சந்தேகங்கள்

மக்களே உங்களுக்கு தோன்றும் தனிப்பட்ட சந்தேகங்களை இங்கே வந்து கேளுங்கோ.வெண்டிக்காயை எப்பிடி ஒடிக்கிறது.ஆப்பத்தை எப்பிடி புளிக்கவைக்கிறது.சட்னியை எப்பிடி அரைக்கிறது?துணியை எப்பிடி துவைக்கிறது ?இன்னும் பலவிதமான சந்தேகங்களை இங்கேயே கேக்கலாம்.எதுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவொரு திரட்?

அதிரா எனக்கு ஒரு சந்தேகம்.அறுசுவையில் உங்கட குறிப்பு நிறைய இருக்கிறமாதிரி இருக்கு.வடிவான படங்களோட ஆனா கூட்டாஞ்சோறில தேடினா 6 தானே வருது.நேற்று கணவாய் செய்தேன்.பின்னூட்டம் குடுக்கப்போனால் கணவாயை காணேலயே?
என்ன காரணம்?
அடுத்து அதிரா எனக்கு உங்கட குறிப்பெல்லாம் பிடிச்சிருக்கு.எல்லாம் நல்லா வருது பிழைக்கிறேல.[ஐஸ்]
அதனால உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பால் றொட்டி[பொங்கு றொட்டி]அரியதரம் ரெண்டும் போடுறீங்களோ? அவசரமில்ல.

சுரேஜினி

ஒரு முறை எனக்கும் அதிராவின் ஒரு குறிப்பை தேடிய போது இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது... மற்றவர்களின் குறிப்புகளை செய்து பார்க்கும் போது அதனை அழகாக ஸ்டெப் பை ஸ்டெப் ஆக புகைப்படம் எடுத்து அனுப்புவதை அதிரா வழக்கமாக செய்து வருகிறார்... (இவ்வளவு பொறுமையாக இதனை செய்து வருவதாலேயே அவருக்கு "யாரும் சமைக்கலாம்" ராணி பட்டம் வழங்குகிறோம்...). இவற்றை அவருடைய பெயரின் கீழே கூட்டாஞ்சோற்றில் தேடினால் கிடைக்காது. எனவே அந்த குறிப்புகள் பெயர் கொண்டு நீங்கள் யாரும் சமைக்கலாம் பகுதியில் போய் தேடி பார்க்கலாம்...

//வெண்டிக்காயை எப்பிடி ஒடிக்கிறது.ஆப்பத்தை எப்பிடி புளிக்கவைக்கிறது.சட்னியை எப்பிடி அரைக்கிறது?துணியை எப்பிடி துவைக்கிறது ?//

அது சரி, உங்க சந்தேகங்கள் எல்லாம் இப்படி ரொம்ப பலமா இருக்கே?? எங்களை போன்ற எளியவர்களால் பதில் கூற இயலவில்லை... :-) மன்னிச்சுக்கோங்கோ

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சுரேஜினி, சந்தனா
சுரேஜினி, உங்கள் கேள்விக்கான பதில் ஒரு திரெட்டில் இருக்கிறது, அதை தேடினேன் கிடைக்கவில்லை, கிடைத்தால் அனுப்புகிறேன்.

நான் கூட்டாஞ்சோறில் குறிப்புக்கள் கொடுக்க ஆரம்பித்தேன், அப்போ அட்மின், ஒரு உரையாடலில் சொன்னார், காலப்போக்கில் கூட்டாஞ்சோறுக்கு மக்களின் வரவேற்பு குறைந்துவிடும், படங்களோடு போடுவதையே அதிகம் விரும்புவார்கள் எனவே படங்களோடு சேர்த்துக் குறிப்புக்களை அதிகம் அனுப்பினால் நல்லதென்பதுபோல்(அத் திரெட்டைத்தான் தேடினேன் கிடைக்கவில்லை.

அத்தோடு நான் கூட்டாஞ்சோறுக்குப் போடும் குறிப்புக்களைப் படத்தோடு போடுவதென முடிவுசெய்தேன். அன்றிலிருந்து அப்படித்தான் செய்கிறேன். கணவாய்ப் பிரட்டல் யாரும் சமைக்கலாமில் உள்ளது.

நீங்களிருவரும் வைக்கும் ஐஸில், எனக்கு தடிமனே வந்துவிடும்போலிருக்கு:) எல்லாம் குருமாற்றத்தின் பலன் தான்:). சுரேஜினி எனக்கு பலகாரம் எல்லாம் சரியாக வரவே வராது, இதுவரை முயற்சித்ததுமில்லை. வடை, முறுக்கு, கேசரி மட்டும் அடிக்கடி செய்வேன் நன்றாகவும் வரும். கொழுக்கட்டை செய்து அனுப்ப யோசித்தேன்(அம்மாவைக் கேட்டுக்கேட்டு), அதற்குள் யாரோ முன்பு அனுப்பியிருப்பதைப் பார்த்தேன், விட்டுவிட்டேன். ஏதாவது பலகாரம் செய்யக்கூடியதாக வந்தால் செய்து போடுகிறேன்.

உங்களிருவரதும் வரவேற்புக்கு என் நன்றிகள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிருதுவா இட்லி சுடுவது எப்படி? இந்த கேள்வி கேக்க எனக்கே கொஞ்சம் கஷ்ட்டமா தான் இருக்கு.(திரும்ப திரும்ப எத்தனை முறை தான் இதற்கு பதில் சொல்வதுனு அனுபவசாலிங்க கோவிக்காதீங்க)இங்கே நிறைய பேரு இட்லி மிருதுவா எப்படி சுடுவதுனு கேட்டு நிறைய பேரு அதுக்கு பதிலும் குடுத்திருக்கீங்க.எனக்கு அறுசுவை உதவியால் மிருதுவா இட்லி சுட முடிந்தது.குழந்தை பிறந்ததில் ஒரு 6-7 மாதம் சமைப்பதில் இருந்து விடுமுறை. அப்புறம் குழந்தைய தனியா பாத்துகிறேனு என் கணவர் மாவு ஆட்ட வேண்டாம்னு வாங்கி தந்தார்.அது எனக்கு பிடிக்காதனால நானே ஆட்டிறேனு சொல்லிட்டேன்.இப்ப தான் பிரச்சனை.சில சமயம் நல்லா வருது.சில சமயம் மிருதுவா வர மாட்டேங்குது.ஒரே மாதிரி தான் ஆட்டறேன்.இங்க குடுத்துள்ள நிறைய டிப்ஸ் முயற்சி பண்ணி பார்த்துட்டேன்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு தோழிகளுக்கு,

இன்று பிரியானி செய்யலாம் என்று இருக்கிரென்...
ஆனால் ஒரு சந்தேகம்?
தம் பிரியானியில் பாசுமதி அரிசி நன்றாக இருக்குமா இல்லை சீரக சம்பா நன்றாக இருக்குமா?
சந்தேகத்தை தீர்க்கவும்...

என் சமீபத்திய பதில் 3 நாட்களுக்கு முன் போட்டேனே,பார்த்தீங்களா?பாருங்கள்.
சில வேளை மாவு ஒரு சமயம் சீக்கிரம் புளித்துவிடும்.
சில னேரம் time எடுக்கும்.எனவே correcta 8 hrs ஆனவுடன் எடுத்து வைக்காமல்,நன்குபொங்கி வந்தவுடன்...எடுத்து வைக்கவும்.சாரிப்பா,நீங்கள் நான் சொன்ன ,சொல்கிற டிப்ஸ்ல் எல்லாம் ஏற்கனவே பின்பற்றுகிறீர்களா இல்லையா என தெரியவில்லை......மேலும் சந்தேகங்கள் இருந்தால் எழுதவும்
அன்புடன்
elu
change is the unchanging thing in the changing world

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி இளவரசி. நீங்க சொன்ன முறையில் மாவு ஆட்டினேன்.இட்லி நன்றாக மிருதுவாக வந்தது.ஒரு சின்ன மாற்றம் கைப்பிடி அளவு அவல் சேர்த்து ஆட்டினேன்.நன்றி

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

thanks..பின்னூட்டத்திற்கு..இப்போது
தன் கூட்டாஞ்ச்சோறில் ஒரு ரெசிப்பி
போட்டேன்.ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும்
அன்புடன்
elu
change is the unchanging thing in the changing world

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு தோழியரே,

ரைஸ் குக்கரில் பிரியாணி எப்படி செய்வது? நான் வைத்திருக்கும் ரைஸ் குக்கர் பாத்திரம் நான்ஸ்டிக், அதற்கு தகுந்தபடி சொல்லுங்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அன்பு தோழிகளே,

பனங்கற்கண்டின் பயன்களை யாராவது சொல்லுங்களேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்