குழந்தைக்கு என்ன எண்ணெய் தேய்க்கலாம்???

என் மகளுக்கு 15 மாதம் முடிவடைந்துள்ளது. இந்தியாவில் தான் பிறந்தாள். இப்பொழுது அமெரிக்காவில் உள்ளோம். அவள் பிறந்ததும் தினம் ஜான்சன்ஸ் பேபி ஆயில் தான் உபயோகித்தோம். எங்கு வந்த பிறகும் அதையே உபயோகபடுத்தினோம். ஆனால் rashes வந்து விட்டது. மருத்துவர் அவீனோ பொருட்க்களை உபயோகப்படுத்த சொன்னார்கள். குழந்தைக்கு என்ன எண்ணெய் தடவலாம்??? நான் இப்பொழுது தேங்காய் எண்ணெய் மற்றும் அவ்வபோது நல்லெண்ணெய் தடவுகிறேன்.

ஒரு நாள் ஸ்விம்மிங் பூல் சென்றாள். கேட்கவே வேண்டாம் அவள் கருத்து போய் திருப்பி வந்தாள். பின்பு மறு நாள் அவளுக்கு sunscreen lotion தடவி அனுப்பினேன். ஒரு பயனும் இல்லை. தண்ணீரில் உள்ள clorin கருக்க வைக்கிறது. அதனால் எபோழுதெல்லாம் அனுப்புவதே இல்லை. தண்ணீரில் செல்வதற்கு முன்பு எந்த வகையான லோஷுன் தடவ வேண்டும்??

குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் moisturiser தடவலாமா அல்லது வீட்டிலும் sunscreen lotion தான் தடவ வேண்டுமா???

Hi
You can use olive oil for your kid.that should give your kid skin color.but you should use that oil while she will get fair.After that you should not use it.Becs it will give the anti reaction.
Regards
Udhaya

Regards
Udhaya

ஆலிவ் ஆயில் ட்ரை பண்றேன். ரிசல்ட்ஸ் தெரிந்தவுடன் நிறுத்திவிடுவேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் திருமதி மூர்த்தி
என்னுடைய அனுவத்தில் ஆல்மன்ட் ஆயிலுக்கு தான் வோட்டு...2 வாரம் போடுங்கள் குழந்தையின் முகத்தில் மினுமினுப்பை நீங்களே உணருவீர்கள்.
அதிகம் கூட வேண்டாம் லேசா தேய்த்து விட்டு ஒரு 20 நிமிஷம் போதும் குளிக்க வைத்து விடலாம்...ஆமாம் அவீனோ ப்ரோடக்ட்ஸ் தான் சிறந்தது அல்லது செபாமெட்.
ஸ்விம்மிங் பூளில் குழந்தையை விடாதீர்கள்..தண்ணீரிலுள்ள க்லோரின் குழந்தைக்கு கடுமையாக உடலுக்கு கேடுவிளைவிக்குமென்று சென்ற வாரம் படித்தேன்.

நான் குழந்தைக்கு எல்லாமே ஜான்சன் கம்பனிதான் உபயோகிப்பேன்...ஆனா இப்ப என் கஜின் சொல்லுறா ஜான்சனில் இப்ப கெமிக்கல் சேகிறாங்களாம் எனக்கு இப்ப என்னத்த உபயோகிக்கனே தெரியல யாருக்காவது தெரியுமா?அவ சொன்னது உண்மைதானா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்கள் குழந்தைக்கு ஆலிவ் ஆயில் பயன் படுத்துங்கள்.ஆலிவ் ஆயில் 70 நோய்களை குணமாக்கும் என கண்டரிய பட்டுள்ளது.ஆலிவ் ஆயில் குழிப்பதர்க்கு முன் உடலில் நன்கு தேய்த்துவிட்டு 20 நிமிடம் கழித்து குழித்தால் உடல் குளுர்ச்சியாகவும் இருக்கும் சரும நோய்கள் மறைந்து விடும்.சருமம் மிகவும் பளளப்புடன் மிளிரும்.தொடர்ந்து உபயோகித்தால் சருமம் நல்ல சிகப்பழகு பெரும்.இது பெரியவர்களுக்கும் பொருந்தும்முகத்தில் கரும்ப்புள்ளிகள்,சரும நோய்கள் அனைத்தும் மறையும்.தொழுநோய்க்கு ஆலிவ் ஆயில் மருந்தாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..

ummu aaliya

நன்றி தளிகா, உம்மு ஆலியா.....

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி......

மர்ழியாநூஹு.....
ஜான்சென்ஸ் ப்ரோடச்டில் கெமிக்கல்ஸ் இருக்க இல்லையா என்று சரியாக தெரியவில்லை....நிறைய குழந்தைகளுக்கு அதை உபயோகித்து அலேர்ஜி ஆகியுள்ளது. முகத்தில் ரஷேஸ், வாய் சுற்றி பொறி பொறியாக வந்துள்ளது.

லாவண்யா

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குழந்தைகளை ஒரேடியாக ஸ்விம்மிங்கிற்கு போவதை நிறுத்த வேண்டாம். சின்ன வயதிலிருந்தே குழந்தைகளை தண்ணீரில் பழக்கப் படுத்தினால்தான் ஸ்விம்மிங் கற்று கொள்வார்கள். (பாதுகாப்பு காரணங்களிற்காக குழந்தைகள் நீச்சல் அவசியம் கற்று கொள்ள வேண்டும்). பெரியவர்கள் ஆன பிறகு திடீரென்று நீச்சல் குளத்தில் இறங்கவே மாட்டார்கள் (என் குழந்தைகளின் அனுபவம்) இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

வானதி எனக்கும் ஆசை என் மகளாவது நீச்சல் பழக வேண்டுமென்று..நானும் ட்ரை பன்னிவிட்டேன் பயமா இருக்கு.ஆனால் என்னை கேட்டால் அங்குள்ள பீச்சில் அல்லது நம்மூர் குளத்தில் நல்ல நீச்சல் கற்றுதரதெரிந்த பெரியவர்கள் பாதுகாப்பாக பழக்கி விடலாம்.கரையோரமாகவே
இங்கு என் நாத்தனார் பிள்ளைகள் அவர்களின் அப்பா தினசரி பீச்சுக்கு அழைத்து போய் 1 வாரத்தில் பழக்கி விட்டார்.ஆனால் நீச்சல் குளத்தில் தோல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக படித்தேன்.அதான் ஒரு பயம்
எல்லா ஸ்விம்மிங் பூளிலும் க்லோரின் இருக்குமா அல்லது அதில்லாத இடமும் உண்டா?நிச்சயம் எதாவது இருக்கனுமே?

தளிகா, வினீத் இவ்வளவு பெரியவனாகியும் சின்ன வயதில் பழகாததால் தண்ணீரை கண்டாலே ஓடுவான். ஆனால் விபாவை சின்ன வயதிலிருந்தே தண்ணீரில் பழக்கி இப்போ நன்றாக ஸ்விம் பண்ணுவாள்.

இந்த க்ளோரின் மேட்டரை என் வீட்டு Environmental expert -இடம் ஆலோசனை செய்ததில்:-) அவர் சொன்ன தகவல்கள்.

க்ளோரினால் ஏற்படும் ப்ரச்சனைகள் நாம் எவ்வளவு நேரம் குளத்தில் ஸ்விம் செய்கிறோமோ அதை பொருத்துதான் இருக்குமாம். நாம் ப்ரச்சனைகள் ஏற்படும் அளவிற்கு குளத்தில் இருக்கப் போவதில்லை என்றார். மேலும் அந்த நீரை நிறைய குடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். குளத்திற்கு போகுமுன் குளித்து விட்டு செல்வது நல்லது.

மற்றபடி, அதனால் ஏற்படும் risk factors percentage (like one in one million) மிகவும் கம்மியாகத்தான் இருக்குமாம். க்ளோரினுக்கு மாற்றாக இன்னும் அந்த அளவு ப்ரபலம் ஆகவில்லையாம். ஏனெனில் அதை இன்ஸ்டால் பண்ண செலவு அதிகம் ஆகும் என்பதால்.

இன்டர்னெட்டில் பார்த்ததில் நல்ல வென்டிலேஷன் இல்லாத இன்டூர் ஸ்விம்மிங்க் பூலில்தான் இப் ப்ரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

என்னைப் பொருத்தவரை எப்படி Side Effects-ற்கு பயந்து வேக்சின் போடாமல் குழந்தைகளுக்கு இருக்க முடியும், அது போல்தான் இதுவும்.

அப்படியா வானதி...பிள்ளைகளை எப்பவும் நீச்சல்,தற்காப்புக் கலை எதுவாது சிறிய அளவிலாவது கற்றுக் கொடுப்பது நல்ல விஷயம்...எனக்கும் என் கணவருக்கும் கூட தண்ணின்னா சரியான பயம்.
இந்த க்லோரினுக்கு பயந்தே சில சான்ஸ் கிடைத்தும் மகளை விடவில்லை..இனி அதை யோசிக்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்