சிக்கன் சாட்டே

தேதி: May 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சிக்கன் தசைப்பகுதி - 500 கிராம்
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
எலுமிச்சம் புளி - 3 மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
சாட்டே ஈர்க்குகள்


 

சிக்கனைச் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு, தயிர், எலுமிச்சை புளி சேர்த்து பிரட்டி 4 அல்லது 5 மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊற விடவும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து சாட்டை ஈர்க்குகளில் குத்தவும்.
விரும்பினால் செர்ரி, தக்காளி, வெங்காயம் இவற்றை சிக்கன் துண்டுகளுக்கு இடையில் சேர்த்து குத்தலாம்.
குத்திய ஈர்க்குகளை அவண் ட்ரேயில், நெற் தட்டில் அடுக்கி, க்ரில் பண்ணவும். திருப்பி திருப்பி விட்டு க்ரில் செய்து ப்ரவுன் நிறமானதும் வெளியே எடுத்து விடவும். சிக்கனை க்ரில் செய்ய 350 F ல் வைத்து 25 - 35 நிமிடங்கள் தேவைப்படும். க்ரில் இல்லாதவர்கள் அவணிலும் வைத்து எடுக்கலாம்.
சுவையான சிக்கன் சாட்டே (chicken satay) தயார். இதன் மேல் பிரவுன் சாஸ் அல்லது தக்காளி சாஸ் ஊற்றிச் சாப்பிடவும். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மரக்கறி,மீன்,ஆகா இப்ப சிக்கன் ரெசிப்பியா?சிக்கன் சாட்டே பெயர் கூட புதுமை.எளிமையாக யாரும் செய்யக்கூடிய வகையில் உள்ளது.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் அதிரா மேடம்
சமருக்கு நல்ல ரேசப்பி குடுத்திருக்கிரிங்கள் உங்களுக்கு தெரியாத சமையல் இல்லை போலிருக்குது விதவிதமாய்ச்செய்கிரிர்கள் உங்களுடைய சமையல் கலைகளை என்களுழுடன் பகித்துகிறத்துக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஆசியா, சுகா
மிக்க நன்றி. இது இங்கே சூப்பர்மார்கட்டில் எப்பவும் கிடைக்கும். சாட்டே(satay) என்பது ஆங்கிலேயர் வைத்த பெயரென நினைக்கிறேன். சிறிய ஈர்க்குகளிலும் கிடைக்கும், இப்படிப் பெரிய ஈர்க்குகளிலும் கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதெ அவந்தான் என்னோடதும் பழையதை தூக்க் போட்டுட்டு இப்பதான் வாங்கினேன் ஆனா இதன் உள்ளே தண்ணீர் கொஞ்சம் ஊற்ற சொன்னாங்க அதுக்குன்னு அலுமினிய பவுல் ஒன்னு உள்ளே இருக்கு இதே போல் உங்கலோடதிலும் இருக்கா எதற்க்காக நீர் விடனும் அவர்ட்ட கேட்க மறந்துட்டேன் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்..ஊரில் விட்டுட்டு வந்துட்டேன் அடுத்தமாசம் ரிட்டன் ஊர் போகனும் ஜஸ்ட் 3 டேய் அப்ப கையோட எடுத்துட்டு வந்து உங்க ரெஸிபி செய்து சொல்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா...
என்னிடம் இருப்பது குக்கரோடு சேர்ந்து அவணும் கிரிலும் இருக்கு. தனியாக வாங்கும் சில அவண்களுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டுமோ தெரியாது... சில அயன் பொக்ஸ் மாதிரி. இப்படியெல்லாம் செய்துபார்க்க உங்களைக் குட்டிமகன் விடுவாரோ?.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்ப கை வேலைக்கு ஆள் இருக்கு ஊரில் இருந்து அளைத்து வந்து இருக்கேன்..சமைக்க்க இல்லை கண்ஸீவானதில் இருந்தே சமைக்க ஆள்வைத்து வெறுத்தே விட்டேன் என்ன இருந்தாலும் நாம் கையால்சமைத்தது போல ஆகுமா இன்னும் சொல்லனும்னாசுத்தம் இது எல்லாம் அவங்களிடமெதிர்பார்பது கடினம்..என்ன செய்ய தலைஎழுத்தேன்னு இருந்தேன்..இப்ப வீட்டை பெறுக்க,ப்பாத்திரம் கழுகனு ஆள் இஉர்க்கு அதனால் செய்யலாம் இவரை தூங்க வைத்தூட்டான் அதும் முடியும்..விடிவதற்க்குள் சமைத்தால்தான் உண்டு இல்லைனா அன்று ஹோட்டல்தான்முழிச்சா போச்சு..என்னத்த சொல பாருங்க உங்களுக்கு பதிவு போட்டு இஉர்ந்தேன் ஒன் பாத்ரூம் லேப்டாப்ல அடிச்ச்சுட்டான் அய்யோ ஓடிகறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு