மறைபொருள் ரகசியங்கள் பகுதி 3

மறைபொருள் ரகசியங்கள் முதல் பகுதியின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/12198

மறைபொருள் ரகசியங்கள் இரண்டாம் பகுதியின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/12522

பகுதி 1 & 2 சில பட விளக்கங்களின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://picasaweb.google.co.in/haish12/hvLWwI# அல்லது
http://picasaweb.google.co.in/haish12 இல் மறைபொருள் என்ற ஆல்பத்தை பார்க்கவும்.

பகுதி 3 சில பட விளக்கங்களின் லிங் கிழே கொடுக்க பட்டுள்ளது.

http://picasaweb.google.co.in/haish12/3#

படம் பார்த்து வையுங்கள், வந்து படத்தின் கதையை சொல்கிறேன்.

பகுதி ஒன்று மற்றும் இரண்டில் உள்ளவற்றை மீண்டும் படித்து விட்டு ஏதாவது இன்னும் கேள்விகள் இருந்தால் (??? !!!)கேட்டு வைக்கவும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அருட்காப்பு

அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!

முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.

வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே காயகற்பக் கலையாகும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

("யாழ்ப்பாணத்தில் ஒருவர் இறந்து விட்டதாக நினைத்து அவரை எல்லோரும் சுடுகாட்டில் எரித்து விட்டார்கள். ஆனால் அவரோ மயக்க நிலையில் இருந்திருக்கின்றார். அவர் உடல் முழுவதும் தீப்பற்றியதன் பின் எழுந்திருக்க முயற்சி செய்திருக்கின்றார், அவரின் மேல் விறகுக் கட்டைகளை வைத்து எரித்ததால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை, யாராலும் அவரைக் காப்பாற்றவும் முடியவில்லை" என்று அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.)

நீண்ட ஆயுளில் ஆசை கொள்வதைவிட்டு எம் ஆயுள்காலத்தில் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது என்பது என் கருத்து.

பிருந்தா

ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படித் தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத் தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதே போல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான 'ஆன்மீகக் கல்வி'யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். உண்மையில் மனிதருக்குப் பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை. ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெறவேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனிதகுலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

இறையுணர்வாகிய "பிரம்மஞானம்" பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து 'மனநிறைவு' உண்டாகும்.
பிரம்மஞானம் உலகில் மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடைப்பட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அதை உணர்ந்து கொண்டு, தக்க முறையில் அந்தத் தடைகளைக் களைய வேண்டும். தடைக்குக் காரணங்களாவன:

அனைத்தியக்க அருட்பேராற்றலான இறைநிலை - பிரம்மம்,
அதிலிருந்து தோன்றிய விண்,
விண் சுழலிலிருந்து தோன்றிய காந்தம்,
காந்தத் தன்மாற்றங்களாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம்
– இவற்றின் கடைசி அலை இயக்கமாகிய மனம்.

இவையனைத்தும் மறை பொருட்கள். இவை இல்லையென்று மறுத்துக் கூற முடியாது. இவ்வாறு உள்ளன என்று புலனறிவுக்கு எடுத்துக் காட்டவும் முடியாது. ஆயினும், இவற்றை அறிவதற்காகவே ஆறாவது அறிவு எனும் சிந்தனையாற்றல் மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஐந்து புலன்கள் மூலம் தோற்றப் பொருட்களை உணர்வது ஐயறிவு.

புலன்கள் மூலம் உணரப் பெறும் பொருட்களுக்கு மூலமான மனம், காந்தம், விண், மெய்ப்பொருள் இவற்றை உணரக்கூடிய அறிவு தான் ஆறாவது அறிவு. புலன்களால் பொருட்களை உணரும்போது மன அலைச்சுழல் மிகவும் விரைவாக இயங்குகிறது. அந்த விரைவு நிலையில் மறைபொருட்கள் விளங்கா. மன அலைச்சுழல் விரைவை அகத்தவச் சாதனையால் குறைத்து, அந்த நுண்ணிய நிலையில் தான் மறைபொருட்களை உணர முடியும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஸ்

நல்வரவு... விடுமுறை சுகமாக கழிந்ததா? உங்கள் பிள்ளைகளில் ஒருவரும் இந்த வருடம் தன் கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்க போகிறார் தானே... அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்...

உங்கள் பகுதி இரண்டில் பாதியில் இருந்து நான் எஸ்கெப் ஆகி விட்டேன்... காரணம் எனக்கும் அங்கு கேள்வி கேட்டிருந்த ஒரு தோழிக்கும் ஒரே மாதிரி கனவு - அதன் பலனை கண்டு தான்...

மனநிறைவு பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

கணவன்-மனைவி, அவர்களின் பெற்றோர்கள், குழந்தைகள் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் எனப்படுகிறது. பொருள் ஈட்டும் திறன் வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால் தான் மனிதன் வாழ்வு அமைதியாக நிறைவாக நன்கு நடைபெறும். குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது. வயது முதிர்ந்தவர்களால் (பெற்றோர்) பொருள் ஈட்ட முடியாது. வாலிபப் பருவத்தினர்கள்தான் உழைத்துப் பொருள் ஈட்ட வேண்டும். அதைக் குழந்தைகளும் முதியோர்களும் கூடித் துய்த்துக் குறையின்றி வாழ வேண்டும். இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது. இந்த இயற்கை நியதியானது பெற்றோர் மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும்போது அதைத்தான் குடும்பம் எனகிறோம்.

குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களை கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை, கணவன்-மனைவி இருவருமே உயிர் போல் காக்க வேண்டும். இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும், செழிப்பும், இன்பமும் ஆக அமையும்.

அவரவர்கள் பிறவித் தொடர்பாக உள்ள உண்மை உருவங்கள் அவரவர்களுடைய குழந்தைகளே. அவர்கள் எதிர்காலத்தில் செம்மையாக வாழவும், குடும்பக் கடமைகளை பொறுப்போடு நிறைவேற்றவும் ஊருக்கும் உலகுக்கும் பயனுள்ள முறையில் நடந்து கொள்ளவும் ஏற்றவகையில் கல்வி, ஒழுக்கம், தொழில், திறன், கடமையுணர்வு இவை உடையோர்களாக ஆக்க வேண்டியது பெற்றோர் கடமை. இதை உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றிலும் எந்த அளவு விட்டுக் கொடுத்தேனும் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நமது பெற்றோர்களின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் உரிய மதிப்போடு வைத்துக் கொள்வதால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அமையப்பெறுகிறது.

மனிதனுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதிர்வு என்பது இயற்கை நியதி. அதனால் இதை உணர்ந்து தனி மனிதனாக வாழ்வது அரிது. இதனால் உலகில் வாழ்வதற்கு குடும்பம் மிக இன்றியமையாததாகிறது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரர் Haish,
உங்கள் மறைபொருள் பகுதி ஒன்றில் கிட்டப் பார்வை தவிர்க்க சில உணவு முறை கடை பிடித்ததாக கூறியிருக்கிறீர்கள்.என் பையன் (12 வயது) கிட்டப் பார்வைக்காக கண்ணாடிப் போட்டிருக்கிறான். இதை நிவர்த்தி செய்ய உதவுவீர்காளா?
Save the Energy for the future generation

Save the Energy for the future generation

அன்பு சகோதரி பிருந்தா: நன்றி,

அன்பு சகோதரி திருமதி சேகர் : வரவேற்ப்புக்கு! மிக்க நன்றி.

அன்பு சகோதரி ஆசியா உமர் : தமிழ் தட்டச்சு தெரியாத காரணத்தினால் சரியான முறையில் பகுதி 1 & 2 வில் பதில் அளிக்க முடியவில்லை. இப்போது ஒரளவிற்கு எளிமையாக இருப்பதால் முடிந்தவரை பதில் அளிக்கிறேன். தழிழ் தட்டச்சு நான் கற்றுக்கொள்ள அவர்களே அறியாமல் உதவிய அன்பு சகோதரி ஆசியா உமர் (NHM Writer software) நன்றி.

அன்பு சகோதரி அதிரா, திருமதி சேகர் : இதுவரை இரண்டு இழையிலும் விடாமல் துரத்தி துரத்தி ஊக்கமளித்த அன்பு சகோதரிகள் அதிரா, திருமதி சேகர் இருவருக்கும் நன்றி.
-----------
தாமதமான பதிவுக்கு வருந்துகிறேன். எல்லா நாட்களும் நமது நாள் இல்லை அல்லவா? அதனால் தான் இது வரை யாருக்கும் பதில் அளிக்கவில்லை. மின்னஞ்சல் பதில் இனிமேல்தான் எழுத போகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். (The planetary positions are not OK for giving answers to any problems till now)
பயணங்களும், அலுவல்களும் முடிந்துவிட்டு இப்போதுதான் வீட்டுக்கு வந்தேன் (0345 IST). ஒரு வாரத்திற்கு அதிக வேலைகள் இல்லை. மகன் +2 வில் 95% மதிபெண் (கணித்தில் 100%) நெட் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த போது அன்பு சகோதரி செந்தமிழ் செல்விதான் பார்த்து சொன்னார். (மிகவும் நன்றி). மகனுக்கு சிக்கன் ப்ஃபாக்ஸ் வந்து இப்போது சரியாகி விட்டது. அதனால் ஒரு நுழைவு தேர்வு எழுத முடியவில்லை. இன்னும் இரண்டு நுழைவு தேர்வுகள் ஜூன் மாதம் இருக்கிறது.

விடுமுறையில் சந்தித்த முதல் அருசுவை உறுப்பினர் சகோதரி செந்தமிழ் செல்வி, அவர் கணவர், மகள், மருமகன். குழந்தை பிறந்த பின் லதா மருத்துவமனை சென்று குட்டி தம்பியை பார்த்து தூக்கி விளையாடி விட்டு குழந்தை அப்பா மாதிரி இருக்கான் என்றார்.

நவகிரக சுற்றுலா போகும் போது திரு அட்மினை சந்திக்கலாம் என்று இருந்தேன். நேரம் இன்மையினால் முடியவில்லை. இனி பிஸ்னசை காலையில் பார்போம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

எனக்கு 9-10 வயது இருக்கும் போது ஓளி, ஓலியில் நிறைய ஆராய்ச்சி செய்வேன். லென்ஸ்களை வைத்து டெலிஸ்கோப், மைக்ரோஸ்கோப், காமெரா, பிலிம் புரோஜெக்டர் போன்ற கருவிகள் செய்து விளையாடுவேன். அதில் இருந்து வரும் ஒளியால் என் கண் பாதித்தது. அப்போது என் தந்தையின் பண பற்றாகுறையினால் நல்ல ”சோடாபுட்டி” கண்ணாடி வாங்கி கொடுக்க முடியவில்லை. அவர் வாங்கி கொடுத்தது எனக்கு பிடிக்கவில்லை. வகுப்பில் எல்லோரும் ”சோடாபுட்டி” என்று சொன்னதால் அதை வேண்டும் என்றே கீழே போட்டு உடைத்து விட்டு, இனி நான் கண்ணாடியே போட மாட்டேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்தோம். அங்கு இருந்த ஒரு யோகா ஆசிரியர் இடம் என்னை அழைத்து சென்று யோகா பயின்றேன். ஒரு மாத்தில் கண் சரியாகிவிட்டது. அதனுடன் மீன் எண்ணை மாத்திரை மட்டும் சாப்பிட்டேன்.

அதன் பிறகு என் கண்ணை எவ்வள்வுக்கு எவ்வள்வு ”அப்யூஸ்” பண்ண முடியுமோ அவ்வள்வு செய்தேன். அதாவது. 17 வயதில் இருந்து ஆசிலாஸ்கோப், ரேடார் கருவிகளின் திரை, டிவியில் படம் பார்த்தால் 3 அல்லது 4 படம் தொடர்ச்சியாக பார்ப்பது, மெயின் ப்ரேம் கணணியில் 1980 இல் இருந்து குறைந்தது 10-15 மணி நேரம் வேலை செய்வது, பிறகு பிசியில் மாலை அமர்ந்தால் காலை லதா காப்பி கொடுக்கும் போதுதான் காலையாகி விட்டது தெரியும். அந்த அளவுக்கு கண்களை உதாசினம் படுத்தினேன், இங்கு இறையாற்றலுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

அதன் பின் நடந்த்தைதான் பகுதி இரண்டில் எழுதி இருக்கிறேன். Perfect Vision (பாண்டிச்சேரி) சென்று பயிற்சி (Reading Glass +1.75 in 2004-05) எடுத்த போதுதான் நான் எப்படிபட்ட வாழ்கை முறை வாழ்ந்து இருக்கிறேன் என்று. அவர்கள் சொல்லியது:
நாம் பிறந்த்தில் இருந்து இறக்கும் வரை கண்ணோடுதான் இருக்கிறோம், ஆனால் பொக்கை வாயோடு பிறந்து பொக்கை வாயோடுதான் மடிகிறோம். நடுவில் வந்து நடுவில் இழக்கின்ற இந்த பற்களை நாம் எவ்வளவு பராமரிக்கிறொம் ஆனால் பிறந்த்தில் இருந்து மடியும் வரை உள்ள கண்களை ஏன் நாம் பராமரிப்பது இல்லை! எவ்வளவு உண்மை இதில் இருக்கிறது.

அங்கு என் கண்களை பரிசோதித்து 10 பயிற்சிகள் கொடுத்தனர். மூன்றாம் நாள் நான் கண்ணாடி இல்லாமல் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு இன்று வரை கண்ணாடி இல்லை. அந்த பயிற்சிகள்:

1. கண்களில் தேன் அல்லது க்ளுகோஸ் RL இரண்டு சொட்டு விட்டு இரண்டு நிமிடம் கண்களை முடி சூரியனை நோக்கி சுவிங் செய்ய வேண்டும். ( கண்களுக்கான நேரடி உணவு/சக்தி தேன், சூரியனின் ஆற்றல் முடியிருக்கும் இமை வழியே செல்லும், அது தொடர்ந்து ஒரே இடத்தை தாக்காமல் இருக்கதான் சுவிங் செய்வது)

2. அவர்கள் கொடுக்கும் கண் கழுவும் கிண்ணம் கொண்டு இரண்டு நிமிடம் ஒவ்வொரு கண்ணாக கழுவ வேண்டும். ( காற்றில் உள்ள மாசுகள் எல்லாம் கண்களில் படிந்து இருபதை சுத்தப்படுத்த, அதிலும் குறிப்பாக சைக்கிள், இரு சக்கர வாகனம் ஓட்டுவது மாசுகளை இன்னும் அதிகரிக்கும்)

3. ஒரு இருட்டு அறையில் மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஒரு கண்ணை முடி மற்ற கண்ணால் கையில் இருக்கும் அட்டையில் உள்ள மிக பெரிய எழுத்தில் இருந்து மிக சிறிய எழுத்துவரை படிக்க வேண்டும் பின் அடுத்த கண்ணாலும் படிக்க வேண்டும். பிறகு வெளியே வந்து சாதாரண வெளிச்சத்தில் அதே போல் செய்ய வேண்டும். ( மிக குறைந்த ஓளியில் கண்களின் போகஸ் இம்ப்புருவாகும்)

4. இரு கைகளால் கண்களை முடி 5 நிமிடம் ஓய்வு கொடுக்க வேண்டும்.

5. ஒரு ரப்பர் பந்து எடுத்து அதை இடது கைகளால் தரையில் அடித்து எழும்பி வரும் போது வலது கையால் பிடிக்க வேண்டும். (40 முறை) பந்து “U” போல போய் வருவதால் அதை “U” என்பார்கள் அதே போல் இடது கையில் இருந்து புருவத்துக்கு நேராக போட்டு வலது கையால் பிடிக்க வேண்டும் அது “n” போல இருக்கும் (40 முறை) (இதனால் கண் முழி அல்லது கோளத்தை இணைத்துள்ள ஆறு தசைகளும் பலப்படும்.

6. அதன் பிறகு Snell Chart எனப்படும் கண் மருத்துவர் வைத்திருக்கும் தூர பார்வைக்கான சார்ட் சுவரில் மாட்டபட்டு இருக்கும் அதே சார்டை கையில் வைத்து கொண்டு சரியாக தெரியவில்லை என்றால் கையில் உள்ள சார்டை பார்த்து விட்டு மீண்டும் சுவரில் உள்ள சார்டை பார்த்தால் நன்றாக தெரியும்.( அதாவது ஓளி கண்களின் வழியே விழிதிரையில் பட்டு சில வேதியல் பொருள்கள் உருவாகி அதுவே மின்சாரமாகி கண் நரம்பு வழியே மூளைக்கு செல்கிறது மூளை அந்த மின்சாரத்தை மொழி பெயர்த்து உருவமாக காட்டுகிறது. அதனால் மின்சாரம் குறைவாக வந்தாலும் இதுதான் இந்த குறைந்த மின்சாரத்தின் மொழி பெயர்ப்புகான உருவம் என்று மூளைக்கு உணர்த்தும் பயிற்சிதான் இது.)

7. பின் ஹோல் கண்ணாடி அணிந்து குறைந்த்து ½ நேரம் டிவி அல்லது கணணியில் வேலை செய்ய வேண்டும்.

8. மேலும் உள்ள பயிற்சிகளை சொல்லால் விளக்க இயலாது. 100 க்கும் மேற்ப்பட்ட பயிற்சிகள் உள்ளது அவர் அவர் குறைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும்.

9. இதற்கு எதும் கட்டணம் கிடையாது- அன்பளிப்பு ஏற்றுக்கொள்வார்கள்.

10. குறைந்தது ஒரு வாரம் அல்லது இரு வாரங்கள்தான்.

11. காலை 8-11 மாலை 3-5 இரு வேளையும் பயிற்சிக்கு போகவேண்டும்.

உணவு குறிப்புகள்:

1. மீன்கள் அதிலும் குறிப்பாக சூரைமீன்(Tuna), காணங்கழுதை மீன் அல்லது அயிலா(Mackerel), கவலை மீன்(Sardine), சுறா மீன் (Cod) இதில் மட்டும்தான் Omega-6 என்ற மூலகூறு இருக்கிறது மற்றபடி Omega-3 சைவ உணவில் கிடைக்கும், இது இதயநோய்க்கும் மிகவும் நல்லது(an excellent source of DHA, which provides structural support to cell membranes, and is recommended for dry eyes, treatment for macular degeneration, and sight preservation.)

2. பாலக்கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி கீரைகள் (are rich in carotenoids, especially lutein and zeaxathin. Lutein, a yellow pigment, protects the macula from sun damage and from blue light.)

3. நாட்டு கோழி முட்டைகள் (are rich in cysteine, sulfur, lecithin, amino acids and lutein. Sulfur-containing compounds protect the lens of the eye from cataract formation.)

4. இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் (are also rich in sulfur, which is necessary for the production of glutathione, an important antioxidant for the lens of the eye, and the whole body.)

5. சோயா (Low in fat, rich in protein, soy has become a staple in vegetarian diets. Soy contains essential fatty acids, phytoestrogens, vitamin E and natural anti-inflammatory agents.)

6. சிசனல் பழங்கள் (contain vitamin A, C, and E and Beta-carotene. The yellow vegetables, such as carrots and squash, are important for daytime vision.)

7. புளுபெரி, கருப்பு பெரி (contain anthocyanins, which improve night vision. A cup full of blueberries, huckleberry jam, or a 100 mg bilberry supplement should improve dark adaptation within 30 minutes.)

8. முந்திரி, பாதாம்,( are high in the beneficial Omega-3 fatty acids, which help lower cholesterol and stabilize cell membranes.)

9. வெர்ஜின் எண்ணை (are high in the beneficial Omega-3 fatty acids, which help lower cholesterol and stabilize cell membranes.)
இது போதுமா இன்னும் கண்களை பற்றி வேறு கேள்விகள் இருந்தால் கேட்கவும் பதில் அளிக்கிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திரு ஹைஸ் அவர்கள்,

கண்கள் பராமரிப்பு பற்றி விளக்கமாக கூரியதிற்கு மிகவும் நன்றி. அட்லீஸ்ட் இந்த உணவுகளை எங்களுடைய குழைந்தைக்காவுது கொடுத்து கண்ணாடி தவிர்க்க பார்க்கிறேன். நாங்கள் இரண்டு பெரும் 6 வது வகுப்பு முதல் கண்ணாடி அணிந்து வருகிறோம்.

மிகவும் நன்றி
BE HAPPY ALWAYS

மேலும் சில பதிவுகள்