தேன். பவர் கூட அதிகமாக இருக்கும் போல...அவன் அணிந்திருந்த க்ளாஸ் திக்காக இருந்தது.

உங்களது கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி Nithya

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

இந்த கண் ட்ரீட்மென்ட்டுக்கு, கொஞ்ச நாள் முன் அறுசுவையில் ஒருவர் ‍‍perfect vision ?? (பெயர் சரியாகத் தெரியவில்லை) என்ற வெப்சைட் பற்றி சொல்லியிருந்தார். தான் அதைப் பின்பற்றியதாகவும், முழு குணம் அடைந்ததாகவும் சொல்லியிருந்தார்.

அதைப் பற்றி யாருக்காவது ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள். அல்லது அந்த இழையின் லிங்க் கொடுங்கள்.

தோழிகளே... குழந்தைகளின் கண்களில் ஏற்படுகின்ற குறைபாடுகளையோ அதில் ஏதாவது சந்தித்த அனுபவமோ சந்தித்தவர்களை சந்தித்த அனுபவமோ இருந்தால் இந்த த்ரெடில் பகிர்ந்து கொள்ள வாருங்கள் வாருங்கள் என்று அழைக்கிறேன்.

கண்களுக்கு மிகவும் ஊட்டச்சத்து தரும் உணவுமுறைகளையும் சொல்லி ஆலோசனை தாருங்கள்...

காத்து இருக்கிறேன்.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

;-D ;-D

அன்பு தாஹிரா
எனக்கும் அதைப் பற்றி ஒன்றும் தெரியாது..என் பெரியம்மாவின் இரு பிள்ளைகளும் 5 வயதில் கண்ணாடி போட்டுக் கொண்டார்கள் இன்று அவர்களுக்கு 24,29 வயதாகிவிட்டது இப்பொழுது லேசர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள்..சிறு வயதில் கண்ணாடியில் கொஞ்சம் பெரிசானதும் லென்ஸ் உபயோகிப்பார்கள்..
அன்றெல்லாம் எல்லாரும் பரிதாபமாக பார்ப்பார்கள் கண்ணாடி இவ்வளவு சிறுவயதிலா என்று நானும் தங்கையும் பேசிக் கொள்வோம் ச்சே நமக்கு மட்டும் கண்ணாடி இல்லையே அவங்களுக்கு எவ்வளவு ஸ்டைலா இருக்கு என்றுபோட்டுக் கொள்ள ஆசைப்படுவோம்:-D
கேரட் காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் கண்களுக்கு பார்வை குறைபாடு வராது என்பார்கள் ஆனால் நான் சொன்ன அந்த இருவருமே நல்ல காய்கறிகள் சாப்பிடுபவர்கள்
வீட்டில் டிவிக்கு 6 அடி தள்ளி டிவியை வைய்யுங்க..1 மணிநேரத்துக்கு மேல் ஆஃப் பன்னி விடுங்க..இதையெல்லாம் செஞ்சுகிட்டு தான் இருப்பீங்க இருந்தாலும் சொல்கிறேன்..பிசியிலான விளையாட்டையும் முக்கியமாக கட்டுப்படுத்த வேண்டும்
சைன்ஸ் ப்ரச்சனை உள்ள பிள்ளைகள் கண் சொரிவதால் அடிக்கடி கண்ணை கசக்கினாலும் பார்வை குறைபாடு வரும் என பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் சரியா என்று தெரியவில்லை

நீங்கள் கேட்ட லிங்: http://www.arusuvai.com/tamil/forum/no/12522?from=90&comments_per_page=10

நான் 6 ஆவது படிக்கும் போது கண்ணாடி போட்டேன், பிடிக்காதால் (சோடா புட்டி) யோகாவின் மூலம், தீர்வு கிடைத்தது. பின் 43 வயதில் மீண்டும் +1.75 அதற்கு தீர்வு தான் Perfect Vision பயிற்சி. நேரம் இன்மையினால் விவரமாக எழுத முடியவில்லை.

பி.கு: மிகவும் நன்றி. சகோதரி ராதிகா சுரேஷிக்கு நான் விடுமுறையில் இருப்பதை தெரியப்படுத்தியதற்க்கு.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திரு. ஹைஷ்,

நீங்க கொடுத்த லிங்க் ஏற்கனவே நான் பாத்துட்டேன். ஆனா, அதுல அதிக விவரம் இல்லை. நீங்க எடுத்த பயிற்சி, எங்கே, எப்படி என்று முடிந்தால் விவரமாகச் சொல்லவும். அல்லது வெப்சைட், தொலைபேசி இருந்தால் தாருங்கள்.

இந்த லிங்லில் பார்க்கவும்,

http://sriaurobindoashram.info/Content.aspx?ContentURL=_StaticContent/SriAurobindoAshram/-03%20The%20Ashram/Departments/School%20For%20Perfect%20Eyesight/-00%20Contents.htm

இதில் தான் நான் பயிற்சி பெற்று பலன் அடைந்தேன். விவரமாக பிறகு எழுதுகிறேன்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்றி திரு.ஹைஷ்!!

மேலும் சில பதிவுகள்