வெஜ் உருண்டை மஞ்சூரியன் (வேக வைத்தல்)

தேதி: May 21, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

காலிஃப்ளவர் துருவியது - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
கேரட் துருவல் - 1/4 கப்
கார்ன்ஃப்ளார் மாவு - 2 (1+1) டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் - 5
இஞ்சி - 1 துண்டு
பெரிய வெங்காயம் - 1
பச்சை குடைமிளகாய் - 1
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
வெங்காயத்தாள் - 2 கீற்று
கொத்தமல்லித்தழை - 2 கீற்று
எண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். காலிஃப்ளவர் துருவல் மற்றும் கேரட் துருவல், 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு, 1/2 டீஸ்பூன் உப்பும் கலந்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பூண்டு, இஞ்சி, வெங்காயம், இவற்றை மிகவும் பொடி கட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும். குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும். வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை இவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும், அடுத்து குடைமிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கிவிட்டு, அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ் அனைத்தையும் போட்டு கிளறவும்.
அடுத்து கார்ன்ஃப்ளார் மாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, வேகவைத்துள்ள உருண்டைகளை இதில் சேர்த்து பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் மற்றும் மல்லிக்கீரையை இதில் சேர்க்கவும்.
2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும். இறக்கும் முன்பு வினிகரைச்சேர்த்து புரட்டிவிட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்