பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க ஊசி மருந்து போடலாமா?

நண்பிகளே, எனக்கு இன்னும் பிரசவத்திற்கு 6 வாரங்களே உள்ளது. எனது டொக்டர் எனக்கு நோர்மல் டெலிவரி என்றுதான் கூறியுள்ளார். நான் பிரசவத்தின் போது வலி தெரியாமல் இருக்க ஊசி மருந்து போடலாமா? இதனால் பின்பு முதுகு வலி போன்ர பிரச்சனைகள் ஏதாவது ஏற்படுமா?, அவ்வாறு வலியை குறைப்பதற்கு நான் இப்போதிருந்து ஏதாவது செய்ய முடியுமா என்று தயவு செய்து பதில் தாருங்கள்.

எல்லா வகையான obstetric interventions சில சலுகைகளும் உண்டு சில இடர்களும் உண்டு. சில வகையான விளைவுகள் எல்லாம் அபூரவாகவும் சில சகஜமாவும் உண்டாகலாம். இதை பற்றி நன்கு அறிந்து அர்ரைது இதன் நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்று பார்த்து நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

கீழே risks/side effects :

இரத்த அழுத்தம் (Hypotension - Drop in blood pressure)
Urinary tract infection
உடல் நடுக்கம்
முகம், கழுத்து மற்றும் தொண்டையில் அரிப்பு
வாந்தி, தலைசுற்றல்
சில நேரங்களில் பிரசவத்திற்கு பின்பும் குறுக்கு வலிக்கும்
ஜுரம்

நீங்கள் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்து முடிவு பண்ணவும்.

மேலும் விவரங்கள் தெரிய இந்த லிங்க் பார்க்கவும்
http://www.kimjames.net/epidural_risks_and_side_effects.html

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ப்ரசவத்தின்பொழுது போடப்படும் வலிதெரியாமல் இருக்கும் ஊசிக்கு பின்னால் சைட் எஃபெக்ட் வரும் வாய்ப்புண்டு.
ஆனால் ரொம்ப பயந்த சுபாவம் அல்லது வலியை தாங்கவே மாட்டேன் என்று நினைப்பவர்கள் போட்டுக் கொள்வதே பெஸ்ட்
ப்ரசவவலி தெரியாமல் இருக்க வழியெல்லாம் ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன் ..ஆனால் மனதில் வலிக்கும் வலிக்கும் என்று நினைத்தால் தான் ரொம்வ வலிக்கும்.
உங்கள் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுபதை பற்றி மட்டும் மனதில் கொண்டு வலிக்காது என்று நினைத்து பாருங்கள் வலி குறையும்
மற்றபடி ப்ரசவத்தை எளிமையாக்க பலபல உடற்பயிற்சிகள் உண்டு அதனை செய்தால் பலன் தெரியும் என்று கேட்டிருக்கிறேன்.

திருமதி.மூர்த்தி, தளிகா உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி

திருமதி தாளிக்க அவர்களுக்கு

நான் தற்பொழுது 7 வது மாத துவக்கத்தில் உள்ளேன். இப்பொழுது இருந்தே செய்ய ஏதேனும் எளிமையான உடற்பயிற்சி உள்ளதா?? தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும்.

Pavithra babu

அவுங்க பேர் தளிகா.நீங்க உங்க டாக்டர் கிட்ட கின்சல்ட் பண்ணாம எதுவும் புது உடற்பயிற்ச்சி முயற்சிக்க வேண்டாம் னு தோணுது எனக்கு..மற்றபடி அனுபவசாலிகள் அதிக பேர் இருக்காங்க அறுசுவைல அவுங்க உதவுவாங்க உங்களுக்கு...உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

hai pavi my name s also pavithra happy to talk to u.iam a physiotherapist.u can do simple pelvic exercises before delivery.u go google website and search for prenatel exercisesand u ll get more.

வாழ்த்துக்கள் பவித்ரா....

நடைப்பயிற்சி தான் எல்லாத்தையும் விட சிறந்தது.......எந்த வித பின் விளைவுகளும் இல்லை. வேக வேகமாக வேண்டாம் பொறுமையாக உங்களால் எவ்ளோ வேகமாக நடக்க முடியுமோ அவ்ளோ போதும். அப்படி இல்லை எனில் நீங்கள் உங்கள் மருத்துவரை ஆலோசித்து விட்டு யோகா (prenatal yoga) செய்யலாம். யோகா முறையாக கற்றவரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். யோகாவில் உள்ள ப்ரனயமா (pranayama) என்னும் பயிற்சி உங்களுக்கு பிரசவத்தின் போது மிகவும் உதவியாக இருக்கும்.

kegel மறக்காமல் பண்ணவும். இதை குழந்தை பிறந்த பின்பும் தொடரவேண்டும்.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்புள்ள தோழி அம்முவிற்கு

நன்றி, அச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்.

பவித்ரா மற்றும் லாவண்யா உங்கள் இருவருக்கும் "ஸ்பெஷல்" நன்றிகள் பல.

Pavithra babu

அன்புள்ள தோழி அம்முவிற்கு

நன்றி, அச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்.

பவித்ரா மற்றும் லாவண்யா உங்கள் இருவருக்கும் "ஸ்பெஷல்" நன்றிகள் பல.

Pavithra babu

மேலும் சில பதிவுகள்