அரிசிரவை இனிப்பு கொழுக்கட்டை

தேதி: May 19, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அரிசிரவை - 2 கப்
வெல்லம் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய் - 2
நெய் - 1 டீஸ்பூன்


 

வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சூடேற்றவும், அதில் ஏலக்காயை தட்டிப்போடவும்.
பாகு கொதிக்க ஆரம்பித்து கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது அரிசிரவையை அதில் கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும்.
கலவை கெட்டியானதும் கையில் நெய் தடவி அரிசிரவையை உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைக்கவும்.
இப்போது சுவையான அரிசிமா இனிப்பு கொழுக்கட்டை தயார்.


அரிசிரவை கடைகளில் கிடைக்கும் அல்லது நாம் பச்சரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து பின்னர் ஒரு பேப்பரில் பரப்பி ஈரம் போக காயவைக்கவும், அரிசியில் ஈரம் காயந்தவுடன் அதை மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கொரகொரப்பாக திரித்துக்கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்