பட்டிமன்ற தலைப்பு-அயல் நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு தமிழை அதிகம் கற்றுத்தருவது

தோழிகளே, நான் ஒரு சில பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன்.கத்தாரில் இருக்கும் நான் இனி இங்கு நடக்க இருக்கும் தமிழ் நிகழ்ச்சிகளில்,மகளிர் பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு சொல்லலாம் என முடிவு செய்துள்ளேன்.அதனால் என் போன்று அயல்நாட்டு சூழ்னிலையில்
இருக்கும் மகளிரின் கருத்துகணிப்பு ஒரு தலைப்புக்கு தேவைபடுகிரது.

தலைப்பு:அயல்நாட்டில் வாழும் நம் குழந்தைகளுக்கு தமிழை அதிகம் கற்று தருவது

பெற்றோர்களா? ஊடகங்களா?(டிவி,பத்திரிக்கை,கணினி....போன்ற )

மற்ற தோழிகள் கோபித்து கொள்ள வேண்டாம்...தலைப்புக்காகதான் அப்படி கேட்டேன்.

அதுதவிர வேறு புதுமையான தலைப்பு (டிவீயில் இதுவரை வராத தலைப்பாக)உங்களுக்கு தோன்றினால் எனக்கு எழுதுங்கள்.எந்த தமிழ் உள்ளங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.

உங்களின் கருத்துமழைகளுக்கு பூமியாய் காத்திருக்கும்

உங்கள் தோழி
இளவரசி

மேலும் சில பதிவுகள்