ஈஸி பாசந்தி

தேதி: May 22, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பால் - 1/2 லிட்டர்
சீனி - 1 1/2 கப்
குங்குமப்பூ - சிறிது
பாதாம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
நெய் - 2 டீஸ்பூன்


 

முதலில் பாதாம், பிஸ்தா இவற்றை தண்ணீர் ஊறவைத்து தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்
ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
பால் நன்றாக கொதித்து ஆடைகள் வரும் போது அந்த பாலாடைகளை தனியே எடுத்து வைக்கவும்.
பாலில் தண்ணீர் சிறிது வற்றி வரும் நிலையில் பாதி அளவு பாலினை எடுத்து தனியே வைத்து விட்டு மீதியிருக்கும் பாலில் சீனியைக்கொட்டி கிளறிவிடவும். அடுத்து எடுத்துவைத்திருக்கும் ஆடையினை அதில் போடவும்
1 நிமிடம் கழித்து குங்குமப்பூ போடவும் அடுத்து பாதாமையும், பிஸ்தாவையும், ஏலக்காயை தட்டி நெய்யில் வறுத்து இதில் சேர்க்கவும் மற்றும் ஒரு நிமிடம் கழித்து எடுத்துவைத்திருக்கும் பாலையும் அதில் ஊற்றவும்.
தற்போது பால் கெட்டியாகவும் இல்லாமல் நீராகவும் இல்லாமல் கூழ்போல பக்குவத்தில் இருக்கும். இதனை ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து கூல்லாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேத்து ட்ரை பண்ணே சூப்பரா இருக்கு வாழ்த்துகள் பா என்னவர்ட பாராட்டும் வாங்கிட்டேன் நன்றி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்