வெங்காய வடகம்

தேதி: May 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (5 votes)

 

சாதம் - 300 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 7
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் செத்தல் மிளகாய், சோம்பு, மிளகு ஆகியவற்றை அரைக்கவும்.
அதன் பின்னர் சாதத்தையும் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் அரைக்கவும்.
அரைத்த எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு தட்டில் அலுமினியப் பேப்பரை விரித்து அதில் இந்த உருண்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாதபடி தட்டி வைக்கவும்.
இருபக்கமும் நன்கு காயும்படி திருப்பி திருப்பி வைத்து வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். இதைப் போல் வடகம் நன்கு காயும் வரை வைத்தெடுக்கவும்.
தேவையான போது எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான வெங்காய வடகம் தயார். இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் திருமதி. சாதிகா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த வெங்காய வடகம் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அதிரா எப்படியிருக்கீங்க? எனக்கு வடகம்னா உயிர். உடனே செய்து பார்த்திடுவேன். எனக்கு ஒரு சந்தேகம் இதில் வெங்காயத்தை அரைக்க சொல்லியிருக்கீங்களே தண்ணீர் விடாதா? ஏன்னா சாதத்திலும் தேவைப்பட்டா தண்ணீர் சேர்க்கசொல்றீங்க. எண்ணெய் ரொம்ப குடிக்குமே.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

முதல் முறையாக என் குறிப்பில் இருந்து சமைத்து யாரும் சமைக்கலாமில் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.மிக்க நன்றி அதிரா.அழகாக படம் எடுத்து அனுப்பி இருக்கின்றீர்கள்.நீங்கள் பொறுமையாக வடையாக தட்டி இருக்கின்றீர்கள்.நான் அப்படியே கிள்ளி கிள்ளி காய வைத்து விடுவேன்.மீண்டும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் அதிரா‍ ,

இந்த வெங்காய வடகத்தை காயவைத்து பொரித்து அப்படியே சாப்பிடுவதா?இல்லை குழம்பு செய்யனுமா? ஸ்னாக் மாதிரியா?எனக்கு தெரியவில்லை அதிரா கொஞ்சம் சொல்லுங்களேன்.
சிறு வயதில் நான் கேள்விப்பட்டதுண்டு இதைப்பற்றி,ஆனால் எனக்கு எதுவும் தெரியாது!

அன்புட‌ன்
உமா.

அன்பு உமாராஜ், நான் நலமே, குட்டிமகன் என்ன செய்கிறார்?சாப்பிட முடியாத நேரம் மலைவாழப்பழம் கிடைத்தது. இப்போ சாப்பிடமுடியும் ஆனால் கிடைக்குதா:)?. எனக்கும் வடகம் சரியான விருப்பம். குழைக்கும் போது இங்கே தண்ணீர் சேர்ப்பதில்லை, எனவே பிரச்சனை ஏற்படவில்லை. சப்பாத்திப் பதமாக வந்தது. சாதத்திற்கு தண்ணீர் சேர்த்தபின்னர்தான் கிரைண்டர் திரும்பியது, அதுதான் தண்ணீர் ஒரு 3/4 மேசைக்கரண்டிதான் சேர்த்திருப்பேன். வெங்காயத்தில் பெரிதாக தண்ணீர்த் தன்மை இல்லை.

எண்ணெய் குடிக்கவில்லை. நல்ல வாசமாகவும் சுவையாகவும் இருந்தது. சாதம் சேர்த்ததால் காய்வதற்குத்தான் நாட்கள் எடுத்தது.

ஸாதிகா அக்கா மிக்க நன்றி. முன்பு அம்மா ஓரிரு தடவைகள் வேப்பம்பூ வடகம் செய்திருக்கிறா. நான் தான் பொறுமையாக இருந்து தட்டிக் கொடுப்பேன், அதுதான் இப்போ உதவியது.

உமா நீங்கள் இதுவரை வடகம் சாப்பிட்டதில்லையா? அப்போ நிட்சயம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் எங்கிருக்கிறீங்களென்று தெரியாது. தமிழ்க் கடைகளில் கிடைக்கும். பப்படம் போல் பொரித்து அப்படியே சாப்பிடுவது. நன்கு காய்ந்தால் நீண்டநாட்கள் வைத்திருக்கலாம். தேவைப்படும்போது பொரித்தால் சரி. அதிகம் பொரிய விடுவதில்லை. எண்ணெயில் போட்டு உடனே எடுத்துவிடவேண்டும்(கடுமையாகப் பொரியத் தேவையில்லை). சாதம், புட்டு இவற்றுக்கு பொருத்தமானது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்