வெண்டைகாய்

வணக்கம்

நான் எப்பொழ்து வெண்டைகாய் சமைதாலும் கொழ கொழ நு வருது.பின்பு நிறய்ய எண்ணைய் ஊற்றினால் நன்றாக வருகிறது.வெரு என்ன செய்யலாம்.நான் பால் சாப்பிட மாட்டேன்.உதவி தெவை

பிரீத்தி தேடுக கட்டத்துக்குள் வெண்டைகாய் என்று டைப் பண்ணீ தேடுங்கோ பால் விடாமல் நிறைய செய்யக்கூடியது இருக்கு.எனக்கும் இந்த கொழ கொழ பிரச்சனை எப்பவுமே வருது.
ஆசியாக்காவின் குறிப்பிலிருந்து செய்து பாத்தேன் நல்லா வந்தது.இதோ http://www.arusuvai.com/tamil/node/11959

சுரேஜினி

(1)சிறிது எண்ணையில் வெங்காயம் தாளித்த பின்பு அதில் வெட்டிய வெண்டிக்காயை போட்டு பிரட்டி சிறிதுநேரம் அவியவிட்டபின்பு நீங்கள் விரும்பியபடி கறியை செய்யவும் இப்படி செய்தால் வெண்டிகாய் கொழ கொழ என்று வராது. (2)வெண்டிக்காயை நன்றாக கழுவிய பின்பு அதனை ஒரு துணியால் துடைத்துவிட்டு வெட்டவும் இப்படி செய்தால் வெண்டிகாய் கொழகொழ என்று வராது.(3)வெட்டிய பின்பு அதனை கழுவ கூடாது இப்படி செய்தால் வெண்டிகாய் கொழ கொழ என்று வராது.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அன்புள்ள ப்ரீத்தி!

வெண்டைக்காயை சமைக்கும்போது, குழம்புக்கோ, கறிவகைகளுக்கோ சமைக்க வேண்டுமானால் முதலில் வெண்டைக்காயை சற்று பெரிய துண்டுகளாக வெட்டி சில சொட்டுக்கள் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி வெண்டைக்காயை மிதமான தீயில் வறுத்தால் வெண்டைக்காய் துண்டுகளின் மேல் சற்று நிறம் மாறி, இலேசாக வறுபட்ட தடம் தெரியும். அப்போது எடுத்து விடவும். பிறகு குழம்பிற்கு உபயோகிக்கலாம்.

வெண்டைக்காய் பொரியல் அல்லது வதக்கல் செய்ய வேண்டுமானால் வெண்டைக்காயை சிறிய துண்டுகளாய் அறிந்து வாணலியில் போட்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதிகம் கிளறாமல் வறுக்கவும். ஒரு முறை பிரட்டியதும் வெங்காயம், தக்காளி போடலாம். அடுத்த முறை பிரட்டியதும் தூள்கள் போடலாம். கடைசியாக கறி கிட்டத்தட்ட பதமாகி சுண்டியதும் சரியான அளவில் உப்பைப்போடலாம். இந்த முறைகளில் செய்தால் வெண்டைக்காயில் கட்டாயம் கொழகொழப்புத்தன்மையைப் பார்க்கவே முடியாது.

மேலும் சில பதிவுகள்